பாஜக எம்எல்ஏ மாரடைப்பால் மரணம்! முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல்!

இந்தியா சற்றுமுன்
Devendra Pratap Singh
Devendra Pratap Singh

பாஜக சட்டமன்ற உறுப்பினர் திடீர் மாரடைப்பால் மரணம் பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சி.

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆமபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்டவர் தேவேந்திர பிரதாப்சிங் ( 55) இந்த தேர்தலில் வெற்றி பெற்றதால் சட்டமன்றத் உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.

இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மேலும் மூன்று முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார் .

இந்நிலையில் இன்று காலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அமபூர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

அங்கு பரிசோதனை செய்த தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேஷ் அகர்வால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

தேவேந்திர பிரதாப்சிங் மறைவையொட்டி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் செய்தியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.