navaya-reddy-1
navaya-reddy-1

தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் யரபாலம் கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நவ்யா என்பவருக்கும் சேசு ரெட்டி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடித்து 2 மாதங்களில் கொலை செய்யப்பட்டுள்ளார் நவ்யா.

இதுகுறித்து சேசு ரெட்டி கூறுகையில், தனது மனைவி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மூழ்கி வந்ததால் மனைவி மீது சந்தேகம் வந்த சேசு ரெட்டி, அவரை கொலை செய்யவும் திட்டமிட்டதாகவும், இதனையடுத்து இருவரும் விருந்து ஒன்றிற்கு செல்லலாம் என மனைவி நவ்யாவை அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சேசு ரெட்டியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஓராண்டாக 20 வயது இளம் பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருப்பதாகவும், குடும்பத்தார் நிர்பந்தம் காரணமாகவே திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமது காதல் விவகாரம் மனைவிக்கு தெரிய வந்ததால், அவர் காதலியை கைவிட கூறியதாகவும், ஆனால் காதலியை பிரிய முடியாததால் தமது காதலியுடன் இணைந்தே, புது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!
navya-1
navya-1

இதனையடுத்து போலீசார் அந்த இளம் பெண்ணை விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவரது செல்போனையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

ஆனால் போலீசார் விசாரணைக்கு பயந்து அந்த இளம் பெண் சம்பவத்தன்றே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஆரம்பத்தில் தனது மனைவிக்கு சமூகவலைத்தளங்களில் அதிக நாட்டம் உள்ளதே கொலைக்கு காரணம் என முதலில் கூறிய சேசு ரெட்டி, தற்போது அணைத்து உண்மையையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending