கோயில் அருகே சிலுவை, சர்ச்! மிஷனரிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ஜெகன் துணை போகிறாரா?!

Published:

kurnool cross1 - 2026மிஷனரிகள் சட்டத்திற்குப் புறம்பாக ஆந்திர பிரதேசம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி ஜகன்னாத காட்டு கோவில் மலைக்கு அருகே சர்ச் கட்ட தொடங்கியுள்ளனர்.

ஒருவேளை ஜகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவ மதத்தினர் என்பதால் இவர்கள் வேக வேகமாக சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டார்களோ என்னவோ. முதல்வர் இவர்களின் தவறை தட்டிக் கேட்க வேண்டும்.

ஹிந்து ஆன்மிக யாத்திரை செல்பவர்களின் இடங்களுக்கு அருகே உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் தற்போது கிறிஸ்தவ மிஷனரிகளின் பார்வையில் விழுந்துள்ளது.

முதலில் ஒரு பிரம்மாண்டமான சிலுவை 4 வருடங்களுக்கு முன் வைக்கப் பட்டது. அப்போது முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் அரசு அதிகாரிகள் பெரிதாக எந்த எதிர்ப்பையும் இவர்களுக்கு ஏற்படுத்தவில்லை. தற்போது சர்ச் கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் ஜகன் மோகன் ரெட்டி முதல்வராக மே 30ம் தேதி பதவியேற்ற பிறகு ஒரு மிகப் பெரிய சர்ச் கட்டப் போவதற்கான அறிவிப்பு வந்து தற்போது சர்சுக்கான வேலையும் தொடங்கப் பட்டு விட்டது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

அந்த மொத்த இடமும் ஜகன்னாத கட்டு கோவிலுக்குச் சொந்தமான இடம். அங்கிருக்கும் அறிவிப்புப் பலகையில் அந்த இடம் முழுவதும் வனத்துறைக்கு சொந்தமானது என்று கூறுகிறது. ஆனால் சர்ச் கட்டுமானப்பணி தொடங்கியாகிவிட்டது என்பதும் படங்களின் மூலம் தெரிய வருகிறது.

kurnool cross - 2026

அக்கறையுள்ள சில பொதுமக்கள் இதனை ஒரு புகாராக எழுதி வனப் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சிலுவையை எடுப்பதற்காக, சர்ச் கட்டுவதை நிறுத்துவதற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர்கள் பல துறைகளின் கதவுகளையும் தட்டத் தொடங்கினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இதில் ஜகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டி மிஷனரிகளுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதும் திருப்பதி வெங்கடேசப் பெருமாளின் ஏழு மலையானின் ஒரு மலையில் சர்ச் கட்டிவதற்காக இவரை மிஷனரிகள் அணுகியதும் வரலாறு.

kurnool cross2 - 2026

இவருக்கு இணையானவர்தான் சந்திரபாபு நாயுடுவும். ஹிந்துவாக இருந்து கொண்டே மைனாரிட்டிகளை சமாதானப்படுத்தி ஓட்டுப் பிச்சைக்கான அத்தனை வேஷமும் போட்டவர்தான். ஆனால், மக்கள் தற்போது ஜகன் மோகன் ரெட்டி இந்த மிஷனரிகளின் வலையில் விழாமல் ஹிந்துக்களின் இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் யாரெல்லாம் இப்படி இடங்களை ஆக்ரமிப்புச் செய்கிறார்களோ அவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • பிரேமா
ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Related articles

Recent articles

spot_img