குற்றாலத்தில் தேசிய வாக்களர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

நெல்லை

குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய வாக்களர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இந்திய அரசு கள விளம்பர அலுவலகம், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது  நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் திரிபுரசுந்தரி தலைமை வகித்தார் களவிளம்பர உதவி அலுவலர்  போஸ்வெல் ஆசிர்  வரவேற்றார்
நிகழ்ச்சியில் தென்காசி கோட்டாட்சித் தலைவர் வெங்கடேஷ் பேசுகையில்  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி  25ம் நாளை தேசிய வாக்காளர்  தினமாக இந்திய தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்கள் அல்ல. வாக்காளர் பட்டியலில் பெயர்  உள்ளவர்கள் மட்டுமே வாக்காளர்கள் ஆவார் ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18து நிரம்பிய அனைவரும் தங்கள் பெயர்களை வாக்காளர்  பட்டியலில் படிவம் 6ல் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் .
ஓவ்வொரு கல்லூரியிலும் கேம்பஸ் அம்பாசிடர்கள் இரண்டு பேர்; நியமிக்கப்பட்டுள்ளனர்;. அவர்களைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் சேர்த்திட மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.
துணைத் வட்டாசியர் கவிஞர் ராஜேந்திரன் வாக்காளர் பட்டியலில் சேர்ந்திட பொதுமக்களிடையே எவ்வாறு விழிப்புணர்வு பிரசாரம் செய்யவேண்டும் என்பது பற்றி விளக்கினார். மாணவிகள் வாக்காளர் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிகளை பேராசிரியை  ஆண்டாள் இசக்கிராணி தொகுத்து வழங்கினார்  மாணவி முத்துக்குமாரி நன்றி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.