மதுரை வழி செல்லும் ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு..

images 43 - 2026

மதுரை வழியாக செல்லும் 6 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 15-ந் தேதி வரை ரத்துமதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் ஈரோடு வரை இயக்கப்படும். ஜம்மு காஷ்மீரில் இருந்து இன்று புறப்படும் வைஷ்ணவி தேவி எக்ஸ்பிரஸ் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும்.

மதுரை-திருமங்கலம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. எனவே அந்த வழியாக செல்லும் ரெயில்கள் போக்குவரத்தில் வருகிற 15-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக இன்று வெளியிட்டுள்ள மதுரை கோட்ட ரயில்வே அலுவலக செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

திருச்செந்தூர்-பாலக்காடு, மதுரை-ராமேசுவரம், மதுரை-திண்டுக்கல், நெல்லை-ஜாம் நகர், நெல்லை-காந்திதாம், நெல்லை-தாதர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் வருகிற 15-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. தேனியில் இருந்து இரவு 6.15 மணிக்கு புறப்பட்டு வரும் மதுரை பயணிகள் ரெயில், 15-ந் தேதி ரத்து செய்யப்படும். மதுரை-திருவனந்தபுரம் (அமிர்தா), மதுரை-கோவை, மதுரை-விழுப்புரம் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 15-ந் தேதி வரை திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

நாகர்கோவில்-கோவை, மதுரை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் விருதுநகரில் இருந்து இயக்கப்படும். மதுரை-எழும்பூர் (தேஜாஸ்) எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் வியாழன் தவிர மற்ற நாட்களில் திருச்சியில் இருந்து இயக்கப்படும். மதுரை-பிகானீர் எக்ஸ்பிரஸ் இன்று (9-ந் தேதி) கூடல்நகரில் இருந்து புறப்படும். கச்சிகுடா-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி திண்டுக்கல் வரை இயக்கப்படும். மதுரையில் இருந்து 12-ந் தேதி புறப்பட வேண்டிய கச்சிகுடா எக்ஸ்பிரஸ், திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும். மதுரை-சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் ஈரோடு வரை இயக்கப்படும். பனாரஸ்-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் வருகிற 12-ந் தேதி விழுப்புரம் வரை இயக்கப்படும்.

ராமேசுவரத்தில் இருந்து வருகிற 15-ந் தேதி புறப்பட வேண்டிய பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து புறப்படும். செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும். குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக செல்லும். இது மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். இது மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி, கரூர் வழியாக செல்லும். மானாமதுரையில் மட்டும் நிற்கும். கன்னியாகுமரி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 16-ந் தேதி வரை விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை வழியாக செல்லும். ராமேசுவரம்-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் வருகிற 15-ந் தேதி வரை மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செல்லும். கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். மானாமதுரையில் மட்டும் நிற்கும். நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் வருகிற 11-ந் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக செல்லும். மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, பட்டுக்கோட்டையில் நின்று செல்லும். ஜம்மு காஷ்மீரில் இருந்து இன்று புறப்படும் வைஷ்ணவி தேவி எக்ஸ்பிரஸ் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரையில் நிற்கும். கச்சிகுடாவில் இருந்து வருகிற 12-ந் தேதி நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்லும். மானாமதுரையில் மட்டும் நிற்கும்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

தேனியில் இருந்து தினந்தோறும் இரவு 6.15 மணிக்கு புறப்படும் ரெயில் வருகிற 14-ந் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக 6.45 மணிக்கு புறப்பட்டு வரும். திருச்சியில் இருந்து வரும் பயணிகள் ரெயில், வருகிற 15-ந் தேதி வரை அரைமணி நேரம் தாமதமாக மானாமதுரைக்கு வரும். பயணியர் இந்த மாற்றத்திற்கு தகுந்தாற்போல் தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்வது அவசியமாகும் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories