தலைசுற்ற வைக்கும் வெயிலில் தலைக்கோணத்தில் புலி படக்குழு

Published:

vijay140விஜய்யின் புலி படம் ஷுட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசர் காலத்தில் நடக்கும் காட்சிகளை எல்லாம் சென்னையில் உள்ள அரங்கில் நடத்தினார். அதன் பிறகு சண்டை காட்சிகளுக்காக கேரளா காடுகள், வாகாமன் மலைப் பகுதிகளில் படமாக்கினார்கள். விஜய், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் பங்கு பெறும் காட்சிகளை படப்பிடிப்பதற்காக தலக்கோணம் காட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். கடும் வெயிலுக்கு நடுவில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். இது முடிந்தவுடன் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்லவிருக்கிறதாம் படக்குழு. உலகத் தரத்திலான கிராஃபிக்ஸ் காட்சிகளை ஒரு குழு உருவாக்கி வருகிறது. இந்த பணிகள் முடிந்த பிறகுதான் புலி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்களாம். படத்தின் படத்தொகுப்பும், மற்ற பணிகளும் கூடவே நடைபெற்று வருகிறதாம். புலி படத்தின் பர்ஸ்ட் லுக் இம்மாதம் வெளியாகும் என்று இப்படத்தில் நடிக்கும் ரோபோ ஷங்கர் டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Related articles

Recent articles

spot_img