காவல்துறை ஆய்வாளரா? இல்லை மத போதகரா?

Published:

மானூர் காவல் நிலைய ஆய்வாளர் ராபின்சன் பற்றிய ஒரு விழிப்புணர்வு செய்தி இது.

நெல்லை மாவட்டம் மானூர் வட்டத்திற்குபட்ட மானூர் காவல் நிலைய ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ராபின்சன் கிறிஸ்தவ மதபோதகர் போன்று செயல்பட்டு வருகிறார்.

இவர் மானூர் காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றதிலிருந்து இன்று வரை சட்டத்திற்கு புறம்பாக புதியதாக 8க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சர்ச் கள் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தானே முன்னின்று கட்டி கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது அவரது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுப்பிள்ளையார் குளம் எனும் கிறிஸ்தவர்களே இல்லாத ஊரில் 9வது சர்ச் கட்டுவதற்கு தானே முன்னின்று தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை மிரட்டி நீதி கேட்டு வருபவர்களை உன்மீது வழக்கு பதிவு செய்து உள்ளே தள்ளி விடுவேன் என்று பயமுறுத்தி தற்போது சர்ச் கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டப்பட்டு கட்டிடம் கட்டும் அளவிற்கு கொண்டு வந்து விட்டார்.

மேலும் சர்ச் கட்டுவதற்கு முயற்சி செய்பவர்களிடம் நான் உங்களுக்கு துணையாக இருப்பேன். என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி ஒரு பாதிரியாராகவே செயல்பட்டு வருகிறார்.

ALSO READ:  வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

இரவு நேரங்களில் இவருடன் ரவுண்ட்ஸ் போகும் காவல்துறையினர் இன்று என்ன ஜெபமோ என்று புலம்பியபடியே பணிக்கு செல்கின்றனர்.

அவரது ஜீப்பில் எப்பொழுதும் கிறிஸ்தவ மத பாடல்களே போடப்படும், அவரது லேப்டாப் முழுவதும் பெந்தகொஸ்தே ஜெப கூட்டங்களின் ஆடியோ வீடியோ மட்டுமே வைத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட மதவெறி பிடித்த ஒரு அதிகாரியை கண்டிக்காமல் மாநில அரசும், மாவட்ட அரசும் காவல்துறையும் அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்பதும் மிகப்பெரிய மத பிரச்சினை உருவாக துணை போவதற்கு சமம்.

நடுப்பிள்ளையார் குளத்தில் புதிய சர்ச் கட்டுவதற்கு தோண்டப்பட்டுள்ள அஸ்திவாரம்  படமாக தரப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img