டப்பிங் ஆர்டிஸ்ட் காதலருடன் தூக்கிட்டு தற்கொலை!

இந்தியா சற்றுமுன்
rubby
rubby

கேரளாவில் டப்பிங் ஆர்ட்டிஸ் தற்கொலை செய்து கொண்டார்.

கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த ஆண் – பெண் இருவருமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆலப்புழா அருகே சேர்த்தலா என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வந்த பெண்மணி ரூபி பாபு. 35 வயதாகிறது. இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட். ஏராளமான மலையாள படங்களுக்கு பின்னணி குரல் தந்துள்ளார். இவருடைய ஆண் நண்பர் பெயர் சுனில். அவருக்கு 45 வயதாகிறது. திருவனந்தபுரம் வஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர்.

இருவருமே காதலித்து வந்தனர். ஆனால் கல்யாணம் செய்து கொள்ளவில்லை.. பாங்கப்பாறையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு சுனில், தன்னுடைய நண்பருக்கு போன் செய்து, “ரூபி தூக்கு போட்டு கொண்டு இறந்து விட்டாள். நானும் சாக போகிறேன்” என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர் உடனடியாக போலீசுக்கு விஷயத்தை சொன்னார்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

போலீசாரும் விரைந்து வந்தனர். ரூபியின் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. அதனால், கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பெட்ரூமில் ரூபியின் சடலம் கிடந்ததை கண்டு அதிர்ந்தனர்.

பின்னர் முதல் மாடிக்கு விரைந்து சென்றால், சுனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். கீழ்த்தளத்தில் ரூபி, முதல் தளத்தில் சுனில் என இருவருடைய சடலங்களையும் போலீசார் மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ரூபியின் கழுத்தை இறுக்கியிருந்த கயிறு அறுக்கப்பட்டுள்ளதாம். இவர்கள் 2 பேருமே எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இவர்களின் அடுத்தடுத்த தற்கொலைகளால் ஆலப்புழா பகுதியே அரண்டு போயுள்ளது. விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.