அட்டகாசமா அசத்துங்க! அசாரி பன்னீர் புலாவ்!

Asari-Panneer-Pulao
Asari-Panneer-Pulao

அசாரி பன்னீர் புலாவ்

தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி – 2 கப்
பச்சை பட்டாணி. (வேக வைத்தது) – 2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ – 2 சிட்டிகை
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பட்டை – 1
கருஞ்சீரகம் – 1/2 டீஸ்பூன்
பால் – 1 டீஸ்பூன்
பிரியாணி இலை – 1
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அசாரிக்கு…
பன்னீர் – 2 கப்
தயிர் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நன்கு கழுவி, அதை குக்கரில் போட்டு, தண்ணீர், உப்பு மற்றும் ஒரு துளி எண்ணெய் சேர்த்து, 3 விசில் விட்டு இறக்கி, பின் அதனை குளிர வைக்க வேண்டும்.

பின் ஒரு பௌலில் பால் மற்றும் குங்குமப்பூவை சேர்த்து, ஊற வைத்து, பின் சாதத்துடன் நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் மிக்ஸியில் தயிர், பச்சை மிளகாய் பேஸ்ட், மஞ்சள் தூள், கடுகு, சோம்பு, கடுகு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு நைஸாக அடித்து கொள்ளவும்.

பிறகு அந்த பேஸ்ட்டை பன்னீர் துண்டுகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மீதமுள்ள பேஸ்ட்டை தனியாக வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

இப்போது ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கருஞ்சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள பேஸ்ட் மற்றும் வேக வைத்துள்ள பச்சை பட்டாணியை சேர்த்து சிறிது நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இப்போது அதில் சாதம் மற்றும் பொரித்து வைத்துள்ள பன்னீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து, சில நிமிடம் அடுப்பில் வைத்து கிளறி இறக்க வேண்டும். இப்போது சுவையான அசாரி பன்னீர் புலாவ் ரெடி இதனை விருப்பமான சைடு டிஷ் உடன் சேர்த்து சாப்பிடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories