
ஊட்டி அருகே சேரம்பாடி பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுத்தையை மீட்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் சிகிச்சையளிக்கின்றனர்.
சேரம்பாடி வனச் சரகத்திலுள்ள அத்திச்சால் கிராமத்தில் மாத்யூ என்பவரது காப்பித் தோட்டத்திலிருந்த கருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்கு போராடுவதாக கிடைத்த தகவலையடுத்து வைத்துறையினர் மீட்கச் சென்றபோது. சிறுத்தை ஆக்ரோஷத்தோடு சீறிப்பாய்ந்தது.
அதனால் முதுமலை புலிகள் காப்பக கால் நடை மருத்துவர் ராஜேஷ் குமாரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி மீட்டு கூண்டுல் அடைத்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று அங்கு சிகிச்சையளித்து வருகின்றனர்