புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய முடாசிர் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Published:

kashmir highways 0410 02 e1473575474972 - 2026

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட முடாசிர் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீரில் ராணுவம் சுட்டுக் கொன்றது

புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் பகுதியில் பிங்கிலிஷ் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ராணுவம், சிஆர்பிஎஃப், மாநில காவல்துறையினர் ஆகியோர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் பிங்கிலிஷ் என்று பெயரிடப் பட்டது.

அப்போது பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த துப்பாக்கிச் சண்டையில், ஜெய்ஷ்-இ-மொஹம்மத் இயக்கத்தை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த ஆபரேஷனின் போது, பயங்கரவாதிகளிடமிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப் பட்டன.

சுட்டுக்கொல்லப்பட்ட முடாசிர் அஹமத் கான், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவன்! புல்வாமா தாக்குதலுக்கு பயன்பட்ட வாகனம், வெடிபொருளை ஏற்பாடு செய்தவன் இவனே என்று கூறப் படுகிறது.

ALSO READ:  தமிழின் மாண்பை இழிவுபடுத்திய நிதி அமைச்சர் மரியவில்சனுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Related articles

Recent articles

spot_img