
மதுரை தானப்ப முதலி தெருவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி மரணம்!
மதுரை டிச 22 தானப்ப முதலி தெருவில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் 42 இவர் தானப்ப முதலி தெருவில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்
இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார் இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி சோபனா கொடுத்த புகாரின் பேரில் திலகர் திடல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் வழிப்பறி! பைக் ஆசாமி கைவரிசை!
மதுரை டிச 22 மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
திடீர் நகர் மேலவாசல் இப்பகுதியை சேர்ந்தவர் கண்ணன் 38 இவர் பெரியார் பேருந்து நிலையத்தில் மாநகராட்சி கழிப்பிடத்திற்கு சென்றபோது பைக்கில் சென்ற 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் கத்திமுனையில் வழிமறித்து அவரிடமிருந்து ரூபாய் ஆயிரத்தை பரிசு சென்றுவிட்டார்
இந்த சம்பவம் தொடர்பாக கண்ணன் திடீர் நகர் போலீஸ் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி ஆசாமியை தேடி வருகின்றனர்.
புதருக்குள் பதுக்கி வைத்திருந்த கஞ்சா பறிமுதல்! இளைஞர் கைது!
மதுரை 22 மதுரையில் புதருக்குள் பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.மதுரை அண்ணாநகர் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் இவருக்கு வண்டியூர் சங்கு நகரில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது
இவர் போலீசாரிடம் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தார். அப்போது அந்த பகுதியில் புதருக்குள் கஞ்சா பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்துகொண்டிருந்த மதுரை ராஜாக்கூரைச் சேர்ந்த அருண் பாண்டி என்ற ஜெட்லி 25 இவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.
மதுரை அண்ணாநகரில் குடோனில் ரூ.21லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருட்டு! ஊழியர் கைது!
மதுரை டிச. 22 அண்ணாநகரில் செல்போன் குடோனில் வைத்திருந்த 21லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடிச் சென்ற ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை அண்ணா நகர் 80 அடி ரோட்டில் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் தனியார் நிறுவன குடோன்உள்ளது .இங்கு எக்சேஞ்ச் செய்வதற்காக ரூபாய் இருபத்தி ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 450 ரூபாய் மதிப்புள்ள 35 விலை உயர்ந்த செல்போன்கள் வைக்கப்பட்டிருந்தன .
சம்பவத்தன்று இங்கு ஆடிட் செய்தபோது செல்போன் பெட்டிகளில்போனுக்கு பதிலாக பேட்டரி மட்டும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை சிசிடிவியில் பார்த்தபோது அந்த கடையில் வேலை பார்த்த வேலையால் மனோஜ் என்பவர்திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரை தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார் .இதனுடைய மதிப்பு 21ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 480 ஆகும். இந்த திருட்டு தொடர்பாக அந்த நிறுவனத்தின் கிளை மேலாளர் ராஜ்குமார் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையில்எஸ்.ஐ. செந்தில்குமார் எஸ்எஸ்ஐ பன்னீர்செல்வம் கம்ப்யூட்டர் பிரிவு தலைமை காவலர் கணேச பாண்டி மற்றும் போலீசார் வெங்கட்ராமன் முத்துக்குமார் ஆகியோர் இருந்தனர் இவர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு பல்வேறு கடைகளிலும் தனி நபர்களிடமும் விற்கப்பட்ட ரூபாய் 20 லட்சத்து 20 ஆயிரத்து 30 ரூபாய்மதிப்புள் செல்போன்களை கைப்பற்றினர் .
இந்த திருட்டில் ஈடுபட்ட வேலையால் மனோஜை தேடிவந்தனர் .சில நாட்கள் தலைமறைவாக இருந்த மனோஜ் மதுரைக்கு நேற்று முன்தினம் வந்தது தெரியவந்தது . போலீசார் மனோஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.