காது கேட்பதில் மந்தம், காது வலி என சிரமப் படுகிறீர்களா? இன்றைய சப்தம் அதிகமுள்ள உலகத்தில் இரைச்சலும் இயந்திர வாழ்க்கையும் உங்கள் காதுகளை பெரிதும் பாதித்திருக்கும்.
அப்படி நீங்கள் காதுமந்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளீர்களா? காது மந்தம் குணமாக வேண்டுமா? இதைச் செய்யுங்க!
வேப்பிலை – ஒரு கைப்பிடி
துத்தி – ஒரு கைப்பிடி
நொச்சி இலை – ஒரு கைப்பிடி
நுணா இலை – ஒரு கைப்பிடி
நாயுருவி இலை – ஒரு கைப்பிடி
வில்வ இலை – ஒரு கைப்பிடி
மஞ்சள் தூள் – 50 கிராம்
இவற்றை 5 லிட்டர் தண்ணீர்லிட்டு கொதிக்க வைத்து, வேது பிடிக்க, காதில் சீழ்வடிதல், காதுமந்தம் ஆகியன குணமாகும். காது நோயினால் உண்டாகும் கபநோய், தலைபாரமும் குணமாகும்.




