மின் வாரிய ஊழல்வாதிகளை தண்டிப்பது எப்படி? எப்போது?!

Published:

TNEB - 2026

எல்லாவற்றையும் ஆன்லைனில் மாற்றிக் கொண்டு போகிறது மத்திய அரசு. காரணம், இடைத்தரகர் ஒழிப்பு, லஞ்சம், ஊழல், முறைகேட்டை முற்றிலும் ஒழிப்பது இவற்றுக்காகத்தான்.

ஆனால், தமிழகத்தில் அரசுத் துறைகள், சேவைத்துறைகளில் பெரும் லஞ்சம், ஊழல், முறைகேடுகள் நடப்பது நமக்குத்தெரியும், நாமே அவற்றில் சிக்கியிருப்போம். ஆனால், எப்படி இவற்றில் இருந்து வெளியே வருவது? கட்டணங்களை எல்லாம் ஆன்லைனில் செய்வது போல், அபராதங்கள், வேண்டுகோள்களையும் ஆன்லைனிலேயே மாற்ற வேண்டும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்ட்டுள்ளது.

இது என் அனுபவம்…
#தமிழ்நாடுமின்சாரவாரியம் #tneb #tncm #pm_modi #p_thangamani

மின்வாரியம் மக்களிடம் அதிகம் மோசடிகள் செய்து வருகிறது. அதிலும், கீழ் மட்ட அதிகாரிகள் மக்களிடம் மிக அதிகமாக மோசடி செய்கின்றனர்.

உதாரணமான ஓர் அனுபவ சம்பவம்… கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கொரக்கவாடி கிராமத்தில் உள்ள மின்மாற்றி இயந்திரம் பழுது அடைந்தது. அப்போது மின்சார வாரியத்தில் தகவல் தெரிவித்தோம். ஆனால், அதிகாரிகள் மக்களிடம் நேரடியாகச் சென்று பணம் வசூல் செய்தனர்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

இதை அறிந்து நான் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு நேரடியாகக் கேட்ட போது என்னை ஆள் வைத்து மிரட்டினர். பின்பு உயர் அதிகாரியை தொடர்புகொண்டு கூறிய போது, மின்மாற்றியை மாற்றி அமைப்பது மின்வாரியத்தின் கடமை. அதில் எக்காரணம்கொண்டும் பணம் பெறக் கூடாது. மாட்டோம் என்றனர். எனவே, உயர் அதிகாரிகள் வாங்கிய பணத்தை திருப்பி கொடுப்போம் என்று உறுதி அளித்தனர்.

மின்மாற்றியும் இரண்டு நாட்களில் மாற்றி தருவதாக உறுதி அளித்தனர் ஆனால் மீண்டும் மறைமுகமாக ஆள் வைத்து வசூல் வேட்டை நடத்தினர். இது தொடர்பாக, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! இதில் சுமார் நாற்பது ஆயிரம் ரூபாய் அளவுக்கு பொது மக்களிடம் வசூல் செய்து ஊழல் நடைபெற்று உள்ளது!

  • குமார் ராமமூர்த்தி

Related articles

Recent articles

spot_img