நடிகர் ரஜினி உடல் பரிசோதனைக்காக இன்றிரவு அமெரிக்கா செல்கிறார். நடிகர் ரஜினி உடன் அவரது இல்லத்தில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி சந்தித்துப் பேசினார். இன்று இரவு ரஜினி அமெரிக்கா உள்ள செல்லவுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
ரஜினி காந்த் ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்காவில் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு உடல் பரிசோதனைக்காக இன்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். அங்கு அவர் இரண்டு வாரங்கள் தங்கியிருப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இமய மலைக்கு பயணம் மேற்கொண்டார். ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு 10 நாட்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட ரஜினி காந்த், ஆன்மிகப் பயணம் முடிந்து, அங்கிருந்தே அமெரிக்கா செல்வார் என கூறப்பட்ட நிலையில், அவர் ஆன்மிகப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.
திரும்பிய உடனே ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் ஈடுபட்டார். அது முடிந்த நிலையில், தற்போது அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார் ரஜினி.