காங்கிரஸ் ஐடி.,செல் தலைவரே இப்படி ஓடினா..?! டிவிட்டர் கணக்கை டெலிட் செய்த திவ்யா ஸ்பந்தனா!

Published:

rahul divyaspandana - 2026

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்திரா காந்திக்கு அடுத்து நிதி அமைச்சகத்தில் கால் வைக்கும் அடுத்த பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதைவிட, முழு நேர முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நிர்மலா சீதாராமன். அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு தலைவரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனா தனது டிவிட்டர் பதிவில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற செய்தியைப் பகிர்ந்து கொண்டு, வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

அவரது டிவிட்டர் பதிவில், 1970-ஆம் ஆண்டுக்கு பின் நிதித்துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அமைச்சரான உங்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டின பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இல்லை. அதை மேம்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். எங்களால் முடிந்த ஒத்துழைப்பு அளிப்போம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் திவ்யா ஸ்பந்தனா திடீரென டிவிட்டர் கணக்கை டெலிட் செய்துள்ளார். அவர் டுவிட்டரில் இருந்தே விலகியுள்ளதாகக் கூறப் படுகிறது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

தற்போது திவ்யா ஸ்பந்தனாவின் ட்விட்டர் கணக்கு செயல்படவில்லை, அவர் டிவிட்டரில் இருந்து திவ்யா ஸ்பந்தனா விலகியதற்கான காரணம் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

இருப்பினும் அவர் நிர்மலா சீதாராமனை பாரட்டியதும், அவருக்கு ஒத்துழைப்பு தருவோம் என்றதும் திவ்யாவுக்கு பிரச்னையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியிருக்கக் கூடும்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img