கலிகாலம் டா சாமி.. பிள்ளைகளா படிக்க விட்டா இதுங்க பண்ற கூத்த பாருங்க..!

அடடே... அப்படியா? கல்வி பொது தகவல்கள்
school - 2026

பள்ளி மாணவர்களின் வீடியோ குறித்த விசாரணை நடந்து வருகிது

திருநெல்வேலி ஸ்கூல் யூனிபார்மில் உள்ளனர் 2 பேரும் ஒரு செயினை எடுத்து அந்த மாணவியின் கழுத்தில் மாணவன் தாலி கட்டுகிறார்… அதை மாணவி வெட்கத்துடன் தலைகுனிந்து வாங்கி கொள்கிறார்.. இப்படி ஒரு வீடியோ நடித்து.. வெளியாகி தமிழக மக்களுக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

செல்போன் வந்தாலும் வந்தது, அதனால் ஏற்படும் கலாச்சார சீரழிவுகளை சொல்ல முடிவதில்லை.. எத்தனையோ நன்மைகள் இருந்தாலும், அந்த செல்போனை தவறாகவே பெரும்பாலான இளைஞர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இது வன்முறை முதல் கலாச்சார நாசம் வரை வந்து நிற்கிறது. சில தினங்களாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. அதில் 2 பேர் உள்ளனர்.. ஒரு மாணவி, ஒரு மாணவன்.. இருவருமே ஸ்கூல் யூனிபார்மில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம், களக்காடு பகுதியை சேர்ந்தவர்கள்… ஒரு கோயிலுக்கு வெளியே நின்று கொண்டு மாணவிக்கு மாணவன் கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து ஒரு செயினை அணிவிக்கிறார் அந்த மாணவியும் அந்த செயினை தாலி போல நினைத்து மணப்பெண்ணை போல வெட்கி தலைகுனிந்து ஏற்று கொள்கிறார். இவர்களுடன் பிற மாணவ – மாணவிகளும் உள்ளனர்.

இசையாக ஒரு பாட்டும் ஓடுகிறது. எதற்காக இந்த தாலி கட்டும் சீன்? எதற்காக பின்னணி சினிமா பாட்டு? யார் செய்த வேலை இது? எடிட் செய்து வீடியோ வெளியிட வேண்டிய அவசியம் என்ன? இந்த மாணவ, மாணவிகள் எந்த ஸ்கூலில் படிக்கிறார்கள், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற பல சந்தேகங்கள் எழுகின்றன. இந்த வீடியோ தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணையை கையில் எடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.