dhivya 1 - 2026

கலெக்டர் நடனம் ஆடலாமா..? கலக்கலாய் டான்ஸ் மட்டும் இல்ல பதிலும் கொடுத்த கலெக்டர் திவ்யா ஐயர்!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
dhivya 1 - 2026

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ். ஐயர், எம்.ஜி. பல்கலைக்கழகத்தில் நடந்த இளைஞர் திருவிழா ஒன்றில் கலந்து கொண்டார்.

இந்த நிலையில், திடீரென அவர் மேடை மீது ஏறி பாடல் ஒன்றுக்கு மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். முன்பே பயிற்சி எதுவும் எடுக்காமல் மற்ற மாணவர்களுடன் சேர்ந்து ஸ்டெப் போட்டு ஆடியது மாணவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படுத்தியது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கேரளாவில் எம்.ஜி. பல்கலை கழகம் சார்பில் இளைஞர் திருவிழா ஒன்று நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கேரள பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் திவ்யா எஸ். ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இளைஞர் திருவிழா கோலாகலமாக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இதில் இளைஞர்கள் பலரும் மேடையில் உற்சாக நடனம் ஆடினர். மாவட்ட கலெக்டர் திவ்யா திடீரென மேடை மீது ஏறி இளைஞர்களுடன் சேர்ந்து நடனமாடத் தொடங்கினார்.

பயிற்சி எதுவும் எடுக்காமல் மாணவர்களுடன் ஒன்றாக இணைந்து அதே போல் ஸ்டெப் போட்டு ஆடியது விழாவிற்கு வந்தவர்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

dhivya - 2026

இது குறித்து கலெக்டர் திவ்யா விடுத்த செய்திக்குறிப்பில் மேடையில் ஆடப்பட்ட நடனம் எனது இளமைகாலத்தை நினைவூட்டியது.

என்னுடன் பெற்றோர் மற்றும் மகன் அனைவரும் உடன் வந்திருக்கின்றனர். மாணவர்களுடன் இணைந்து நடனமாடியதன் மூலம் என்னுடைய இளமைகால கல்லூரி திருவிழா நாட்களை மீட்டெடுத்த உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்ட பலரும் நீங்கள் ஒரு கலெக்டர் ஏன் அவர்களுடன் சேர்ந்து நடனமாடினீர்கள்? எனக் கேட்டனர்.

அதற்கு கலெக்டர் திவ்யா நான் தயங்க வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? என மிக இலகுவாக பதில் கேள்வி எழுப்பினார். உண்மையில் இன்னும் நடனம் ஆட வேண்டும் என எனக்கு விருப்பம் தான் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.