ஹைதராபாத் : சத்யம் நிறுவன மோசடி வழக்கில் அதன்நிறுவனர் ராமலிங்க ராஜு உள்பட 10 பேருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கம்பெனியின் கணக்கு வழக்குகளில் மோசடி செய்த குற்றத்துக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், ராமலிங்க ராஜுக்கு ரூ. 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்று காலை 10 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம், தண்டனையை பிற்பகலில் வழங்குவதாக அறிவித்தது. 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ராமலிங்க ராஜு ஏற்கெனவே 32 மாதங்கள் சிறையில் இருந்துள்ளதால், இன்னும் 52 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டும்.
ஹனீபா மறைவுக்கு இ.கம்யூ. இரங்கல்
ஹனீபா மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளை தனது பாடல்கள் மூலம் பரப்பி வந்தவரும். தமிழ்நாடு முன்னாள் மேலவை உறுப்பினறுமான நாகூர் அனிபா மறைவிற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் குடும்பதார்களுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறன். நாகூர் அனிபா அவர்கள் பகுத்தறிவு கொள்கைகளுக்காகவும் சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும் குரல் எழுப்பியவர். தி.மு.கவின் அரசியல் கருத்துகளையும் பொதுவான நல்ல கருத்துகளையும் பாடலாக்கி, மெட்டுமைத்து இசை இசைத்து பாடியதிறன் மிக்கவர். தனது பாடல், இசை திறனானல் சிங்கபூர், மலேசியா என உலக தமிழர்களால் அறியப்பட்டவர். அவரது மறைவு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தமிழக கலை உலகத்திற்கும் பேரிழப்பாகும். – என்று கூறியுள்ளார்/
நாகூர் ஹனீபாவின் சமூக நல்லிணக்கப் பாதை போற்றுதற்குரியது: திருமாவளவன்
ஜெயகாந்தனுக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும்: திருமாவளவன்
நாகூர் ஹனீபா மரணம்: சீமான் இரங்கல்!
நாகூர் ஹனீபா மரணத்துக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இரங்கல்தெரிவித்துள்ளார்.
அதில்,
கணீர்க் குரலால் தமிழுலகைக் கட்டிப் போட்டு வைத்திருந்த பாடகர் அய்யா நாகூர் ஹனீபா அவர்கள். தந்தை பெரியாரின் பற்றாளராக அறிஞர் அண்ணாவின் வார்ப்பாக திராவிட இயக்கத்தில் காலூன்றிய அய்யா ஹனீபா அவர்கள், தன்னுடைய தனித்த குரலால் தமிழர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ‘இறைவனிடம் கையேந்துங்கள்… அவர் இல்லையென்று சொல்லுவதில்லை…’, ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’ உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களை உரக்கக் குரலில் பாடி ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் தனது கருத்தைக் கொண்டு சென்றவர் அய்யா ஹனீபா அவர்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமெடுத்த காலகட்டத்தில் தனது குரலையே ஆயுதமாகக் கொண்டு போராடியவர்.
“ செந்தமிழை மேயவந்த
இந்தி என்ற எருமை மாடே! முன்னம் போட்ட சூடு என்ன மறந்ததோ உனக்கு? என்றும் இந்தி ஏற்கமாட்டோம் ஓடிப்போ வடக்கு!”
என அய்யா பாடிய உணர்ச்சிமிகு பாடலைத் தமிழுலகம் என்றைக்கும் மறக்காது. சிம்மக் குரலால் சீரிய கருத்துகளால் தமிழ் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த அய்யா நாகூர் ஹனீபா அவர்களின் மறைவு தமிழ் உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அய்யா அவர்களின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. அய்யா அவர்கள் மறைந்தாலும் காற்று முழுக்கக் கலந்திருக்கும் அவருடைய கம்பீரக் குரல் என்றைக்கும் மறையாது.
என்று கூறியுள்ளார்.
புகையிலை எச்சரிக்கைப் படங்களை வெளியிட வலியுறுத்தி ஏப்.10ல் பாமக போராட்டம்
புகையிலை எச்சரிக்கைப் படங்களை 85% அளவில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து பாமக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இதில் அக்கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் தலைமை ஏற்கிறார்.
ஜெயகாந்தன் மறைவு: ராமதாஸ் இரங்கல்
20 தமிழர்கள் படுகொலை; பிரதமர் மௌனம் கடைபிடிப்பது ஏன்?: ராமதாஸ்
வங்கதேசத்தில் பஸ் மரத்தில் மோதி 24 பேர் பலி
டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து தென் மாவட்டமான பாரிசலுக்குச் சென்ற பஸ் ஒன்றில், 50 க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் பரித்பூர் மாவட்டம் பாங்க் என்ற பகுதியில் சென்ற போது பஸ் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 24 பேர் பலியாயினர். 22 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எழுத்துலக வேந்தன், ஜெயகாந்தன் மறைவு: கருணாநிதி இரங்கல்!
சென்னை: எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவிதுள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் தமிழ் இலக்கிய உலகத்தில் “ஜே.கே.” என்று அன்பொழுக அழைக்கப்பட்ட – எழுத்துலகச் சிற்பி, அருமை நண்பர் ஜெயகாந்தன் மறையது விட்ட செய்தியினை அறிந்து அதிச்சியுற்றேன். “துயரம் தனித்து வருவதில்லை” என்பது எவ்வளவு உண்மை! நேற்றிரவு இசைமுரசு நாகூர் அனீபா மறைந்த செய்தியைத் தொடர்ந்து ஜெயகாந்தனின் மறைவுச் செய்தி இன்று அதிகாலையில் கிடைத்தது. தொடக்கத்தில் திராவிட இயக்கத்தின்மீது ஜெயகாந்தன் கொண்டிருந்த வெறுப்பு காலப் போக்கில் மாறியது; அவருடைய அணுகுமுறையும் மாறிற்று. என்மீது பாசத்தைப் பொழியத் தொடங்கினார். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பே ஜெயகாந்தன் “இசபெல்லா” மருத்துவ மனையிலே அனுமதிக்கப் பட்டிருக்கும் செய்தியினை அறிந்து, என் மனைவி ராஜாத்தியும், என் மகள் கனிமொழியும் அவரை நேரில் சென்று பார்த்து விட்டுவந்து என்னிடம் கூறியதும், அப்போது முதலமைச்சராக இருந்த நான் உடனடியாக அவரை “அப்பல்லோ” மருத்துவ மனையில் சேர்க்கச் செய்து, சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கச் செய்தேன். உடல் நலம் அப்போது தேர்ச்சியடைந்து மருத்துவ மனையிலிருந்து வீட்டிற்குச் செல்லலாம் என்று கூறிய போது கூட, தஞ்சைப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் மா. ராஜேந்திரனிடம் “நான் வீட்டிற்குச் செல்லும்முன் கலைஞரைப் பார்த்து நன்றி கூறி விட்டுத் தான் செல்வேன்” என்று பிடிவாதமாகக் கூறி, நேரில் என்னை வந்து சந்தித்து, “என் உயிரைக் காப்பாற்றி விட்டீர்கள்” என்ற ஜெயகாந்தனின் சொற்கள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன. மத்திய அரசின் மிக உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்றவர் – பத்ம பூஷண் விருதைப் பெற்றவர் – சாகித்ய அகாடமியின் விருதைப் பெற்றவர் – “முரசொலி” அறக்கட்டளை சார்பில் இலக்கியத்திற்கான விருதைப் பெற்றவர். பெருந்தலைவர் காமராசருடன் நெருங்கிப் பழகியவர். என்னிடம் மாறாத அன்பு கொண்டவர். பல நிகழ்ச்சிகளில் என்னுடன் இணைந்து கலந்து கொண்டவர். இலக்கிய உலகில் புகழ்க்கொடி நாட்டியதோடு, திரையுலகிலும் முத்திரை பதித்தவர் அருமை நண்பர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் மறைந்தாலும், அவர் எழுதிய எழுத்துக்கள் காலத்தால் மறையாது, என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றவை. அவரை இழந்து வாடும் அவருடைய இல்லத்தாருக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய உலகத்திற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

