spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஈவேரா சிலைகளும் மியூசியங்களுக்குள் அடைக்கலமாகும் காலம் வரும்!

ஈவேரா சிலைகளும் மியூசியங்களுக்குள் அடைக்கலமாகும் காலம் வரும்!

- Advertisement -
evr statue
evr statue file picture

சிறையில் மாட்டுத் தோலை சுத்தம் செய்ய வைத்து _ தொழுநோய்க்கு ஆட்பட்டு , அதன்பின்பும் அதே வேதனையுடன் _ வெள்ளையர்களின் , அரசு ரயிலில் ஏற அனுமதி மறுத்து, கால்நடையாகவே நடந்து சென்று சுதந்திரக் கனலைப் பரப்பியவர் நமது சுப்பிரமணியன் சிவாவின் வீடு ,
வத்தலக்குண்டு அக்ரஹாரத்தில் பாழடைந்து கிடக்கிறது!

அந்தக் காலத்திலேயே பாப்பாரபட்டியில் அவர் கட்ட நினைத்த பாரதமாதா கோவில் இன்று வரை கட்டப்படவேயில்லை – அவர் பிறந்த வத்தலக்குண்டு மண்ணில் அந்த மாவீரனுக்கு ஒரே ஒரு சிலை கூட இல்லை – எவ்வளவு முயற்றி செய்தும் , கடைசிவரை பாரதமாதாவுக்கு கோயில் கட்ட முடியவில்லையே என்ற மனவேதனையிலேயே இறந்து போனார்.

இவரைத்தான் நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் வீரத்துறவி என்று தமது பேச்சிலே குறிப்பிட்டார் . ஆனால் சுதந்திரத்தை எதிர்த்தும் , சுதந்திரதினத்தை துக்கநாளென்றும் கூறி , தமிழையும், தமிழனையும் காட்டுமிராண்டிகள் என்று சொன்ன – கன்னடன் ஈ.வே. ராமசாமிக்கு தமிழகம் எங்கும் சிலைகள் – சென்னையில் மட்டும் 29 சிலைகள்!

எங்கள் ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதன் சொந்த இடத்தில் ராஜகோபுரத்திற்கு எதிரில் கூட சிலை – தஞ்சாவூரில் மாமன்னன் ராஜராஜனுக்கு எதிரிலேயே சிலை – இது போதாதென்று அவன் முறை தவறி சாகும் தருவாயில் மணம் முடித்த மணியம்மைக்குக் கூட எழும்பூரில் சிலை!

அவ்வளவு ஏன் – தமிழகத்தில் இந்துக்களையும், இந்துக் கோவில்களையும் கொன்று குவித்த _ திப்பு சுல்தானுக்கும், ஹைதர் அலிக்கும், திண்டுக்கல் மாநகரில் குளத்தை ஆக்ரமித்து மணிமண்டபம் !

அதற்கு ஒரு SI – இரு காவலர்கள் இரவு பகலாக பாதுகாப்பு நமது வரிப்பணத்தில் – நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குக் கோபம் வருகிறது!

இந்த நாட்டை 50 வருடங்கள் ஆண்ட திராவிட கட்சிகளின் துரோகங்களை நினைத்தால் – இனிமேலாவது இந்த மண்ணில் உண்மையான தேசத் தியாகிகளை மதித்து மரியாதை செய்யும் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் – என்று, சபதமேற்போம் – பாரதமாதா வாழ்க!

  • ந.முத்துராமலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe