பதவி வெறி பிடித்துத் திரியும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர்…. பதவிக்காக சொந்த ஊர் மக்களை மதம் மாற்றம் செய்ய துடிக்கும் அதிசயம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா மன்னார்கோவில். இது மிகச் சிறந்த வைணவத் தலம். இங்குதான் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான சேர மன்னராகத் திகழ்ந்த குலசேகர ஆழ்வாருக்கு திருவரசு எனப்படும் உயிர்நீத்த இடம் உள்ளது. இங்கே தனிக் கோயில் கட்டி, வைணவர்கள் போற்றித் தொழும் வகையில் வெளியூர்களில் இருந்தும் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
இந்தக் கோயிலுக்கு ஒரு சிறப்பு அம்சமும் உண்டு. திருமாலின் அஷ்டாங்க விமானம் எனப்படும் மூன்று நிலை விமானங்களில் நின்ற கோலம், இருந்த கோலம், கிடந்த கோலம் என மூன்று நிலைகளில் பெருமாள் காட்சி தருகிறார். சிறப்புகள் மிகவும் பெற்ற திவ்யத் தலமான இங்கே இப்போது மதமாற்ற வேலைகளில் இறங்கியுள்ளார் இந்த ஊரின் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சண்முகவேலு,.
இவர் தற்போது அல்லேலுயா கோஷ்டிக்கு மாறிவிட்டார். தனது ஹிந்து பெயரால் கடந்த முறை வெற்றி பெற்றவர், இந்த முறை இந்த பஞ்சாயத்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தனது கிறிஸ்துவ மனைவியை ஜெயிக்க வைப்பதற்காக என்னவெல்லாமோ செய்து வருகிறார். அவற்றில் ஒன்று மதமாற்றம் உத்தி!
பார் புகழும் ராஜா கோபாலசாமி குடிகொன்டு இருக்கும் மன்னார்கோவில் ஊராட்சியில் தனது கிறிஸ்தவ மனைவியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் வெளியூர்களில் இருந்து கிறிஸ்துவ மத வியாபாரிகளை வரவழைத்து காலனி பகுதிகளில் இந்திரா காலனி, வெயிலான் தெரு மக்களை குறிவைத்து ஏற்கெனவே மதம் மாற்றி விட்டார்!
இந்நிலையில் நேற்று (23/09/2018) காலை 11 மணி அளவில் இந்த மத வியாபாரிகள் கூட்டம் ராஜகோபாலசாமி கோவில் முன்பு நின்று கொண்டு, மதமாற்ற நோட்டீஸ்களை வினியோகித்தனர். இதைக் கண்ட கோவில் அர்ச்சகர் உள்ளிட்டோர், காவல் துறைக்கு தகவல் அளித்தனர்.
இதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சண்முக வேலு. அவரும் கிறிஸ்துவர்களை பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்த அவரது மனைவியும் அங்கே வந்து கோவில் அர்ச்சகரிடம் வாக்குவாதம் செய்து, பின்னர், இதுபோன்ற தவறு இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறி அவர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றனர்.
அப்போது அங்கு வந்த அம்பாசமுத்திரம் காவல் உதவி ஆய்வாளரை சரிக் கட்டிய தங்கவேலுவும் அவர் மனைவியும் மேற்கொண்டு எதுவும் பிரச்னை வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவரையும் அனுப்பி வைத்தனர்.
தனி மனித வெற்றிக்காக தன் இனத்தையே மதம் மாற்றத் துடிக்கும் முன்னாள் பஞ்சாயத்து தலைவரையும் அவரது மனைவியையும் திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பில் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
மேலும், அவர்கள் இருவர் மீதும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் வேண்டுகோள் விடுத்தார். நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றால், மன்னார்கோவில் பகுதியில் இது தொடர்பாக போராட்டம் நடத்தப் படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.






காவலà¯à®¤à¯à®±à¯ˆ நடவடிகà¯à®•ை தேவை.