சென்னை:
சென்னையில் வெள்ள மீட்பில் துடிப்புடன் செயல்பட்ட துப்புரவுப் பணியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்ச்சி, சேவாபாரதி அமைப்பின் சார்பில் இன்று சென்னை முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சேவாபாரதி இணைந்து சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்த மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கௌரவித்தது.
சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில், சுமார் 2500 பேருக்கு நிவாரணப் பொருள்கள் 20 நிமிடங்களில் வினியோகம் செய்யப் பட்டது. எந்த விதமான தள்ளு முள்ளுவும் கூச்சல் குழப்பமும் எதுவும் இல்லாமல் அனைவரும் அமைதியாகப் பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


