December 6, 2025, 1:12 AM
26 C
Chennai

மதவெறி கிறிஸ்துவ லயோலா; மரண அடி கொடுக்காத வரை திருந்தாது! மற்ற கல்லூரிகளுக்கும் ‘கலை’க் கண்ணோட்டம் உண்டு! காட்டலாமா?

loyola college art1 - 2025

மத வெறி வன்முறையைத் தூண்டிவிடும் லயோலா கல்லூரி இப்போது கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. அரசு உதவி பெறும் ஒரு கல்லூரி நாட்டையும், அரசையும், நாட்டின் பெரும்பான்மை மக்களையும் இழிவுபடுத்தி கருத்தரங்குகளும் கலைக் கண்காட்சி என்ற பெயரில் ஓவியங்கள் வடிவில் கேவலப்படுத்துவதையும் செய்து வருகிறது என்று இந்து இயக்கங்கள் கொந்தளித்துள்ளன.

இது குறித்து இந்து மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் தெரிவித்தபோது, சென்னையில் ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு தினங்களில் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் லயோலா மாணவர் அரவணைப்பு மையம் (எல் எஸ் எஸ் எஸ்), லயோலா கல்லூரி மற்றும் மாற்று ஊடக மையம் (ஏ எம் சி ) ஆகியவை இணைந்து கருத்துருவை நிலைநாட்ட கலைஞர்கள் ஆர்ப்பரிக்கும் வீதி விருது விழா கலை இலக்கிய பிரிவின் சார்பில் ஏற்பாடாகி, நடைபெற்றது.

இவர்களோடு தமிழ்நாடு அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் அமைப்புகள் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன்னார்வ கலைஞர்கள் சங்கம் ஆகியவை இணைந்து விழாவை நடத்தி இருக்கிறார்கள்.

loyola college art2 - 2025

லயோலா கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்ட கண்காட்சிப் படங்கள்
ராம ராஜ்யம், மீ_T00 என்று பாரத மாதாவை இழிவுபடுத்தியும், ஏகாதிபத்திய தாசன் என்று பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி, இந்துக்கள் வழிபடும் அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி சுமந்து பறப்பது போலவும், நந்தினி என்ற பெண் பிறப்பு உறுப்பில் திரிசூலம் வரைந்து – ரத்தம் வருவது போலவும், ரஃபேல் ஊழல் பாஜக தாமரை சின்னம் , பாஜகவின் பயங்கரவாத ஆட்சியில் எழுத்தாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் ஜனநாயக சக்திகள் படுகொலை செய்யப்படுவதாகவும் மற்றும் அகண்ட பாரத கனவு கௌரி லங்கேஷ் படுகொலை, பெண்கள் தீட்டு, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீது அவதூறு கருத்துகள் பரப்பும் வகையில், ஸ்வச் பாரத் என்ற அடையாளத்தை நீளும் விவசாயிகள் தற்கொலை என்று அவதூறு பரப்பி ஒரு மோசமான எண்ணத்தை உருவாக்க வேண்டும் திட்டமிட்ட எண்ணத்துடன் இந்த நிகழ்வை நடத்தி இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெருமக்கள் யாரென்று விழா அழைப்பிதழை பார்த்தாலே தெரியும்.

loyola college art3 - 2025

சென்னை லயோலா கல்லூரி நிர்வாகம் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பது தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நன்றாகத் தெரியும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர் கெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு மாணவர்களை போராட்டக்காரர்களாக, வன்முறையாளர்களாக தூண்டிவிட்டு பொது அமைதியை குலைக்க வேண்டும் என்ற தீய எண்ணத்துடன் கல்லூரி செயல்படுவதும் மத்திய மாநில அரசுகளுக்குத் தெரியும்.

மத்திய அரசின் மீதும், மத்திய அரசின் திட்டங்களின் மீதும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீதும் காழ்ப்புணர்ச்சியோடு கருத்துரிமை என்கின்ற பெயரால் தவறான கருத்து பிரச்சாரம் செய்வதை இந்து மக்கள் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

கிறிஸ்தவத்தின் மீது சொல்ல எவ்வளவோ உண்மை விமர்சனக் கருத்துகள் உள்ளன. அவற்றை கருத்துரிமை என்ற பெயரில் வைப்பதற்கு, கருத்து பிரச்சார விளம்பர பலகை வைப்பதற்கு இந்த கல்லூரி நிர்வாகத்திற்கு தைரியம் இல்லை. ஆனால் வேண்டுமென்றே பாரத பிரதமர் நரேந்திர மோடி மீதும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் நாட்டு மக்களை ஒற்றுமைப்படுத்தும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீதும், அவதூறு பரப்பும் இழி செயலைச் செய்கின்ற சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி நிர்வாகம் மீது, மத்திய, மாநில அரசும், கல்லூரி கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இங்கு நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு. கண்காட்சி சம்பந்தமாக முழுமையான விசாரணை ஏற்படுத்தப்பட வேண்டும்.இதில் பங்கேற்ற நபர்கள் பேசிய கருத்துக்கள் குறித்து மத்திய மாநில அரசுகளின் உளவுத்துறை ஆய்வு மேற்கொண்டு தேசவிரோத தெய்வ விரோத அரசு விரோத கருத்துக்கள் இடம் பெற்று இருக்கும் காரணத்தால் இந்த கல்லூரி நிர்வாகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இது குறித்த புகார் மனுவை வாட்ஸ் ஆப் மூலமாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அளித்திருக்கிறோம். தொடர்ந்து புகார்களைத் தெரிவிப்போம் என்று கூறினார்.

மேலும் கருத்துக் கணிப்பு என்ற பெயரில் ஒரு சாதாரண நாலு சுவர் அறைக்குள் இருந்து கொண்டு, திமுக.,வுக்கு சார்பாகவும், கிறிஸ்துவத்தை முன்னிறுத்தியும் தேர்தல் நேரத்தில் கருத்துத் திணிப்பை நடத்தும் லயோலா கல்லூரி குறித்து எத்தனையோ முறை புகார்களைத் தெரிவித்துள்ளோம் என்கிறார்கள் இந்து இயக்கத்தினர்.

இதனிடையே, இன்று இது குறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாக இந்து இயக்கங்களில் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. திங்கள் கிழமை இன்று முற்பகல் 11.30 மணி அளவில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கவுள்ளோம் என்றார் இந்து முன்னணியைச் சேர்ந்த இளங்கோ, அவருடன், ஓமாம்புலியூர் ஜெயராமன், பாஜக மாவட்ட தலைவர்களான டால்பின் ஸ்ரீதரன், தனஞ்செயன், கிருஷ்ணகுமார் ஆகியோரும் திரளான இந்து இயக்கப் பிரமுகர்களை அழைத்துக் கொண்டு புகார் கொடுக்க உள்ளதாகக் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை எதிர்க்கிறோம் என்ற போர்வையில் இந்துக் கடவுளை, இந்து மத அடையாளத்தை, பாரத மாதாவை கேவலப் படுத்திய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும், இடம் கொடுத்து ரசித்த லயோலா கல்லூரி மீதும், வக்கிரமாக வரைந்தவர்கள் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டிஜிபியிடம் புகார் மனு அளிக்க உள்ளோம் என்று கூறிய இளங்கோ, இதில் இந்து முன்னணி, பாஜக, விஎச்பி நிர்வாகிகள் கலந்து கொள்வர். தேச பக்தர்களும், இந்து மத உணர்வாளர்களும் நம் உணர்வை, எதிர்ப்பை வெளிப்படுத்த டிஜிபி அலுவலகத்துக்கு வரவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

உண்மையில் ஏகாதிபத்திய மோடியாக இருந்திருந்தால்… இந்து இயக்கங்கள் வன்முறையில் ஈடுபடுபவர்களாக இருந்திருந்தால்… கருத்துக் கொலை செய்பவர்களாக இருந்திருந்தால்… லயோலா கல்லூரிக்கான நிதி உதவி நிறுத்தப் பட்டிருக்கும். லயோலா கல்லூரியில் நடந்த கண்காட்சியில் நெருப்பு வைக்கப் பட்டிருக்கும்.. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பார்கள்! ஆனால் இவை எதுவும் நடக்காமலேயே கருத்துரிமை என்ற பெயரில் இவர்கள் இப்படி ஈடுபடுவார்களே ஆனால், மற்ற கல்லூரிகளுக்கும் கருத்துரிமையும் கண்காட்சியும் இல்லாமலா இருக்கும்!?

கன்னியாஸ்திரிகள் கிறிஸ்துவத்தில் சேர்க்கப்படுவதே பாதிரியார்களின் பாலியல் இச்சையை தீர்ப்பதற்காகத்தான் என்று ஓவியம் வரைய முடியாதா? கன்னி மேரி குழந்தை பெற்ற கதையை ஓவியம் தீட்ட முடியாதா? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று அடுத்தவன் பெண்டாட்டியை மேய்ந்து தாலியறுக்கும் திராவிட இயக்கங்களின் நடப்பை ஓவியம் தீட்ட முடியாதா? இப்படி எத்தனையோ சீர்கேடுகளை வெளிப்படுத்த கருத்துரிமை இல்லாமல் இல்லை; ஆனால் மற்றவர் மனம் புண்படும்படி செயல்படுவது ஹிந்துக்களின் செயல் இல்லை என்று காட்டமாகக் கூறுகின்றார்கள் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories