Home Blog Page 6117

இரண்டாக உடைந்த காம்பிர் பேட்: யுவராஜ் கிண்டல்

கோல்கத்தா: நேற்று இரவு நடந்த ஐ.பி.எல். போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பீரின் பேட் இரண்டாக உடைந்தது. இது குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் கிண்டல் செய்துள்ளார் யுவராஜ் சிங். நேற்றைய மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டியில், தொடக்க வீரராகக் களம் இறங்கிய காம்பீர் மும்பையின் வினய்குமார் வீசிய பந்தை இறங்கி வந்து அடித்தார். அப்போது அவருடைய பேட் இரண்டாக உடைந்துவிட்டது. கைப்பிடியுடன் கூடிய பேட்டின் சிறிய துண்டு மட்டுமே காம்பீர் கையில் இருந்தது. இது பற்றி யுவராஜ் சிங் தனது டுவிட்டர் தளத்தில் “இப்போது தான் இது காம்பீர் பேட் போல இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார். காம்பீரின் சிறிய உருவத்தை கிண்டல் செய்யும் வகையில் அந்த டுவிட் இருந்ததால், பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. யுவராஜ் கொஞ்சம் கிண்டர் பேர்வழி என்பதால், காம்பிர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார் என்றே சிலர் பின்னூட்டம் இட்டனர்.

நாகா வெங்கடேஷ் இயக்கும் நாரதன்

naradhan வெற்றிவேல் பிலிம் இண்டர்நேஷன்ல் வழங்கும் நாகா வெங்கடேஷ’ இயக்கும் “நாரதன்” படம் குறித்து… கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமனையும் அவரது மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் கதாநாயகன் விஷ’ணு (நகுல்), சில ரவுடிகளால் துரத்தப்படும் நாயகியை காப்பாற்றுகையில், எதிர்பாராவிதமாக பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்கிறான். நாரதன் என்ற கதாபாத்திரமாக படத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி, விஷ’ணுவின் தாய்மாமன் குடும்பத்துக்குள் புகுந்து, பல கலகங்களை ஏற்படுத்தி, இறுதியில் “நாரதன் கலகம் நன்மையில் முடியும்” என்னும் வாக்கியத்தை நினைவுகூறும் வகையில், அனைத்து பிரச்சனைகளையும் எவ’வாறு தீர்த்து வைக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் ஆக்சன் கலந்து கூறும் படமே “நாரதன்”. இப்படத்தில் நகுல், நிகிஷா பட்டேல், ஸ’ருதிராமகிருஷ’ணா, நாயகன் – நாயகியராக நடிக்க, கலகலப்பான பாத்திரங்களில் பிரேம்ஜி, ராதாரவி, MS பாஸ’கர், மயில்சாமி, வையாபுரி, “பவர்ஸ’டார்” சீனிவாசன், பாண்டு, “கும்கி” அஸ’வின் என்ற ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளனர். மேலும், பஞ’சு சுப்பு, நிழல்கள் ரவி, கவிதா, மீரா கிருஷ’ணன், சீஸர் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில், “எப்படி மனுசுக்குள் வந்தாய்” பட நாயகன் விஷ’வா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில், ரயிலில் நகுல் ஆடிப்பாடும் ஒரு குத்துப்பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. சலீம் படத்தில் “மஸ’காரா” பாட்டுக்கு நடனமாடிய அஸ’மிதா, மும்பை அழகியுடன் சேர்ந்து ஆடும் ஒரு பாடல், பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதியில், நகுல் ரவுடிகளுடன் மோதும் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி, பின்னி மில்லில் 10 நாட்களாக படமாக்கப்பட்டு பரபரப்பான முறையில் வந்திருக்கிறது. இதுதவிர, நகுல் மற்றும் ஸ’ருதி பாடும் ஒரு டுயட் பாடல், அழகுக்கு அழகு சேர்க்கும் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: இயக்கம்: நாகா வெங்கடேஷ’ ஒளிப்பதிவு: சஞ’சய் லோகநாத் இசை: மணிசர்மா கலை: லால்குடி N.இளையராஜா வசனம்: திரைவண்ணன் பாடல்கள்: விவேகா, திரைவண்ணன், சொற்கோ படத்தொகுப்பு: ஷைஜித் குமரன் சண்டைப்பயிற்சி: சுப்ரீம் சுந்தர் நடனம்: அசோக்ராஜா PRO: நிகல் தயாரிப்பு: M செல்வகுமார் மற்றும் சஜித் V நம்பியார்

காவல்துறை அடக்குமுறை: மு.க.ஸ்டாலின் கண்டனம்

காவல்துறையின் அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின். திமுக பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் முகனூலில் பதிவு செய்துள்ள கருத்து… வேளாண்மை பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று கழகத்தின் சார்பில் கோரிக்கை வைத்தும் இதுவரை அ.தி.மு.க அரசு அந்த விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கவில்லை. தற்போது நடந்து வரும் சி.பி.சி.ஐ.டி விசாரணையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. அதை விட இந்த வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி என்ற விசாரணை அமைப்பிற்கு உள்கட்டமைப்பு வசதிகளோ அல்லது போதிய எண்ணிக்கையில் போலீஸ் அதிகாரிகளோ – ஏன் இது போன்ற வழக்குகளை விசாரிக்கும் அளவிற்கு மன உறுதியோ அந்த அமைப்பிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் நீதிபதி அவர்கள் “சி.பி.சி.ஐ.டி. அமைப்பின் புலனாய்வு திறமை” பற்றியே சந்தேகம் எழுப்பியுள்ளார். குறிப்பாக வருமான வரித்துறையின் ஓய்வு பெற்ற இணை ஆணையர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இரட்டைக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பத்து வருடமாகியும் சி.பி.சி.ஐ.டி.யால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் இப்படிப்பட்ட கருத்தைக் கூறியுள்ள நீதிபதி அவர்கள், “இந்த சூழ்நிலையில் சி.பி.ஐ. விசாரணை கோருவதைத் தவிர தமிழக மக்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சி.பி.சி.ஐ.டி. அமைப்பின் விசாரணை திருப்திகரமாக இல்லை என்பது ஒரு புறமிருக்க, அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து அதிகாரிகளை சட்டவிரோதமான காரியங்கள் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமையோ முற்றிலும் சீர்குலைந்து விட்டது. ஆளுங்கட்சியை விமர்சிப்பவர்கள் மீது அ.தி.மு.க. அரசு காவல்துறையைப் பயன்படுத்தி அடக்குமுறை ஏவுகிறது. இது போன்ற அடக்குமுறைக்கும், தவறான காரியங்களுக்கும் காவல்துறையைப் பயன்படுத்தும் அ.தி.மு.க. அரசுக்கும் தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆட்சியில் நடக்கும் அதிகாரிகளின் மரணங்களுக்கு நீதி கிடைக்காமல் போவதை தி.மு.க என்றைக்கும் அனுமதிக்காது. வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நீதி கிடைக்கும் வரை திராவிட முன்னேற்றக் கழகம் அயராது போராடும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு: டிராய் முடிவு

smartphone புது தில்லி: செல்போன் கட்டணங்களுக்கான ரோமிங் கட்டணங்களை இன்று டிராய் குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்குள் எங்கு சென்றாலும் இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் கால்களை குறைவான கட்டணத்தில் பேச முடியும். டிராய் வெளியிட்டுள்ள திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தின் படி ரோமிங்கில் இருக்கும்போது, லோக்கல் அவுட்கோயிங் வாய்ஸ் கால்களுக்கான கட்டணம் நிமிடத்துக்கு 1 ரூபாயிலிருந்து 0.80 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. நீண்ட தூர அவுட்கோயிங் வாய்ஸ் கால்களுக்கான கட்டணம் 1.50 ரூபாயிலிருந்து 1 ரூபாய் 15 காசுகளாகவும், இன்கமிங் வாய்ஸ் கால்களுக்கான கட்டணம் 0.75 பைசாவிலிருந்து 0.45 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது. ரோமிங்கில் உள்ளபோது லோக்கல் அவுட்கோயிங் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டணம் 1.00 ரூபாயிலிருந்து 0.25 பைசாவாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல் நீண்ட தூர அவுட்கோயிங் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டணம் 1.50 ரூபாயிலிருந்து 0.38 பைசாவாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது.

‘தாலியறுக்கும்’ வீரமணியைக் கைது செய்யும்வரை போராடுவோம்: தேவநாதன் யாதவ்

devanathan-vanathi சென்னை: தாலி அறுக்கும் போராட்டத்தை அறிவித்துள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் டாக்டர் தி.தேவநாதன் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திராவிடர் கழகம் சார்பில் வரும் 14ஆம் தேதி தாலி அறுக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்தும், போராட்டத்தற்கு தடை விதிக்க கோரியும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் டாக்டர் தி. தேவநாதன் யாதவ் தலைமையில், சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய டாக்டர் தி. தேவநாதன் யாதவ், இந்து கடவுள்களை குறிவைத்து, விமர்சனம் செய்வது, கொச்சைப்படுத்துவது, போன்றவற்றின் மூலம் வயிற்று பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கும் கி. வீரமணி, தைரியமாக வெளியே நடமாடிக்கொண்டிருக்கிறார் என்றும், இதனை தாலிக்குத் தங்கம் வழங்கும் தமிழக அரசும், வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார். கி. வீரமணி போன்றவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ, இந்த அரசுக்கு தைரியமில்லை என்றும், வீரமணிக்கு இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தாலி அறுப்பது என்பது கணவரின் மறைவுக்கு பின்பு, ஒரு மனைவி செய்வது என்றும், அது அவர்களுடைய விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார். இந்து மதத்துடன் மட்டுமே மோதும் வீரமணி, இஸ்லாம், கிறிஸ்துவம் போன்ற பிற மதங்களுடன் மோதுவது இல்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்து மதத்தை விமர்சிக்கும் போக்கை மாற்றிக்கொள்ள வீரமணி தவறினால், லட்சக்கணக்கானோரை திரட்டி பெரியார் மாளிகையை முற்றுகையிட்டு, அவரை அங்கிருந்து வெளியேற்றப்போவதாக அவர் எச்சரித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் பேசிய தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் பிரிவு தலைவரும், வசந்த் தொலைக்காட்சி நிறுவனருமான வசந்தகுமார், இந்தியன் என்ற முறையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இந்தியா பல மதங்கள் மற்றும் இன மக்களை கொண்ட நாடாகும் என்றும், இதனை கொச்சைப்படுத்தும் வகையிலும், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையிலும் தாலி அறுக்கும் போராட்டத்தை கி.வீரமணி அறிவித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கூறினார். தமிழக பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் பேசுகையில், தமிழகத்தில் பகுத்தறிவை மக்களிடம் கொண்டு செல்வதற்காக தொடங்கப்பட்ட திராவிடர் கழகம், இந்து கடவுள்களையும் சின்னங்களையும் தொடர்ந்து அவமதித்து வருவதாக தெரிவித்தார். கேள்வி கேட்கும் கருத்து சுதந்திரத்தை இந்து தர்மம் அனுமதிக்கிறது என்று அவர் கூறினார். முதலில் தாலி அறுக்கும் போராட்டம் என்று அறிவித்த கி.வீரமணி, பின்னர் எதிர்ப்பை கண்டு தாலி அகற்றும் போராட்டம் என்று திருத்தம் செய்ததை அவர் சுட்டிக்காட்டினார். கிறிஸ்தவர்கள் தாலிக்கு பதிலாக சிலுவையை அணிகிறார்கள் என்றும், இதேபோல் இஸ்லாமியர்களும் மங்கலநானை அணிவதாகவும் தெரிவித்தார். தமிழ் சமுதாயம் போதைக்கும் இலவசத்திற்கும் அடிமையாகிவிட்டதாகவும், இந்த நிலை மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறுபான்மை புரட்சி இயக்கத் தலைவர் லியாகத் அலிகான், ஆய்தம் இயக்க நிர்வாகி நாதன், திருமதி. அனுசந்தரமௌலி, ராதாராஜன், ஆகியோர் பேசினர். முன்னதாக குத்துவிளக்கு ஏற்றி, இறைவாழ்த்துடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் அம்மா திட்டம் : ஏப்.,10 அன்று நடைபெறும் இடங்கள்

சென்னை: சென்னை மாவட்டத்தில் ‘அம்மா திட்டம்’ நடைபெறும் இடங்கள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல் அளித்துள்ளார். ‘அம்மா திட்டம்’ (அனைத்து கிராமத்திலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்கல் திட்டம்) சென்னை மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் வருகின்ற 10.04.2015 வெள்ளிக்கிழமை அன்று கீழ் குறிப்பிட்டுள்ள 5 வட்டங்களில் ‘அம்மா திட்டம்’ சிறப்பு முகாம்கள் நடைபெறும் என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இம்முகாம்களில் தொடர்புடைய கோட்டத்திற்குள் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், வட்டம்           நடைபெறும் இடம்              மனு அளிக்க வேண்டிய கோட்டம் மாம்பலம் : செயற்பொறியாளர் அலுவலகம். சென்னை மாநகராட்சி. 139வது வார்டு. ராகவ ரெட்டி காலனி. ஜாபர்கான்பேட்டை. சென்னை-83 கோட்டம் – 139 மண்டலம் – 10 வருவாய் ஆய்வாளர் – 3 தண்டையார்பேட்டை : குழந்தைகள் நல காப்பகம் கட்டிடம் நாகூரான் தோட்டம் பகுதி1. எஸ’,என்,செட்டி தெரு. புதுவண்ணை. சென்னை 81, கோட்டம் – 39 மண்டலம் – 4 வருவாய் ஆய்வாளர் -1 பெரம்பூர்: சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளர் அலுவலகம். பிருந்தா தியேட்டர் எதிரில். ராஜா தெரு. எம்,,எச்,சாலை. சென்னை-11, கோட்டம் – 69 மண்டலம் – 6 வருவாய் ஆய்வாளர் – 3 மயிலாப்பூர்: மாநகராட்சி சமுதாயநலக்கூடம். மீர்பக்ஷிஅலி தெரு. இராயப்பேட்டை..சென்னை-14 கோட்டம் – 115 மண்டலம் – 4 வருவாய் ஆய்வாளர் – 2 எழும்பூர்: சென்னை மாநகராட்சி அலுவலகம். புலியூர் பிரதான சாலை. டிரஸ்ட்புரம் 2வது தெரு. கோடம்பாக்கம். சென்னை-24 கோட்டம் – 112 மண்டலம் – 9 வருவாய் ஆய்வாளர் – 2 மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் எ,சுந்தரவல்லி. இ,ஆ,ப, தெரிவித்துள்ளார்கள்,

ஆந்திர அரசைக் கலைக்கக் கோரி திருமாவளவன் சாலை மறியல்: கைது

thriumavalavanசென்னை: ஆந்திர அரசைக் கலைத்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தன் கட்சி தொண்டர்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதை அடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டநூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

யாகூப் மேமன் மரண தண்டனை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

புது தில்லி: 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றவாளி யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது . மும்பையில் கடந்த 1993-இல் நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பு சம்பவத்தில் 257 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். 700க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் கூட்டாளியான யாகூப் மேமன் உள்பட 11 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கடந்த 2013 மார்ச் 21ஆம் தேதி உறுதி செய்தது. மற்ற 10 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது. யாகூப் மேமன் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து மும்பை ‘தடா’ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. மும்பை தாக்குதலுக்கு நிதி ஏற்பாடு செய்தல், கிரிமினல் சதி செய்தல் போன்ற குற்றச்சாட்டுகள் யாகூப் மேமன் மீது பதிவு செய்யப்பட்டன. இதனையடுத்து யாகூப் மேமன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இருப்பினும் 2013ல் யாகூப் மேமனின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் யாகூப் மேமன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவில், “குடியரசுத் தலைவரால் கருணை மனு தள்ளுபடியான நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணைகள் நீதிபதிகளின் அறைகளில் ரகசியமாக நடத்தப்படுகிறது. இந்த நடைமுறையை கைவிட்டு பகிரங்க விசாரணை நடத்த உத்தரவிடப்பட வேண்டும். ஏறக்குறைய ஆயுள்தண்டனைக்கு நிகராக 20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் எனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யவேண்டும். ஒரே குற்றத்துக்காக ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் மரண தண்டனையும் என இரு தண்டனைகளை அளிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்பதால் இதை உச்ச நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்’ என்று யாகூப் மேமன் தரப்பில் கூறப்பட்டது. நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சி.நாகப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இந்த மனு திங்கள்கிழமை விசாரிக்கப்பட்டது. அப்போது யாகூப் மேமன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உபமன்யு ஹசாரிகா 2000த்தில் தில்லி செங்கோட்டை மீதான தாக்குதல் வழக்கில் குற்றவாளியான முகமதுஆரிப் தொடர்பான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியதுபோல இந்த வழக்கின் விசாரணையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று கோரினார். இதனை ஏற்ற நீதிபதிகள், யாகூப் மேமனின் இந்த மனுவையும் தில்லி செங்கோட்டை தாக்குதல் வழக்குடன் சேர்த்து விசாரிக்கவும், யாகூப் மேமன் மரண தண்டனையை நிறைவேற்ற இடைக் காலத் தடையும் விதித்தனர். இதையடுத்து, மரண தண்டனையை மறு சீராய்வு செய்யக் கோரும் யாகூப் மேமன் மனுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகாராஷ்டிர சிறப்புப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதிடப் படடது. இந்நிலையில் யாகூப் மேமன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. நீதிபதி அனில் தவே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், யாகூப் மேமனின் மறு ஆய்வு மனுவை வியாழக்கிழமை இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அது தன் உத்தரவில்,  யாகூப் மேமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்வதற்கான எந்தத் தகுதியும் இந்த வழக்கில் இல்லை என்று தெரிவித்தது. இதைஅடுத்து உச்ச நீதிமன்றம் யாகூப் மேமனின் மரண தண்டனையை உறுதி செய்தது.

கற்பித்தலில் புதுமை : தேவகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை சுமார் 1320 பள்ளிகளில் இப்பள்ளி ஒன்று மட்டுமே தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. sivagangai-school நடுநிலைப் பள்ளியில் காணொலி ஆவணப் படப் பிடிப்பு தமிழக அரசு ஏற்பாடு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் காணொலி ஆவணப் படம் எடுக்கபட்டது. தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகளின் படி கற்றல் கற்பித்தல் புதுமை புனைதல்மற்றும் கல்வி சார் கணினி வளங்கள்  சேகரிக்க  இணையதள பக்கத்தின் மூலம்  தமிழ்நாடு முழுவதிலும்  தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை உள்ள சுமார் ஐந்தரை லட்சம் ஆசிரியர்களில்  முதற்கட்டமாக 75 ஆசிரியர்கள்தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.75 ஆசிரியர்களில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஒருவர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்  தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை சுமார் 1320 பள்ளிகளில் இப்பள்ளி ஒன்று  மட்டுமே  தேர்வாகி உள்ளதுகுறிப்பிடத்தக்கது. புதுமை புனைதல் என்னும் பொது  தலைப்பின் கீழ் காணொலிஆவணம் செய்யும் பொருட்டு இயக்குநரின்  ஆணைப்படி மாநிலக் கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனக் குழுவைச் சேர்ந்த படப்பிடிப்புக்குழு  சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்  பள்ளிக்கு வருகை  புரிந்தனர். படப்பிடிப்பு குழுவை சார்ந்த பட  இயக்குனர் ஜெரோம், கேமராமேன்கள் ஆண்டனி மற்றும் ஜான் ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர்,மாணவ,மாணவிகளிடம் காட்சிகளை விரிவாக எடுத்துக் கூறினார்கள்.பிறகு ஆவணப்படம் எடுக்கப்பட்டது. பட இயக்குனர் பேச்சு இது குறித்து பட இயக்குனர் ஜெரோம் கூறியதாவது,தமிழக அரசின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவன இயக்குனரின் உத்தரவின்படி சிவகங்கை மாவட்டத்தில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியை அனுபவம் புதுமை என்கிற தலைப்பில் ஆவணப்படமாக எடுக்க இங்கு வந்துள்ளோம்.தமிழக அரசு  மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கற்றல் கற்பித்தலில் புதுமைகள் செய்யும் ஆசிரியர்களை தேர்வு செய்து அதனை ஆவணப்படமாக எடுத்து வெளி உலகுக்கு ஆசிரியர்களின் பன்முக  திறமைகளை வெளி காண்பிக்கும்  நோக்கில் இதனை செய்து வருகிறது என்றும்,இது ஒரு புதிய முயற்சி என்றும் கூறினார். தலைமை ஆசிரியர் பேச்சு இது குறித்து தேர்வு பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் கூறும்போது,  தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகளின் படி கற்றல்கற்பித்தல் புதுமை புனைதல் மற்றும் கல்வி சார் கணினி வளங்கள்  சேகரிக்க இணையதள பக்கத்தின் மூலம் விண்ணப்பித்திருந்தேன்.தமிழ்நாடு முழுவதிலும்தொடக்கக்கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை உள்ள சுமார் ஐந்தரை லட்சம் ஆசிரியர்களில் முதற்கட்டமாக தேர்வாகி உள்ள 75  ஆசிரியர்களில் நானும் ஒருவன் என்கிறபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.மேலும் சிவகங்கை மாவட்டத்தில் முதற்கட்டமாக இப்பள்ளி மட்டுமே தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.   அனுபவம் புதுமை இப்போது இங்கு நடைபெற்றுள்ள காணொலி ஆவணப் படப் பிடிப்பு “அனுபவம் புதுமை” என்கிற தலைப்பில் படமாக்கபடுகிறது.இளம் மாணவர்களுக்கு கல்வியின் அனுபவம் புதுமையாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில் கடந்த ஓராண்டுக்கும் முன்பு இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவி ஏற்றுக்கொண்டேன். கற்றல் புதியது பொதுவாக மாணவர்களை வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் அடைத்து வைக்கக் கூடாது.மாணவர்களுடைய விசாலப் பார்வையானது புத்தகங்களுக்குள் மட்டும் முடிந்து விடக் கூடாது,அதையும் தாண்டி கற்றலானது ஒவ்வொரு விசயத்திலும் அனுபவமாக இருக்க வேண்டும்,புதியதாக இருக்க வேண்டும்,புதுமையானதாக இருக்க வேண்டும். இசை ,நடனம் மூலம் புதுமை  கற்பித்தல் இப்பள்ளியில் மாணவர்களுக்கு திருக்குறள்,அபிராமி அந்தாதி போன்றவற்றை இசையோடு நடனம் மூலம் புதிய முறையில் பல்வேறு கலைகளை கற்பித்து வருகிறோம்.கலைகளின் மூலம்  கற்கும் இளம் வயது மாணவர்கள் இது தொடர்பான வல்லுனர்கள் வரும்போது ஒன்றாம் வகுப்பு,இரண்டாம் வகுப்பு  மாணவ,மாணவியர் கூட அவர்களிடம் மிக எளிதாக கேள்விகள் கேட்டு பதில் பெறுவதை பார்த்து,இது தங்கள் அனுபவத்தில் புதுமையாக உள்ளது எனக் கூறி வல்லுனர்கள்  வியப்பில் செல்கின்றனர். மாணவர்களுக்கு பல்வேறு துறைகளிலும் உள்ள நிபுணர்களை பள்ளிக்கே வரவழைத்து குறிப்பாக தமிழக புள்ளியல் துறையின் முதன்மை செயலர் இறையன்பு இ .ஆ.ப.,தேவகோட்டை உதவி கலெக்டர் சிதம்பரம்,கணேசன், தமிழ்நாடு மின்சார துறை பொறியாளர் சந்திரசேகர்,பொம்மலாட்ட ஆசிரியர் தாமஸ் ஆண்டனி ,திருக்குறள் நடனம் சொல்லும் சுந்தர மகாலிங்கம்,தமிழ்நாடு அறிவியல் மையத்தின் திருச்சி அண்ணா கோளரங்க இயக்குனர் லெனின் தமிழ் கோவன் உட்பட பல்வேறு நிபுணர்கள் பள்ளிக்கு வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி  புதிய அனுபவத்தை வழங்கியதுடன் அவர்களிடம் பேசியவர்களுக்கும் புதிய அனுபவம் கிடைத்ததாக கூறி செல்கின்றனர். தினம்தோறும் அனுபவ கற்றல் இப்பள்ளியில் பயின்று வரும் இளம் வயது மாணவர்களுக்கு கல்வியை அனுபவத்தோடு கற்று கொடுத்து வருகிறோம்.கற்றலை அனுபவத்தோடு கற்கும்போது வாழ்க்கையின் எந்த சுழலிலும் மறக்காது.வாழ்க்கையின் என்றுமே மறக்க கூடாது என்ற நோக்கில் தான் கல்வி சார்ந்த நிறைய நிகழ்வுகளை பள்ளியிலும் ,களப்பயணமாக புத்தக திருவிழா,அஞ்சலகம்,வங்கி,நூலகம்,அறிவியல் கல்லூரி ஆய்வகங்கள் என முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்று வெளியிலும் கற்றலின் அனுபவத்தை புதுமையாக்கி வருகின்றோம் .மாணவர்களுக்கு புதிய ,புதிய அனுபவங்களை தினம்தோறும் கற்று கொடுத்து வருகிறோம். நேரடியாக மாணவர்களை தேடி செல்லல்   எந்த விதமான ஏற்ற தாழ்வுகளும் இருக்கக் கூடாது என்ற நோக்கில் அமைக்கப்பட்டது தான் பள்ளிக் கூடம்.தமிழக அரசின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் எங்கள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் நேரடியாக சமுதயாத்தில்  மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிகுறவ சமுதாய இன மக்கள்,ஜோசியம் பார்க்கும் சமுதாய இன மக்கள் என அவர்களின் இருப்பிடம் தேடி சென்று கலை நிகழ்ச்சிகள் வாயிலாக கல்வியின்  புதிய அனுபவத்தை அவர்களுக்கு ஏற்படுத்தி  அவர்கள் பிள்ளைகளையும் இப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வருகிறோம் என்பதை பெருமையுடன் சொல்ல முடியும். வார,வாரம் மற்றும் மாத திருவிழாக்கள்   இப்பள்ளியில் வாரா,வாரம் மாணவர்களுக்கு பேச்சு,கவிதை,ஓவியம்,மனக்கணக்கு ,புதிர்கணக்கு,வாசிப்பு போன்று பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை மாதம் ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதனை வாரம்தோறும் போட்டியாக நடத்தி மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறோம்.  மேலும் மாதா,மாதம் பாடங்கள் சார்ந்த வினாடி வினா மாதம் ஒரு பாடம் என எடுத்துக் கொண்டு மாத கடைசியில் போட்டிகள் நடத்தி வருகிறோம்.இதனில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பங்கு கொண்டு வெற்றி பெற்று பரிசு பெறுகின்றனர்.ஒரு முறை பரிசு பெற்ற மாணவர் அடுத்த முறை பார்வையாளராக  மட்டுமே இருக்க முடியும் என தெரிவித்துள்ளதால் அனைத்து மாணவர்களும் போட்டிகளில் கண்டிப்பாக பங்கெடுத்து வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை மாணவர்களின் இளம் வயது மனதில் விதைத் துள்ளோம்.இத்திருவிழாக்கள் மாணவர்கள்  மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்களின் திறமைகளை ஊடகங்களின் வாயிலாக வெளிபடுத்துதல் இப்பள்ளி மாணவர்கள் தாங்கள் பெற்ற அனுபவத்தை நாளிதழ்களில்,வார இதழ்களில் ,மாத இதழ்களில்,வானொலி,தொலைக்காட்சி போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக கட்டுரைகளாக ,கவிதைகளாக,ஓவியமாக ,கதைகளாக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி இதற்காக தமிழக அரசுக்கும்,பள்ளி நிர்வாகத்துக்கும்,சென்னையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற கற்றல் கற்பித்தல் புதுமை மற்றும் கல்விசார் கணினி வளங்கள் சேகரித்தல் பணிமனையின்  பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் DIET விரியுரையாளர் ஜூலியஸ், காணொளி வடிவமைத்தல் குறித்து தெளிவாக எடுத்து கூறிய ரெஜி ,ஆவணப் பட இயக்குனர் ஜெரோம்,ஆசிரியைகள்  சித்ரா குமரேசன்,உமா மகேஸ்வரி ,ஆசிரியர் அன்பழகன் ,எனது குழு ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியை சப்ரன் பானு, எனது குடும்பத்தினர்,நான் பணி ஆற்றும் பள்ளியின் ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவர்கள்,பெற்றோர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.   பட விளக்கம் :சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவனம் சார்பாக காணொலி ஆவணப் படப் பிடிப்பு நடை பெற்றது.

லக்வியின் தடுப்புக்காவல் ரத்து

laqviலாகூர்: 26/11 மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஸாகியுர் ரெஹ்மான் லக்விக்கு லாகூர் உயர் நீதிமன்றம் முன்னர் வழங்கியிருந்த தடுப்புக் காவலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.