மக்களவைத் தேர்தல் வேட்பாளர்… அதிமுக., நேர்காணல்!

Published:

aiadmk interview - 2026

மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேர்காணல் இன்று தொடங்கியது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்தல் வேட்பாளர்களுக்கான அதிமுக 2-ம் கட்ட நேர்காணல் இன்று மதியம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு வந்த இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேர்காணலைத் தொடங்கினார்.

தற்போது, தென் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

அதிமுக சார்பில் இன்று நடைபெற்று வரும் கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நேர்காணலில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்கவில்லை.

17 தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுக சார்பில், 13-ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.  17 சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் 13ம் தேதி விருப்ப மனுக்களை பெற்று அன்று மாலைக்குள் விருப்ப மனுக்களை வழங்க வேண்டும் என்று அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

திருவாரூர் தொகுதிக்கு ஏற்கெனவே விருப்ப மனு பெறப்பட்டுவிட்டதால் மீண்டும் விருப்ப மனு அளிக்க தேவையில்லை என்றும் கூறப் பட்டுள்ளது.

| |

Related articles

Recent articles

spot_img