என்ன ஸ்டாலின்.. யார யாரோட ஒப்பிடறீங்க?! இது மருது சகோதரர்களுக்கு இழுக்கு! வரிந்து கட்டுகிறார்கள்!

ஃபோட்டூன் அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் மதுரை

mkstalin muslimleagemeeting - 2026

யாரை யாரோட ஒப்பிடறீங்க…. என்று கொதித்துப் போயிருக்கிறார்கள் விருதுநகர்வாசிகள் திமுக., தலைவர் ஸ்டாலின் மீது!

விருதுநகரில் ஞாயிற்றுக் கிழமை மார்ச் 10 ஆம் தேதி அன்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக., தென்மண்டல பொதுக்கூட்டம் நடைபெற்றது,

அதில் விருதுநகர் மாவட்ட செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார், திமுக துணைப் பொதுசெயலாளர் ஐ.பெரியசாமி, மகளிரணி செயலாளர் கனிமொழி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பேசினர்,

நிகழ்ச்சியின் நிறைவாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில் விருதுநகர் மாவட்ட செயலாளர்கள் ராமசந்திரன், தங்கம் தென்னரசு இருவரும், விடுதலை போராட்ட வீரர்கள் சின்ன மருது, பெரிய மருது போன்றவர்கள் எனப் பேசினார்.

இது திமுக.,வினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தேர்தல் நேரத்தில் ஏன் இந்த வீண் ஏழரையைக் கூட்டிக் கொள்கிறார்கள் இவர்கள் என்று தலையில் அடித்துக் கொண்டனர் தொண்டர்கள்.

maruthupandiyar - 2026

சராசரி மனிதர்களுடன், சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களை ஒப்பிட்டுப் பேசியது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்று அகத்தமிழர் முன்னேற்றக் கழகத்தினர் கொந்தளிப்புடன் கூறினர்.

சின்ன மருது போன்ற ஒரு மாவீரன் இந்த உலகில் மீண்டும் பிறக்கப் போவதில்லை எனக் குறிப்பிட சிலர், இவ்வாறு வரலாற்று மாவீரர்களை ஒப்பிட்டுப் பேசுவது அந்த சமுதாயத்து மக்களின் ஓட்டுகளை நாம் இழந்துவிடக் காரணமாகிவிடும் என்று எச்சரித்தனர்.

ஏற்கெனவே தூத்துக்குடியில் கீதா ஜீவன் ஒருவரும் போனில் பேசி பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் மீண்டும் ஒரு தென்மாவட்டப் பிரச்னையைக் கிளப்பி சிக்கலில் மாட்டியுள்ளது திமுக.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.