தங்கா தமிழ்ச்செல்வனுக்கு திமுக.,வின் கொள்கை என்னவென்றாவது தெரியுமா?!

Reporters Diary சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

thangathamilselvan stalin - 2026

கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பைப் பார்த்து கொடுப்பது! என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன் என அமமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட தங்க தமிழ்ச்செல்வன் கூறிய முதல் வார்த்தையே சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

இதை அடுத்து நெட்டிசன்ஸும் தங்கள் பங்குக்கு கலாய்த்து வருகிறார்கள் இப்படி…

தங்கா தமிழ்ச்செல்வனுக்கு திமுக.,வின் கொள்கை என்னவென்றாவது தெரியுமா?!

யாரிடமும் நிரந்தரமாக தங்காத தமிழ்ச்செல்வன்

பதவியை எதிர்பார்த்தே திமுக.,வில் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன்!

திமுகவில் பதவி தானாகவே கிடைக்கும் என்று கூறியுள்ளார் தங்கத் தமிழ்ச் செல்வன்….

ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ்… ஏற்கனவே இங்கே 37 எம்பி கிடைத்தது, மத்திய மந்திரி பதவி கிடைக்கவில்லை. இடைத்தேர்தலில் 13 எம்எல்ஏக்கள் கிடைத்தது. முதல்வர் பதவி கிடைக்கவில்லை…

எனக்கே ஒன்னும் கிடைக்கல,… இந்த லட்சணத்தில் கட்சியில் சேர்ந்த உடனே பதவி கேட்கறாங்க… – ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்…

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

திமுக.,வின் கொள்கையாவது தெரியுமா? அல்லது குஷ்பு மாதிரிதானா? திமுக.,வின் கொள்ளை என்று சொல்லி காலம் ஓட்டுவாரா… என்று தங்க தமிழ்ச்செல்வனை கலாய்க்கின்றனர் நெட்டிசன்ஸ்! (கொள்கை இல்லாத கட்சிக்கு ஒரு கொள்கை பரப்புச் செயலாளர் எதற்கு என்று அமமுக.,வில் இருந்து விலகும் நேரத்தில் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருந்தார்)

இன்றைய பரபரப்பைக் கிளப்பும் வகையில், செந்தில் பாலாஜி, விபி கலைராஜன் ஆகியோர் இணைந்த போதெல்லாம் இல்லாத பரபரப்பை ஏற்படுத்தி தங்க தமிழ்ச்செல்வன் இன்று திமுக.,வில் இணைந்தார்.

thangathamilselvan stalin - 2026திமுகவில் இணைந்தபின் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒற்றை தலைமையில் இருக்கும் கட்சிதான் செயல்பட முடியும், அதனால்தான் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

மு.க.ஸ்டாலினால்தான் நல்ல தலைமை கொடுக்க முடியும். தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் என தேர்தல் முடிவு அறிவுறுத்தியுள்ளது. அதனால்தான் திமுகவில் இணைந்துள்ளேன்.

ஆளுமை மிக்க, துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடியவர் திமுக தலைவர் ஸ்டாலின். கேட்டுப் பெறுவது பதவியல்ல. உழைப்பை பார்த்து கொடுப்பது என்றும் என் உழைப்பை பார்த்து கொடுப்பார்கள் என நம்புகிறேன்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

அதிமுகவில் இருந்த பலரும் திமுக வந்த பின், அவர்களுக்கு திமுக நல்லதே செய்துள்ளது. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அதிமுக நான்காக உடைந்துள்ளது. அமமுகவில் இருந்து மேலும் பல நிர்வாகிகள், திமுகவில் இணைவார்கள் என்றார்.

இதன் மூலம் தாம் பதவியை எதிர்பார்த்தே, லாபத்தை எதிர்பார்த்தே, திமுக.,வில் இணைந்திருப்பதாக வெளிப்படையாக, தன் உள் மன ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் தங்க தமிழ்ச்செல்வன். இது இப்போது திமுக.,வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.