திருவிடைமருதூர் கோயிலுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய மணி!

ஆன்மிகச் செய்திகள் திருச்சி லைஃப் ஸ்டைல்
thiruvaduthurai-atheenam2
thiruvaduthurai-atheenam2

கும்பகோணம் அருகே திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோயிலுக்கு திருவாவடுதுறை குருமகா சன்னிதானம் 261 கிலோ எடையுள்ள ரூ.7 லட்சம் மதிப்பிலான மணி வழங்கினார்.

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவிடைமருதூர் அருள்மிகு பிரகத் சுந்தர குசாம்பிகை உடனாய அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயிலுக்கு 6 கால பூஜைக்கும் பயன்படும் மணியை சிறப்பு ஹோமம் செய்து முதல் ஒலி ஒலிக்க செய்து குரு மகா சன்னிதானம் வழங்கினார்.

thiruvaduthurai-atheenam
thiruvaduthurai-atheenam

ஆதீனப் பள்ளி தலைமையாசிரியர் ஞானமூர்த்தி வரவேற்க சந்துரு சிவாச்சாரியார் தண்டபாணி சிவாச்சாரியார் தமிழ் ஆசிரியர் மகாலிங்கம் உதவி தலைமை ஆசிரியர் மகாலிங்கம் ஆகியோர் மணி ஓசையின் சிறப்பு குறித்து உரையாற்றினர்

விழாவில் குரு மகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பேசியபோது, கல்விச் சாலைகள் குறித்தும் நூலகங்கள் குறித்தும் இறைவனின் கருணை குறித்தும் வழிபாடு செய்யும் விதம் குறித்தும் பேசினார் .

thiruvidaimarudhur
thiruvidaimarudhur

சங்கரலிங்க ஓதுவா மூர்த்திகள் திருமுறை பாடினார். மணி தயாரித்த கும்பகோணம் அன்பு மெட்டல் உரிமையாளர்
அன்புவிற்கு சன்னிதானம் பொன்னாடை அணிவித்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் கண்காணிப்பாளர் கண்ணன் செய்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.