குமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்!

Reporters Diary உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
tenkasi kumarapandian anjali - 2026

நெல்லை மாவட்டம் தென்காசியில் கடந்த 2006- டிசம்பர் 17ஆம் தேதி இந்து முன்னணி நகர தலைவர் குமார் பாண்டியன் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது 12ஆவது நினைவு தினம் திங்கள் கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிய்ல் பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் குமார் பாண்டியனின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷ்த் சார்பில் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவண கார்த்திகேயன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமார் பாண்டியன் கொலை வழக்கை மாவட்ட காவல் துறை கண்டுகொள்ளவில்லை. சிறப்பு நீதிமன்றம் அமைத்தும் எவ்வித பலனும் இல்லை. அதன் பின்பு உள்ள வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த வழக்கு மட்டும் கண்டுகொள்ளமல் விடப்பட்டுள்ளது.

இதற்காக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கோரி வழக்குத் தொடர உள்ளோம். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாகத் திரிகின்றனர். அவர்களை கைது செய்ய வேண்டும்.

தென்காசி காவல் துறை வேற்று மத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குகிறது. இந்து அமைப்புகளுக்கு மட்டும் இந்தக் கொலைகளைக் காரணம் காட்டி அனுமதி வழங்க மறுக்கிறது.

தொடர்ந்து இது போன்று நடவடிக்கைகளில் ஈடுப்பட்டால் குமரி கோட்டத்தில் அனைத்து இந்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்றார்.

1 thought on “குமார் பாண்டியன் கொலை வழக்கில் மெத்தனம்: காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தப் படும்!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.