எச்சரிக்கை!
கலைஞர் விருதுகள் அறிவிப்பு! – தமிழிசை பெருமிதம்!
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கலைஞர் விருதுகள் தமிழ் வருடப் பிறப்பான தை மாத முதல் நாளில் வழங்கப் படும்.
என் நெற்றியில் வைத்துள்ள குங்குமத்தை ரத்தம் என்று மிகச் சிறந்த முறையில் கவிதை படைப்போருக்கு ‘கலைஞர் ரத்தினம்’ விருது வழங்கப் படும்.
பாஜக., பல்கலைக் கழகத்தில் கலைஞர் பேராசிரியராக இருந்து கற்றுக் கொடுத்த இஞ்சினியரிங் படிப்பில் ராமர் சேர்ந்து படித்ததால், அவர் கட்டிய இலங்கைக்கான சேது பாலம், ராவணனிடம் இன்று போய் நாளை வா என்று சொல்லி ராவணனுக்கு பயந்து போரில் இருந்து பின்வாங்கியது, ராவணனின் வீரம் இவற்றை எல்லாம் மேடைகளில் புகழ்ந்து பேசி பட்டிமன்றம் நடத்துபவர்களுக்கான ‘கலைஞர் ரத்னா பேச்சாளர்’ விருது வருடம் தோறும் ஜூன் 3ம் தேதி வழங்கப் படும்.
மிகச் சிறந்த முறையில் பாஜக., அலுவலகமான கமலாலயத்தில் கல்லெறிந்து, ஒரு கல்லில் எத்தனை கண்ணாடிகளை உடைப்பார்களோ அவர்களின் வீச்சுத் திறனுக்கேற்ப தேர்வு செய்யப்பட்டு, ‘கலைஞர் ரத்னா வீச்சாளர்’ விருது பாஜக., அலுவலகத்தில் வைத்து மாதந்தோறும் வழங்கப்படும்!
என்று பெருமிதம் பொங்க அறிவித்த தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாரதத்தின் ரத்தினங்களாக பிறந்தவர்கள் சிலரே..!பாரதத்தில் ரத்தினமாக ஒளிரப்போகிறவர் கலைஞர்-என்று உறுதிபட முத்தாய்ப்பாகத் தெரிவித்தார்.
பின்குறிப்பு: நேற்று நம் கனவில் வந்த சோ சார், இதனை நம் தினசரி இணைய தளத்தில் பதிவு செய்ய கட்டளை இட்டதால், இங்கே பதியப் பட்டது!




