Dhinasari Home page

சிவகாசி அருகே பிளாஸ்டிக் பை துண்டு விழுங்கிய குழந்தை பலி

மதுரை

சிவகாசி அருகே பிளாஸ்டிக் பை துண்டு விழுங்கிய குழந்தை இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே துரைச்சாமி புறத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கார்த்தீஸ்வரன்( 26). இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தை கலைக்கதிர், வீட்டில் மசால் பொடி வாங்கி வந்து அதன் நுனியை வெட்டிய பிளாஸ்டிக் பை துண்டை விழுங்கி விட்டானாம். 

இதையடுத்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர்கள் சேர்த்தார்கள். 

அந்த மருத்துவமனையில் ஸ்கேன் உள்ளிட்டவை எடுத்து பரிசோதனை செய்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தபோது, மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்து விட்டதாம். இது குறித்த புகாரின் பேரில் மாறனேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.