ஆரம்பத்தில் அல்லாடி, ஏற்றம் கண்ட ஏ.வி.எம்.

 

 
 
ஏ.வி.எம். ஸ்டுடியோவின் ஒரு பகுதி அப்பார்ட்மெண்டாக மாறப்போகிறது என்ற செய்தியை இன்று படித்ததன் விளைவே இந்த பதிவு.
 
இந்த ஸ்டுடியோ சென்னையில் தொடங்கி, பின் தேவகோட்டையில் சிறிது காலம் இயங்கி, மீண்டும் சென்னைக்கே வந்த கதை சுவாரஸ்யமானது. 
 

1.bp.blogspot.com mGhzqmuEqyE VXu92flry3I AAAAAAAAEkU Ta5hRI UHss s400 20mp AVM1 jpg 1118442g - 2026

ஏ.வி.எம். நிறுவனத்தின் நிறுவனரான ஏ.வி.மெய்யப்பன் செட்டியார் புதுமையாக எதையாவது செய்து கொண்டே இருப்பார். அதற்காக முதலீடு செய்வதற்கும் தயங்காதவர். ஆரம்பகாலத்தில் காரைக்குடியில் ‘ஏவி அண்டு சன்ஸ்’ என்ற பெயரில் இசைத் தட்டுகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். அதை பெரிய அளவில் விரிவு படுத்தினார். 1932-ல் தென்னிந்தியா முழுவதற்கும் விற்பனை உரிமையைப் பெற்றார். சிறிய ஊரில் இருந்து பெரிதாக சிந்தித்தவர்.

1.bp.blogspot.com nqFFhzCTW9I VXvCNs8AgsI AAAAAAAAElU VNVYYsuq 14 s400 28sld9 - 2026

அதன் பின் சென்னையில் சிவம் செட்டியார், நாராயண அயங்கார் என்ற இருவரை சேர்த்துக் கொண்டு ‘சரஸ்வதி ஸ்டோர்ஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஜெர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஓடியன் கிராமபோன் கம்பெனியுடன் ஒப்பந்தம் ஒன்று செய்து வியாபாரத்தை விரிவு படுத்தினார். 
 
அந்த காலத்தில் கிராமபோன் இசைத் தட்டுக்களில் கர்னாடக இசைப் பாடல்கள் மட்டுமே வெளிவரும். அதில், ‘வண்ணான் வந்தானே…’ போன்ற கிராமியப் பாடல்களை முதன் முதலில் இசைத்தட்டாக வெளியிட்டது சரஸ்வதி ஸ்டோர்ஸ்தான். அந்த பாடல் வரலாறு காணாத விற்பனை தொட்டது. 
 
அந்த வெற்றி தந்த தெம்பில் 1935-ல் ‘சரஸ்வதி சவுண்ட் புரொடக்க்ஷன்’ என்ற சினிமா கம்பெனியை தொடங்கினார்கள். ‘அல்லி அர்ஜுனா’, ‘ரத்னாவளி’ என்ற இரண்டு படங்களை இப்படி எடுத்தார்கள். இரண்டுமே செட்டியாருக்கு திருப்தியளிக்கவில்லை.

4.bp.blogspot.com jROqG5Iplv4 VXu Pq6tqfI AAAAAAAAEko FN2bHPfe9t0 s1600 001 Alli Arjuna - 2026
அல்லி அர்ஜுனா 1935
சொந்தமாக ஒரு ஸ்டுடியோ இல்லாததால் தரமற்ற கேமராவைக் கொண்டு படங்கள் எடுப்பதால், படங்களின் தரம் குறைகிறது என்று எண்ணிய அவர், இந்த இரண்டு படங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் சொந்த ஸ்டுடியோ உருவாக்கம் எண்ணத்தை தோற்றுவித்தது. 
 
சொந்த ஸ்டுடியோவிற்காக சென்னையில் இடம் தேடினார்கள். மைலாப்பூர் கபாலி டாக்கிஸ் அருகில் ஒரு தென்னந் தோப்பு இருந்தது. அதன் உள்ளே விஜயநகர மகாராஜா என்ற மாளிகை ஒன்று இருந்தது. அதில் பேய்கள் நடமாடுவதாக பேச்சு. அதனால் அந்த பகுதியில் யாரும் நடமாட மாட்டார்கள்.

பேய், பிசாசுப் பற்றி கவலைப் படாத செட்டியாரும் அவரது பங்குதாரர்களும் அந்த மாளிகையை வாடகைக்கு எடுத்தார்கள். மாதம் 325 ரூபாய் வாடகை. அரண்மனை மாளிகை பிரகதி ஸ்டுடியோவாக மாறியது. முதன் முதலாக ஒரு தெலுங்கு படத்தை தயாரித்தார்கள்.

அன்றைக்கெல்லாம் நடிகர்களுக்கு மாத சம்பளம்தான். நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் 67 ரூபாய் 8 அணா. 1941-ல் ‘சபாபதி’ என்ற படத்தை தயாரித்து இயக்கினார் மெய்யப்ப செட்டியார். அதன்பின் 1945-ல் ‘ஸ்ரீவள்ளி’ படத்தை  பிரகதி ஸ்டுடியோவில் தயாரித்து இயக்கி வெளியிட்டார். இந்த படத்தில் டி.ஆர்.மகாலிங்கம், ருக்மணி நாயகன் நாயகியாக நடித்திருந்தார்கள். படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

2.bp.blogspot.com FwJ92w7GBpc VXu jSMJtkI AAAAAAAAEkw bkZZUBCCFyM s320 hqdefault - 2026
ஸ்ரீவள்ளி 1940

1934-ல் இருந்து 1940 வரை சினிமா துறையில் நஷ்டத்தையே சந்தித்து வந்த செட்டியாருக்கு ‘சபாபதி’ சிறிய ஏற்றத்தை தந்தது. ‘ஸ்ரீவள்ளி’யோ உச்சத்திற்கு கொண்டு போனது. அந்த மகிழ்ச்சியை கொண்டாட காஷ்மீர் சென்று வந்தார்.

சென்னை திரும்பிய செட்டியாருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அவரின் பங்குதாரர்கள் வேறு தொழிலில் ஈடுபட முடிவு செய்திருந்தார்கள். பேய் பங்களாவாக இருந்த மாளிகை பிரகதி ஸ்டுடியோவாக மாறியப் பின் செல்வாக்கு கூடியது. அதனால், அதை 7 லட்ச ரூபாய்க்கு விலை பேசிவிட்டார்கள்.

செட்டியாருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியாக தயாரித்த ‘ஸ்ரீவள்ளி’ வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்தது. இனி கூட்டு சேராமல் தனியாக தொழில் செய்வது என்று செட்டியார் தீர்மானித்தார்.

ஆனால், அப்போது உலக யுத்தம் தொடங்கி இருந்த நேரம். பிலிம் இறக்குமதியில்லை. இருந்தாலும் பிலிமுக்கு ஆர்டர் கொடுத்தார். யுத்தம் முடிந்ததும் அனுப்பி வைக்கச் சொன்னார். யுத்தம் முடிந்தது. பிலிம் மட்டுமல்லாமல் கேமரா, ஒலிப்பதிவு கருவி ஆகியவற்றை வாங்கினார்.

எல்லாம் வந்து விட்டது. ஆனால், சென்னை நகர் முழுவதும் மின்சாரம் இல்லை. யுத்தம் காரணமாக அமலில் இருந்த மின்வெட்டு நீக்கப் படாமலே இருந்தது. தொடர்ந்து இருளில் இருக்கும் சென்னையில் ஸ்டுடியோ ஆரம்பிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த செட்டியார் சொந்த ஊரான காரைக்குடியில் புதிய ஸ்டுடியோவை தொடங்க நினைத்தார்.

காரைக்குடிக்கு வந்த செட்டியாருக்கு முதல் பிரச்சனையாக இருந்தது மின்சாரம்தான். இப்போது போல் அந்த காலத்தில் மின்சாரம் அவ்வளவு சுலபமாக கிடைக்கவில்லை. காரைக்குடி பகுதிக்கு மின்சார விநியோகம் செய்து கொண்டிருந்த ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர் கார்பரேஷன்’ என்ற நிறுவனம் 50 கிலோவாட் மின்சாரம் தருவதாக உறுதி தந்தது. அதுவும் நகருக்கு வெளியேதான் தர முடியும் என்றது.

1.bp.blogspot.com NVwU029F03I VXu92mtSJhI AAAAAAAAEkg cS tbm0kuz0 s400 dsc00886copy146205 - 2026

செட்டியார் காரைக்குடிக்கு வெளியே இடம் தேடினார். தேவகோட்டை ரஸ்தா அருகே ஒரு நாடகக் கொட்டகை இருந்தது. அதை தேவகோட்டை ஜமீன்தார் சோமநாதன் செட்டியார் கட்டியிருந்தார். அந்த நாடகக் கொட்டகைக்கு ரூ.2,000-மும், சுற்றிலும் இருக்கும் வெறும் காலி இடத்திற்கு ரூ.1,000-மும் என மாத வாடகைக்கு அந்த இடத்தை பேசி முடித்தார், செட்டியார்.

இதுதான் ஏ.வி.எம்.மின் முதல் ஸ்டுடியோ. நாடகக் கொட்டகைதான் படப்பிடிப்பு தளம். சுற்றிலும் இருந்த வேற்று இடங்களில் சின்ன சின்ன குடிசைகள் அமைக்கப்பட்டன. அதில்தான் நடிகர், நடிகைகள் தனித்தனியாக தங்கிக் கொண்டார்கள். அங்கு மேகப் செய்வதற்கும், ஒத்திகைப் பார்ப்பதற்கும் தனித்தனி குடிசைகள் அமைக்கப் பட்டிருந்தன.

3.bp.blogspot.com MFBNb - 2026
‘நாம் இருவர்’. 1947

இங்கு முதன் முதலாக எடுத்தப் படம் ‘நாம் இருவர்’. 1947-ம் வருடம் பொங்கலன்று மதுரையில் வெளியிடப்பட்டது. மூன்று மாதங்கள் கழித்துதான் (மார்ச்) சென்னையில் வெளியானது. படம் மாபெரும் வெற்றி. மகாகவி பாரதியின் தேசப்பக்தி பாடல்களை முதன் முதலாக  சினிமாவில் பாடலாக பயன்படுத்தியது இந்த படத்தில் தான். விடுதலை வேட்கை கொழுந்துவிட்டு எரிந்த நேரத்தில் இந்த பாடல்கள் பட்டி தொட்டிகளெல்லாம் ஒலித்தன.

1.bp.blogspot.com 4jASlkhHMGg VXvAV3VtbMI AAAAAAAAElA lwFvbyesuY8 s400 Naam Iruvar %2528We Two%2529 poster - 2026
நாம் இருவர் போஸ்டர்

அடுத்த ஆண்டே ‘வேதாள உலகம்’  வெளிவந்தது. இந்த படமும் பிரமாண்டமான வெற்றி. தமிழ்நாட்டைக் கடந்து இந்தியா முழுவதும் செட்டியாருக்கு சினிமா உலகில் மதிப்பும் மரியாதையும் கூடியது.

தனது நாடகக் கொட்டகையில் எடுத்த இரண்டு படங்களும் வசூலை அள்ளிக் குவிப்பதைப் பார்த்த தேவகோட்டை ஜமீன்தாருக்கு மனம் மாறியது. 300 ரூபாய்க்குக் கூட பெறுமானம் இல்லாத அந்த இடத்திற்கு செட்டியார் 3,000 ரூபாய் வாடகையாக கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதாது தனக்கு 10,000 ரூபாய் வாடகை வேண்டும் என்றார். இது மாபெரும் கொள்ளை என்று நினைத்த செட்டியார் மீண்டும் சென்னைக்கே தனது ஸ்டுடியோவை கொண்டு செல்ல முடிவெடுத்தார்.

அதற்காக சென்னையில் இடம் தேடினார். அப்போது எஸ்.எஸ்.வாசன் தனது ஜெமினி ஸ்டுடியோவை விலைக்கு வாங்கிக் கொள்ளும்படி செட்டியாரிடம் கூறினார். “உங்கள் ஸ்டுடியோவோ மவுண்ட் ரோட்டில் நல்ல இடத்தில் இருக்கிறது. ஏராளமான பொருட்களும் இருக்கின்றன. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை. கேமரா, ரெக்கார்டிங் மெஷின் எல்லாம் என்னிடம் ஏற்கனவே இருப்பதால் எனக்கு காலி இடம் மட்டும் போதும்.” என்றார்.

வடபழனி கோயிலுக்கு சற்று தொலைவில் ஒரு முஸ்லிம், தோல் கிடங்கு ஒன்றை வைத்திருந்தார். அப்போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்த நேரம். நிறைய முஸ்லிம்கள் இந்தியாவில் வாழப் பிடிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்படி சென்றவர்களில் ஒருவர்தான் தோல்ஷாப் சாயபு. அவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் அகதி சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் பிரஜையாக மாறிவிட்ட தோல்ஷாப் சாயபுவின் 10 ஏக்கர் நிலத்தை ரூ.37,500-க்கு வாங்கினார். சென்னையில் ஏ.வி.எம். ஸ்டுடியோ உதயமானது. தேவகோட்டை ரஸ்தாவில் ஸ்டுடியோ இருந்த போது தொடங்கிய பட வேலைகளை மீண்டும் சென்னையில் தொடங்கி படத்தை வெளியிட்டார், செட்டியார். படத்தின் பெயர் ‘வாழ்க்கை’

ஜமீன்தாரின் பணத்தாசை மட்டும் குறுக்கிடாமல் இருந்திருந்தால் ஒருவேளை காரைக்குடியும் தேவகோட்டையும் மிகப் பெரிய திரைப்பட நகரங்களாக கூட மாறியிருக்கலாம்.

யார் கண்டது..?!

3.bp.blogspot.com OSM8L2bj1Ck VXvBCvF ycI AAAAAAAAElI KcH5UmTvgX8 s640 22THRAMAN 761494f - 2026
சிதிலமடைந்த நிலையில் ஏ.வி.எம்.ஸ்டுடியோவின் உட்பகுதி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories