கொரோனா: திருச்சி வந்த பயணிகள் 3 பேருக்கு அறிகுறி!

Published:

coronovirus - 2026

மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பரில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது இந்தியாவையும் வந்தடைந்துள்ளது.

இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் கூடுவதை மக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகள் தயாராகி வருகின்றன.

thiruchi - 2026

இந்நிலையில் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டதில் 11 மாத குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள் இதுவரை 96,729 பேர் சோதனை செய்யப்பட்டதாகவும், அதிஒல் 1,292 பேர் வீடுகளில் இருந்தபடியே கண்காணிக்கப்படுவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img