ஈரோடு மஞ்சளைத் தொடர்ந்து, திருபுவனம் பட்டுச் சேலையும் புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ளது.

பாரம்பர்யமாக விளைவிக்கப்படும் விளைபொருள்கள், உணவுப் பண்டங்கள் மற்றும் கலை நயமிக்க பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது.

பாரம்பரியமிக்க கலைப் பொருள்கள், விளைபொருள்கள், உணவுப் பண்டங்கள் இவற்றுக்கு மத்திய அரசு புவிசார் குறியீட்டை வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழகத்திலிருந்து 29 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அண்மையில் ஈரோடு மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. தற்போது திருபுவனம் பட்டுச் சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

திருபுவனம் பட்டின் நெசவு முறை மற்றும் கலை நயமிக்க வடிவமைப்பு ஆகியவற்றுக்காக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இங்கே தயாரிக்கப்படும் சேலைகள் கைத்தறி மூலமாக நெசவு செய்யப்பட்டு, தங்கமுலாம் பூசப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. நாள் செல்லச் செல்ல இதன் மதிப்பு உயர்ந்துகொண்டே போகிறது.
பாரம்பர்யமிக்க திருபுவனம் பட்டுச் சேலைகள், மூன்றாம் குலோத்துங்கச் சோழன் திருபுவனச் சக்ரவர்த்தியின் பயன்பாடுக்காக முதன்முதலில் தயாரிக்கப்பட்டதாம். இன்று அனைவரின் விருப்பமாகவும் இந்த வகை பட்டுச் சேலைகள் திகழ்கின்றன.

திருபுவனம் பட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் உலக அளவில் இதன் மதிப்பு உயரும்.

முன்னதாக, கடந்த வாரம் பத்து ஆண்டு பேராட்டத்துக்குப் பின் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது. இதனால் ,விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்தியாவில் மஞ்சள் உற்பத்தியில் புகழ்பெற்ற இடம் ஈரோடு .

ஈரோடு, கோவை, திருப்பூர் மஞ்சளுக்கு எப்போதும் தனி சுவை, தனி மணம் இருப்பதால்,அதற்கு மவுசு அதிகம். இந்நிலையில், ஈரோடு மாவட்டத்துக்கென மஞ்சளை புவிசார் குறியீடாக வழங்கும்படி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோரப்பட்டதன் விளைவாக, தற்போது ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி, சிவகிரி, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சென்னம்பட்டி, சத்தியமங்கலம், தளவாடி மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் சில இடங்கள், கோயமுத்தூர் மாவட்டத்தில் விளைவிக்கும் மஞ்சளுக்கு இனி உலகளவில் மவுசு அதிகரிப்பதுடன், நல்ல விலையும் கிடைக்கும். ஈரோடு மாவட்டத்தில் சின்ன நாடன் வகை மஞ்சள்தான் அதிகளவில் விளைவிக்கின்றனர். ஜூன்-ஜூலை மாதங்களில் பயிர் செய்து ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் அறுவடை செய்கின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான் விவசாயிகள் மஞ்சள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த புவிசார் குறியீடு கேட்டு ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்து இருந்தது. இதை தற்போது இந்திய புவிசார் குறியீடு பதிவு அமைப்பு நிறைவேற்றியுள்ளது.

இதற்கு முன்பு, சிறுமலை வாழைப்பழம், விருப்பாச்சி வாழைப்பழம் போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...