மாயவரம் பட்டணப் பிரவேசம் போல் கரூர் திருவிழாவை நிறுத்த திமுக., சதி: பாஜக., ஆர்ப்பாட்டம்!

Published:

bjp karur protest - 2026

மயிலாடுதுறை பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி போல், கரூர் அருகே திருவிழாவினை நிறுத்த திமுக சதி – கரூர் மாவட்ட பாஜக ஆர்பாட்டம் ; மாவட்ட ஆட்சியரிடம் மனு

காலம், காலமாக நடத்தப்பட்டு வந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி பலரது கோரிக்கை மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களது அதிரடி நடவடிக்கையால் தமிழக அளவில் நேற்றிரவு விழாக்கோலம் பூண்டது.

இந்நிலையில், கரூர் அருகே பாரம்பரியமாக 100 ஆண்டுகள் நடந்து வந்த திருவிழாவிற்கு திமுக அரசு முட்டுக்கட்டை போடுகின்றது என்று கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் அதிரடியாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டனத்தினையும் பதிவு செய்துள்ளார்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட, ஓமாந்தூர் பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும், இந்நிலையில், தனிநபர் ஒருவர் இந்த இடத்தினை ஆக்கிரமித்து கொண்டு கரகம் பாலித்தல், திருவிழா நடத்த கூடாது என்று தகராறில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில், இப்பிரச்சினையை கையில் எடுத்த கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் முதலில் அவருடைய லெட்டர் பேடில் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் மனு அளித்த நிலையில், அந்த ஊர் மக்களை மனு அளிக்க செய்தார்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

இந்நிலையில், இந்துக்களின் உணர்வுகளின் விளையாடும் திமுக அரசினை கண்டித்தும், திருவிழா மற்றும் பாரம்பரிய விழாக்களை நடத்த முட்டுக்கட்டை போடும் திமுக அரசிற்கு கடும் கண்டனத்தினை தெரிவித்து கொண்டு, திருவிழா நடத்தாமல் பாதிக்கப்பட்டு வரும் அந்த ஊர் மக்களோடு சேர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னேயே திமுக அரசினை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி திடீர் ஆர்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு அந்த ஊர் மக்கள் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் என்று ஏராளமானோர் உடனிருந்தனர். இதுமட்டுமில்லாமல், திமுக அரசு அங்கம் வகிக்கும் மாநில அரசியலில், அந்த ஊர் அமைந்திருக்கும் பகுதி கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ சிவகாம சுந்தரி இருக்கும் தொகுதி, அந்த ஊர், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்டது அந்த பேரூராட்சி தலைவரும் திமுக வினை சார்ந்த ஒரு பெண்மணியாக இருக்கும் நிலையில், அந்த ஊர் மக்களுக்காக பாஜக திடீரென்று களத்தில் இறங்கியது அந்த ஊர் மற்றும் சுற்றுப்புற மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

ALSO READ:  மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி... தமிழகத்தில் இவை எப்படி?

Related articles

Recent articles

spot_img