விஜய்யின் புலி படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இந்த படம் முடிந்தவுடன் அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். காதல் கலந்த ஆக்ஷன் படமாக கதையை உருவாக்கியுள்ளார் அட்லீ. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். விஜய்யின் 59வது படத்தின் மூலம் ஜி.வி அரை சென்சுரி போடவிருக்கிறார். இப்படத்தின் பாடல்களை சூப்பர்ஹிட்டாக வரவேண்டும் என்பதற்காக பாடல் உருவாக்குவதற்காக ஜி.வி.யும் அட்லியும் தற்போது கோவா சென்றுள்ளனர். ‘சைவம்’ படத்தின் மூலம் தேசியவிருது பெற்ற உத்ரா உன்னிகிருஷ்ணன் இப்படத்தில் ஒரு பாடலை ஏற்கெனவே பதிவுசெய்துவிட்டாராம் ஜி.வி.பிரகாஷ்.
விஜய் படத்திற்காக கோவா பறந்த அட்லீ – ஜி.வி.பிரகாஷ்
பணப் பேராசையை வளர்த்து விட்ட அரசியல்வாதிகளே படுகொலைக்குக் காரணம்’: பொங்கலூர் இரா.மணிகண்டன்
இலங்கையில் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தமிழர்களின் நெஞ்சை கிளித்தது போல் அப்பாவி தமிழர்கள் 20 பேரை ஆந்திர காவல் துறையினர் ஈவு இரக்கமின்றி காட்டில் சிங்கம் புலிகளை சுடும் கொடிய வேட்டைக்காரர்களை போன்று ஆந்திர காவல் துறையினர் சுட்டுக் கொன்றது தமிழகம் மட்டுமில்லாமல் உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., ”அரசியல் கொள்ளையர்களை விட ஆபத்தானவர்கள் இந்த நாட்டில் வேறு யாருமில்லை.அதிகார வர்க்கம் அதனினும் கொடியது.இந்திய நாட்டில் முன்னர் யாராவது அதிகாரத்தை பயன்படுத்தி 100.00 ரூபாய் பெற்று விட்டால் ”கொள்ளை அடித்த பணம் -பாவப்பணம்” என்று மிகவும் தவறாக கருத்தை வைத்து இருந்ததோடு அத்தகைய செயலைச் செய்தவரை கொடிய குற்றவாளியாகக் கருதியதுண்டு..எனவே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் வாதிகளும் ,அதிகாரிகளும் முடிந்த வரை நேர்மையாக இருந்தார்கள்.கிராம நிர்வாக அதிகாரி முதல் ஆளுநர் வரை வார்டு உறுப்பினர் முதல் பாரதப் பிரதமர் வரை கொஞ்சம் சேவை நோக்கம் இருந்தது. பொதுவாழ்வு என்றால் சேவை அல்ல வியாபாரம் என்ற நிலையை எட்டிய பிறகு ஒரு வேலைச் சாப்பாட்டுக்கு வழியின்றிக் கிடந்தவர் ஓரடி அரசியலில் எடுத்து வைத்தவுடன் கோடியில் தொடங்கி கோட்டையைக் கட்டி மக்களை எட்டி உதைக்கிறார்.ஆனால் மக்களோ கொள்ளை அடித்து கோட்டை கட்டியவனை பார்த்து பிரமித்து நல்லா சம்பாதிக்கிறார் என்று ”கொள்ளையை” சம்பாத்தியம் என்று வியந்து தனக்குத் தானே மண்ணை அள்ளித் தலையில் போட்டுக் கொள்கிறார். விளைவு நாட்டில் வறுமை ,பஞ்சம்,பட்டினி ,ஏழை,பணக்காரன் என்ற வேறுபாடு பணம் இருப்பவன் நல்ல மனம் உள்ளவனை உதறித்தள்ளி விடுகிறான். பணம் இருந்தால் தான் மரியாதை என்று மனித உருவத்தை பணம் சம்பாதிக்கும் கருவியாகக் கருதியதன் விளைவு செம்மரக் கட்டையை வெட்டிவா நாள் ஒன்றுக்கு 3000 சம்பளம் என்றால் யாருக்குதான் ஆசை வராது. பாவம் இப்போது இருபது குடும்பங்கள் ”பாவத்தின் சம்பளம் மரணம்”என்ற பைபிளின் வேதவாக்கை உறுதியாக்கி விட்டது.ஆனால் மரம் வெட்டும் கூலிகளே அவர்கள்,முதலைகளுக்கு என்ன தண்டனை என்று தெரியவில்லை. மக்கள் தவறு செய்தால் குற்றம் அதுவும் ஒருவரைக் கொன்றுவிட்டால் கொலைகாரப்பட்டத்துடன் தண்டனை அளிக்கும் அரசே சட்டத்தின் கருவிகளைக் கொண்டே கொலை செய்தால் மட்டும் நீதியா? ”குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில் குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயமே” என்ற தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் வாக்குப் படி தப்பியுள்ள குற்றவாளிகள் யார்? என்று கண்டுணர்ந்து பேராசைக்கு மக்கள் வெறியாகிப் போனதற்கு காரணமான அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும். மாறாக தமிழன்,தெலு இலங்கையில் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தமிழர்களின் நெஞ்சை கிளித்தது போல் அப்பாவி தமிழர்கள் 20 பேரை ஆந்திர காவல் துறையினர் ஈவு இரக்கமின்றி காட்டில் சிங்கம் புலிகளை சுடும் கொடிய வேட்டைக்காரர்களை போன்று ஆந்திர காவல் துறையினர் சுட்டுக் கொன்றது தமிழகம் மட்டுமில்லாமல் உலகத்தில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., ”அரசியல் கொள்ளையர்களை விட ஆபத்தானவர்கள் இந்த நாட்டில் வேறு யாருமில்லை.அதிகார வர்க்கம் அதனினும் கொடியது.இந்திய நாட்டில் முன்னர் யாராவது அதிகாரத்தை பயன்படுத்தி 100.00 ரூபாய் பெற்று விட்டால் ”கொள்ளை அடித்த பணம் -பாவப்பணம்” என்று மிகவும் தவறாக கருத்தை வைத்து இருந்ததோடு அத்தகைய செயலைச் செய்தவரை கொடிய குற்றவாளியாகக் கருதியதுண்டு..எனவே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் வாதிகளும் ,அதிகாரிகளும் முடிந்த வரை நேர்மையாக இருந்தார்கள்.கிராம நிர்வாக அதிகாரி முதல் ஆளுநர் வரை வார்டு உறுப்பினர் முதல் பாரதப் பிரதமர் வரை கொஞ்சம் சேவை நோக்கம் இருந்தது. பொதுவாழ்வு என்றால் சேவை அல்ல வியாபாரம் என்ற நிலையை எட்டிய பிறகு ஒரு வேலைச் சாப்பாட்டுக்கு வழியின்றிக் கிடந்தவர் ஓரடி அரசியலில் எடுத்து வைத்தவுடன் கோடியில் தொடங்கி கோட்டையைக் கட்டி மக்களை எட்டி உதைக்கிறார்.ஆனால் மக்களோ கொள்ளை அடித்து கோட்டை கட்டியவனை பார்த்து பிரமித்து நல்லா சம்பாதிக்கிறார் என்று ”கொள்ளையை” சம்பாத்தியம் என்று வியந்து தனக்குத் தானே மண்ணை அள்ளித் தலையில் போட்டுக் கொள்கிறார். விளைவு நாட்டில் வறுமை ,பஞ்சம்,பட்டினி ,ஏழை,பணக்காரன் என்ற வேறுபாடு பணம் இருப்பவன் நல்ல மனம் உள்ளவனை உதறித்தள்ளி விடுகிறான். பணம் இருந்தால் தான் மரியாதை என்று மனித உருவத்தை பணம் சம்பாதிக்கும் கருவியாகக் கருதியதன் விளைவு செம்மரக் கட்டையை வெட்டிவா நாள் ஒன்றுக்கு 3000 சம்பளம் என்றால் யாருக்குதான் ஆசை வராது. பாவம் இப்போது இருபது குடும்பங்கள் ”பாவத்தின் சம்பளம் மரணம்”என்ற பைபிளின் வேதவாக்கை உறுதியாக்கி விட்டது.ஆனால் மரம் வெட்டும் கூலிகளே அவர்கள்,முதலைகளுக்கு என்ன தண்டனை என்று தெரியவில்லை. மக்கள் தவறு செய்தால் குற்றம் அதுவும் ஒருவரைக் கொன்றுவிட்டால் கொலைகாரப்பட்டத்துடன் தண்டனை அளிக்கும் அரசே சட்டத்தின் கருவிகளைக் கொண்டே கொலை செய்தால் மட்டும் நீதியா? ”குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில் குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயமே” என்ற தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் வாக்குப் படி தப்பியுள்ள குற்றவாளிகள் யார்? என்று கண்டுணர்ந்து பேராசைக்கு மக்கள் வெறியாகிப் போனதற்கு காரணமான அரசியல்வாதிகளை தண்டிக்க வேண்டும். மாறாக தமிழன்,தெலுங்கன் ,கன்னடன்,என்ற வேறுபாடுகள் கொண்டு இந்த வெறிச் செயல் நிகழ்ந்திருப்பின் இயற்கையின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அத்தகைய மாநில மொழி வாரியான,இன வாரியான பிரிவினை வேண்டாம் என்பது மட்டுமல்ல மிகக் கொடும் காரியத்தைச் செய்த,செய்யத் தூண்டிய மிருகங்களைக் கண்டிப்பதோடு கடும் நடவடிக்கை மூலம் மத்திய -மாநில அரசுகள் இது போன்ற மிருகச் செயல்களை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இயற்கையின் பேரழிவில் இருந்து நாம் எல்லோரும் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கிறேன். மறைந்தவர்களுக்கு இயற்கை மன்னிப்புடன் இரண்டறக் கலந்து கொள்ளச் செய்யட்டும். மற்றவர்களுக்கு? நாம் என்ன செய்வது. வருத்துகிறேன், வேதனைபடுகிறேன், கண்டிக்கிறேன் எனவும் உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தெரிவித்துள்ளார். ங்கன் ,கன்னடன்,என்ற வேறுபாடுகள் கொண்டு இந்த வெறிச் செயல் நிகழ்ந்திருப்பின் இயற்கையின் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. அத்தகைய மால மொழி வாரியான,இன வாரியான பிரிவினை வேண்டாம் என்பது மட்டுமல்ல மிகக் கொடும் காரியத்தைச் செய்த,செய்யத் தூண்டிய மிருகங்களைக் கண்டிப்பதோடு கடும் நடவடிக்கை மூலம் மத்திய -மாநில அரசுகள் இது போன்ற மிருகச் செயல்களை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இயற்கையின் பேரழிவில் இருந்து நாம் எல்லோரும் தப்பிக்க முடியாது என்று எச்சரிக்கிறேன். மறைந்தவர்களுக்கு இயற்கை மன்னிப்புடன் இரண்டறக் கலந்து கொள்ளச் செய்யட்டும். மற்றவர்களுக்கு? நாம் என்ன செய்வது. வருத்துகிறேன், வேதனைபடுகிறேன், கண்டிக்கிறேன் எனவும் உழவர் உழைப்பாளர் சங்கத்தின் நிறுவனத்தலைவர் பொங்கலூர் இரா.மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
தலைசுற்ற வைக்கும் வெயிலில் தலைக்கோணத்தில் புலி படக்குழு
விஜய்யின் புலி படம் ஷுட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசர் காலத்தில் நடக்கும் காட்சிகளை எல்லாம் சென்னையில் உள்ள அரங்கில் நடத்தினார். அதன் பிறகு சண்டை காட்சிகளுக்காக கேரளா காடுகள், வாகாமன் மலைப் பகுதிகளில் படமாக்கினார்கள். விஜய், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் பங்கு பெறும் காட்சிகளை படப்பிடிப்பதற்காக தலக்கோணம் காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். கடும் வெயிலுக்கு நடுவில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். இது முடிந்தவுடன் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்லவிருக்கிறதாம் படக்குழு. உலகத் தரத்திலான கிராஃபிக்ஸ் காட்சிகளை ஒரு குழு உருவாக்கி வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகுதான் புலி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்களாம். படத்தின் படத்தொகுப்பும், மற்ற பணிகளும் கூடவே நடைபெற்று வருகிறதாம். புலி படத்தின் பர்ஸ்ட் லுக் இம்மாதம் வெளியாகும் என்று இப்படத்தில் நடிக்கும் ரோபோ ஷங்கர் டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
தல ஆட்டம் ஆரம்பம்: ரசிகர்கள் உற்சாகம்
என்னை அறிந்தால் படத்தையடுத்து அஜித் நடிக்கவிருக்கும் தல 56வது படத்தின் பூஜை இன்று தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் அலுவலகத்தில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதன் பூஜை தமிழ் புத்தாண்டு அன்று துவங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் தயாரிப்பாளர், சாய்பாபா மீதும் வைத்து பற்றின் காரணமாக அவருக்கு உகந்த நாளான வியாழக்கிழமையும் அதன் மீது வைத்துள்ள சென்டிமென்ட்டும்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. வழக்கம் போல் இந்த படத்தின் பூஜைக்கு அஜித் வரவில்லை. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். மேலும் சந்தானம், தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார்கள். பாலிவுட் நடிகர் கபீர் சிங் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. தல 56வது படத்தின் பூஜையில் அஜித்தை தவிர மற்ற அனிருத் உட்பட அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
வாராணசி கோயில் விழாவில் பாகிஸ்தான் பாடகரின் நிகழ்ச்சி
வாராணசி: வாராணசியில் உள்ள சங்கடமோசன் கோவில் திருவிழாவில் பாகிஸ்தான் .பாடகரின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சங்கடமோசன் கோவி்லின் இசை விழா வரும் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவில் 50க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தாண்டு முதன் முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த கஜல் பாடகர் உஸ்தாத் குலாம் அலி பங்கேற்க உள்ளார். இந்த இசை நிகழ்ச்சி குறித்து கோயில் தலைமை குரு விஷ்வாம்பர்நாத் மிஸ்ரா கூறுகையில் , சங்கடமோசன் கோயிலில் முதல் முறையாக பாகிஸ்தான் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. பணிச் சுமை காரணமாக தன்னால் கோவில் விழா மற்றும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இயலவில்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார் என்று கூறினார்.
ஜெயகாந்தன் மறைவு – கவிஞர் வைரமுத்து இரங்கல்
ஜெயகாந்தன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து அனுப்பிய இரங்கல் குறிப்பு:
ஜெயகாந்தன் என்பது ஒற்றைச்சொல்லில் ஒரு சரித்திரம், அது இந்திய இலக்கியத்தின் தமிழ் அடையாளம். ஞானபீடம் என்பது அவர் பெற்ற விருதல்ல அவர் எழுத்துக்களே ஞானபீடம்தான். சூரிய வெளிச்சம் கூட எட்டிப் பார்த்திராத வாழ்க்கையை தன் கலைக்கண்களால் பார்த்துப் பதிவு செய்தவர்; விளிம்புநிலை மனிதர்களை உலக இலக்கியக் கதாபாத்திரங்களாய் உலவச் செய்தவர் சமரசம் செய்து கொள்ளாததே அவரது வாழ்வின் கிரீடம் என்று நான் கருதுகிறேன். அதனால் அவர் வாழநினைத்த சத்தியத்தின் வெளியிலேயே அவரது வாழ்வு கழிந்தது. எழுத்தாளனுக்கென்று வார்க்கப்பட்ட ஒரு தொங்கிப்போன உருவத்தை அவர் துடைத்தழித்தார்; கம்பீரமே அவரது உருவமாயிற்று. பாரதி எழுத வந்த பிறகு கவிதைக்கு மீசை முளைத்தது போல ஜெயகாந்தன் எழுத வந்த பிறகு உரைநடைக்கு மீசை முளைத்தது. அரசியலால் இலக்கியத்தையும், இலக்கியத்தால் அரசியலையும் செழுமைப்படுத்த முயன்றவர். 60களிலேயே தமிழுக்கு ஒரு மாற்றுத்திரைப்படத்தை முன்வைத்தவர். இலக்கியத்தின் எல்லா வடிவங்களுக்கும் பங்களிப்புச் செய்திருக்கிறார். பல எழுத்தாளர்களின் முதல் எழுத்துக்கு உந்துசக்தி தந்திருக்கிறார். புதுமைப்பித்தன் விட்டுப்போன இடத்தை ஜெயகாந்தன் இட்டு நிரப்பினார். அழியாத பல சிறுகதைகளையும் சில நாவல்களையும் படைத்திருக்கிறார். அழியும் உடல் கொண்டுதான் மனிதன் அழியாத காரியங்களை ஆற்றிப் போகிறான். அவரது பௌதிக உடல் மறையும்; படைப்புகள் மறைவதில்லை. ஜெயகாந்தன் புகழை உயர்த்திப் பிடிக்கும் கூட்டத்தின் முன்வரிசையில் நானிருமிப்பேன். ஜெயகாந்தன் படைப்பே நீ வாழ்க.
திராவிட இயக்கத்தின் கம்பீரக் கானக்குரல் இசை முரசு நாகூர் அனீபா: வைகோ இரங்கல்
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது., பேரறிஞர் அண்ணா அவர்களின் இயக்கத்தில் இளமைப் பருவத்தில் தன்னை ஒப்படைத்துக்கொண்ட நாகூர் அனீபா அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அரும்பாடுபட்டார். இயற்கையின் அருட்கொடையாக அவருக்குக் கிடைத்த கம்பீரமும், காந்தமும் நிறைந்த கானக் குரலை, இறைப்பணிக்கும் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தினார். ‘அழைக்கின்றார் அண்ணா’ என ஓங்கி ஒலித்த பாடல், கோடான கோடி தமிழர்களின் இதயங்களில் அண்ணாவைச் செதுக்கியது. ‘ஓடி வருகிறான் உதயசூரியன்’ என்ற பாடல் கழகத்தின் அனைத்து மேடைகளிலும், மாநாடுகளிலும் ஒலித்தது, கழகத்தை வளர்த்தது. இயக்கத்திற்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார். பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது, “தமிழ் மணக்கும் திசை எல்லாம் தேடினேன் உன்னை சான்றோர் தம் அவையெல்லாம் அலையவிட்டேன் கண்ணை எங்கே சென்றாய்?எங்களை ஏங்கவிட்டு எங்கே சென்றாய்?” என அவர் பாடியதைக் கேட்கும்போது கண்கள் குளமாகும். அவரது இசுலாமியப் பாடல்கள், உலகெங்கிலும் வாழும் இசுலாமிய மார்க்கத்தைச் சேர்ந்த தமிழர்களது இல்லங்களில் நாள்தோறும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. அவரது அழைப்பின் பேரில் நாகூரில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றி, அவரது இல்லத்தில் அன்னாரின் விருந்தோம்பலில் திளைத்த மகிழ்ச்சி என் மனதைவிட்டு என்றும் நீங்காது. மேலப்பாளையத்தில் இiசு முரசு அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் என் உரையில் அவர் மனம் நெகிழ்ந்தார். திராவிட முன்னேற்றக் கழக மாநாடுகளில் நான் உரையாற்றிய பின்னர், என் கன்னத்தைப் பிடித்துப் பாராட்டிய பாங்கு மறக்க முடியாதது. ஈழத்தில் இருந்து நான் திரும்பி வந்தபோது, என்னை உச்சி மோந்து கரங்களைப் பற்றியதை எப்படி மறப்பேன்? ‘அழைக்கின்றார் அண்ணா’ என்ற அவரது பாடலையும், ‘கண்கள் குளமாகுதம்மா கர்பலாவை நினைக்கையிலே’ என்ற அவரது பாடலையும் அதிகாலை வேளைகளில் அவ்வப்போது கேட்பேன். எனது கார்ப் பயணங்களிலும் அவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டு இருக்கும். 2004 இல் நதிகள் இணைப்புக்காக நான் நடைபயணம் சென்றபோது நாகூரில் எனக்கு வரவேற்புக் கொடுத்து, அரபு நாட்டில் அவருக்கு வழங்கப்பட்ட வெண்பட்டு ஆடையை அணிவித்து மகிழ்ந்தார். இசை முரசு அவர்கள் மண்ணை விட்டு மறைந்தாலும் அவரது கானக்குரலும், பாடல்களும் என்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும்; காலத்தை வென்று நிற்கும். அவரை இழந்து துயரத்தில் தவிக்கும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ தெரிவித்துள்ளார்
ஆந்திர படுகொலை: பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்!
திருப்பதி: ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதாக ஏற்கெனவே பலரும் கூறி வரும் நிலையில், அதனை உறுதி செய்வது போல், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர வனப் பகுதியில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், சிறப்புப் படையினர் மற்றும் வனத்துறையினர் மீது செம்மரக் கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப் பட்டதாக ஆந்திர போலீஸார் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், அவர்களின் கூற்றுக்கு மாறாக பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியாகின. தொழிலாளர்களின் முக்கிய உறுப்புகளில் குண்டுகள் துளைத்திருப்பது தெரிய வந்துள்ளது. மிக அருகிலிருந்து போலீஸார் சுட்டதே இதற்குக் காரணமாம். மேலும், தொழிலாளி ஒருவரின் மார்பில் 2 குண்டுகளும், முதுகில் 4 குண்டுகளும் துளைத்திருப்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, வேண்டுமென்றே தொழிலாளர்களை போலீஸார் கண்மூடித்தனமாக சுட்டதாக புகார் எழுந்துள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை ஆந்திர மாநில காவல்துறை மறுத்துள்ளது. இதனிடையே பேருந்தில் சென்றவர்களைக் கைது செய்து வனப் பகுதியில் அவர்களை வைத்து போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக அவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
‘லிங்கா’ வரிவிலக்கு பொதுநல வழக்கா?: நீதிமன்ற கண்டனத்தை அடுத்து வழக்கு வாபஸ்
ரஜினி நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளித்தது செல்லாது என்று கூறி, அமிர்தராஜ் என்பது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதனை அவர் பொது நல வழக்காக தாக்கல் செய்திருந்தார். லிங்கா என்ற பெயர் தமிழ்ப் பெயர் அல்ல என்றும், அதன் கதை தமிழ்க் கலாசாரத்தை பிரதிபலிக்க வில்லை என்றும் அதில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பொது நல வழக்கு என்பதற்கு வரமுறைகள் உள்ளன. வரிவிலக்கு என்பதையெல்லாம் பொது நல மனுவில் கொண்டு வர முடியாது. வழக்கை வாபஸ் பெறாவிட்டால் தள்ளுபடி செய்வோம் என்று நீதிபதி கூறியதை அடுத்து, வழக்கை மனுதாரர் வாபஸ் பெற்றார். இதை அடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
கொலைக்குப் பொறுப்பேற்று ஆந்திர அரசு பதவி விலக வேண்டும்: கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கரூர்: ஆந்திர அரசு பதவி விலக வலியுறுத்தி கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் அப்பாவி தமிழர்கள் 20 பேரை ஆந்திர போலீசார் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றுள்ளனர். இதைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்சியினர் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் சார்பில் இன்று நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்ததுடன், வெளியே வந்த வழக்கறிஞர்கள் ஆந்திர அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உருவ பொம்மையை காலணியால் அடித்து, உருவ பொம்மையை எரித்தனர். மேலும் இச்சம்பவத்திற்கு முற்றிலும் பொறுப்பேற்று ஆந்திர அரசு பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் இச்சம்பவத்தை கண்டித்து கரூர் நீதிமன்றத்தில், இன்றும், நாளையும் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

