நள்ளிரவில் அறிவிக்கப் பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்! சிவகங்கை ‘சிதம்பர’ ரகசியம்!

Published:

09 May16 congress - 2026

காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நேற்று நள்ளிரவில் அறிவிக்கப் பட்டது.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப் பட்டுள்ளன. அந்த 9வது தொகுதியான சிவகங்கை தொகுதி மட்டும் இன்னமும் அறிவிக்கப் படவில்லை. வேட்பாளர் தேர்வில் இழுபறி நீடிப்பதாகக் கூறப் படுகிறது.

இந்தத் தொகுதியை ப.சிதம்பரம், தனக்கு அல்லது தன் மகனுக்கு என்று கேட்டு வருகிறார். ஆனால் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது வழக்குகள் சில நிலுவையில் உள்ள நிலையில், காங்கிரஸ் மேலிடம் இடம் ஒதுக்க தயக்கம் காட்டி வருவதாகக் கூறப் படுகிறது.

இந்தத் தொகுதியில் சுதர்ஸன நாச்சியப்பன் போட்டியிட விரும்புவதாகவும் ஒரு தகவல் உலவுகிறது. எனவே அவருக்குதான் இடம் கொடுக்கப் படும் என்று தெரிகிறது. அதே நேரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே, பெயில் வாங்கி வெளியில் உலவும் நபர்தான் என்றும், ராகுல் காந்திக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றும், எனவே ராகுல் போட்டியிடுவது போல், கார்த்தியும் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் சிலர் மேலிடத்தில் கூறிவருகின்றனராம்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

ப.சிதம்பரத்துக்கு அரசியல் மட்டத்தில் மட்டுமல்ல, அதிகார, நீதித்துறை மட்டத்தில் அசைக்க முடியாத செல்வாக்கு இருப்பதால், காங்கிரஸ் கட்சி அவருக்கோ அவரது மகனுக்கோ போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்:

திருவள்ளூர் – டாக்டர் ஜெயக்குமார்

கிருஷ்ணகிரி – டாக்டர் செல்லக்குமார்

ஆரணி – விஷ்ணு பிரசாத்

கரூர் – ஜோதிமணி

திருச்சி – திருநாவுக்கரசர்

தேனி – ஈவிகேஎஸ் இளங்கோவன்

விருதுநகர் – மாணிக் தாகூர்

கன்னியாகுமரி – வசந்தகுமார்

புதுவை – வைத்திலிங்கம்

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப் படவில்லை.

Related articles

Recent articles

spot_img