ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

Published:

thirumavalavan - 2026

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் பற்றி பேசாதே என்று கோஷமிட்டு, விசிக.,வினர் திடீர் ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த நாற்காலிகளை உடைத்து தூக்கி வீசி, கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்துக்கு பாஜக., இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்களில் இருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

எல்.முருகன் கண்டனம்

ஏபிவிபி மாணவர்களை தாக்கிய விசிகவினரை கைது செய்யக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டார். அதில்,

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றுள்ளது. ஏபிவிபி சார்பில் கூட்டத்தில் விசிகவினர் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஜனநாயக நாட்டில் மக்களிடம் கருத்துக்களை எடுத்து கூறும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லாதவர்கள் விடுதலை சிறுத்தைகள் என்பது உறுதியாகி இருக்கிறது. விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். ஏபிவிபி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும்.- என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

இந்து முன்னணி கண்டனம்

தமிழக தேர்தல் நேர்மையாக நடக்குமா? மாணவர்கள் கூட்டத்தில் விசிக வன்முறை தாக்குதல். போலீஸ் வேடிக்கை பார்க்கிறதா? இந்தச் சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

நேற்று கடலூரில் ஏபிவிபி மாணவர் அமைப்பு நடத்திய தேர்தல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரகளை செய்துள்ளனர். காவல்துறையினர் கண் முன்னே மிரட்டல் விடுத்த விடீயோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இத்தகைய வன்முறை சம்பவங்கள் திமுகவின் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து நடத்தப்படுகிறது. இதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுபோல் நடந்தன.

மேலும் ஊடகங்கத்தினரும் மிரட்டப்படுகின்றனர். செய்தி சேகரிக்க செல்லும் விடீயோ கலைஞர்கள், நிருபர்களை ஆகியோரை போலீஸ் தாக்குவது, விரட்டுவது தொடர்கிறது. இதற்கு காரணம், தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக, காவல்துறை அதிகாரிகளாக திமுக ஆதரவாளர்கள் இருப்பதால் தான்.

இன்னமும் திமுகவின் கண் அசைவுக்கே அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே, தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகம் இருக்கிறதா? அல்லவா? என்ற சந்தேகம் எழுகிறது.

காவல்துறையின் உயர் அதிகாரிகள் சில இடங்களில் மாற்றப்பட்டனர். ஆனால் பல முக்கிய இடங்களில் அதிகாரிகள் மாற்றப்படவில்லை.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

வன்முறையில் இறங்கும் அரசியல் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறினால் தேர்தல் நாளன்று வாக்காளர்களை அச்சுறுத்தி, நேர்மையற்ற தேர்தலுக்கு வழி வகுத்து விடும் என்று இந்து முன்னணி சார்பில் எச்சரிக்கிறோம்.

ஆகவே, இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு மாணவர்களை தாக்கியவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்வத்தாமன், பாஜக.,

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பாக “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குபதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. அதில் விசிக குண்டர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறித்தாக்குதலை நடத்தியுள்ளனர். தேசத்தை நேசிக்கிற மாணவர்கள் கூட்டம் என்பதால் மாணவர்கள் அமைதி காத்துள்ளனர்.

விசிகவினரின் இந்த கோழைத்தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. காவல்துறை இந்த கொடூர தாக்குதல்களின் அடிப்படையில் விசிக குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பாஜக.,வின் எஸ்.ஜி. சூர்யா

சிதம்பரத்தில் ABVP கடலூர் சார்பாக நடைபெற்ற “மாணவர்களின் குரல் மாற்றத்திற்கான குரல்” தேர்தல் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில், மது போதையில் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி குண்டர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்!

ABVP மாநில பொதுச் செயலாளர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்த போது, நாற்காலிகளை வீசி எறிந்து, பொறுப்பாளர்கள் மீதும் மாணவர்கள் மீதும் கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெறிச்செயலில் பன்னீர்செல்வம் மற்றும் பல அப்பாவி மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேலும், ABVP மத்திய செயற்குழு உறுப்பினர் செல்வி.வேதாஞ்சலி அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி அவமரியாதை செய்திருப்பது இவர்களின் கீழ்த்தரமான சிந்தனையை அப்பட்டமாக காட்டுகிறது. ஒரு பெண் நிர்வாகியை தகாத வார்த்தைகளால் அசிங்கப்படுத்தும் இவர்கள் ஜனநாயகத்தை பற்றி பேசுவது மிகப்பெரிய கேலிக்கூத்து.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள துணிவில்லாமல், வன்முறையை கையில் எடுக்கும் இது போன்ற சமூக விரோதிகளை தமிழ்நாடு காவல்துறை உடனடியாக கைது செய்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மாணவர்களின் ஜனநாயக குரலை எந்த ரவுடித்தனத்தாலும் ஒடுக்கி விட முடியாது!

Related articles

Recent articles

spot_img