Home Blog Page 6116

சந்திரபாபு நாயுடு உருவபொம்மை எரிப்பு

naamtamil.
சந்திரபாபு நாயுடு உருவபொம்மை எரிப்பு
சிவகிரி:
ஆந்திராவில் 20தமிழர்களை சுட்டுக்கொன்ற காவல்துறையை கண்டித்து எராளமான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன.அதன் தொடர்ச்சியாக நெல்லைமாவட்டம் செங்கோட்டையில் தொலைபேசி அலுவலகத்தை  முற்றுகையிட்டு சந்திரபாபு நாயுடு உருவபொம்மையை எரிக்க முயன்ற 15க்கும் மேற்ப்பட்டோர் கைது செய்யப்பட்டனர். வாசுதேவநல்லூர் ஒன்றியம் சிவகிரி பேரூராட்சியில்சந்திரபாபு நாயுடுவின் உருவபொம்மையை எரித்த நாம்தமிழர் கட்சியின்
சீனிவாசன் இசை சி.ச.மதிவாணன்
சாமி.மு கருப்பசாமி உள்ளிட்ட  30 நாம்தமிழர்கள்கட்சியினர்
 கைது செய்யப்பட்டனர்.
படம்;மாரியப்பன் -வாசு

விஜயகாந்த் உதவி வழங்குவதா? : முந்திக் கொண்ட அதிமுக

சென்னை திருப்பதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கச் சென்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அதன்படியே, பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தர்மபுரி மாவட்டம் அரூர் சென்று 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி அளித்தார். இதனிடையே ஆந்திர போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் நிதி உதவி வழங்க அரூர் சென்று கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியான சில நிமிடங்களில் அ.தி.மு.க சார்பில் நிதி உதவி அறிவிப்பு வெளியானது.

ஸ்ரீவைகுண்டம் அணை தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

vaiko   ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாரக்கோரி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் தொடர்ந்த பொதுநல வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி நதியின் குறுக்கே 1869ம் ஆண்டு ஆங்கிலேயே அதிகாரி பக்கிள்துரை என்பவரின் முயற்சியால் 8அடி ஆழத்துடன் ஸ்ரீவைகுண்டம் அணை கட்டப்பட்டது. அணையின் வடகால், தென்கால் வாய்கால்கள் மூலமாக 25ஆயிரத்து 560 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதனைநம்பி பலஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் அணை கட்டப்பட்டு சுமார் 145வருடங்கள் கடந்துவிட்டது. பராமரிப்பின்றி மணல்மேடாகி தூர்ந்துபோன அணையால் மழைக்காலங்களில் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க வழியின்றி ஆண்டுக்கு சுமார் 15முதல் 25டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. வீணாகும் தண்ணீரால் கோடைகாலங்களில் தண்ணீரின்றி பயிர்கள் கருகி, விவசாயப்பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனைதவிர்த்து, விவசாயிகள், பொதுமக்களை பாதுகாத்திடும் பொருட்டு ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாரவேண்டும் என்று விவசாய சங்கங்கள் மற்றும் மதிமுக சார்பில் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பலனாக ஸ்ரீவைகுண்டம் அணை ரூ.4.44 கோடி செலவில் தூர் வாரப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிகுமார் கடந்த 2014ம் ஆண்டு அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானவுடன் வனத்துறை ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்கு எங்களிடம் அனுமதி பெறவில்லை என்று கூறியது. இதற்கிடையே வனத்துறையிடம் அனுமதி பெறப்பட்டு விட்டது என்றும், இதற்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது என்றும் கூறிய மாவட்ட ஆட்சித்தலைவர் ரவிகுமார் 10தினங்களில் அணையை தூர் வாரும் பணிகள் துவங்கப்படும் என்றும் கடந்த 20.06.2014 அன்று அறிவித்தார். அவர் அறிவித்து 10மாதங்கள் கடந்தும் அணை தூர் வாரப்படவில்லை. தற்போது ஏப்ரல், மே மாதங்கள் கோடை கால மாதங்களாகும். இம்மாதங்களில் தாமிரபரணியில் தண்ணீர்வரத்து குறைவாகவே இருக்கும். எனவே இம்மாதங்களில் அணையின் தூர் வாரும் பணிகளை எளிதில் மேற்கொள்ளமுடியும். இதற்கேற்ப 2015ம் ஆண்டின் மழைக்காலத்திற்கு முன்பாக ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வார உத்தரவிடக்கோரி தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க செயலாளர் எஸ்.ஜோயல் சென்ன¬யிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த பொதுநல வழக்கு சென்னையிலுள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதி நீதியரசர் ஜோதிமணி மற்றும் ஆர்.நாகேந்திரன் அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று(09.04.2015) விசாரணைக்கு வந்தது. மனுதாரரான மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜர் ஆனார். விசாரணையின் முடிவில், நீதிபதிகள் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவது தொடர்பான ஆவணங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் ஒருவார காலத்திற்குள் மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்து அதற்கான அனுமதியை பெறவேண்டும். மேலும், ஏப்ரல் 30ம் தேதிக்குள் ஸ்ரீவைகுண்டம் அணையை தூர் வாருவதற்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் பரீசிலனை செய்து அணையை தூர் வாருவது தொடர்பான தகுந்த உத்தரவினை பிறப்பித்திடவேண்டும். இதுதொடர்பான விரிவான அறிக்கையினை நீதிமன்றத்திலும் ஏப்ரல் 30ம் தேதி தவறாமல் தாக்கல் செய்திடவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் இந்த அதிரடி உத்தரவால் ஸ்ரீவைகுண்டம் அணைக்கு விடிவுகாலம் பிறந்து விரைவில் தூர் வாரப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஜெயலலிதா கருத்து

சென்னை: ஆந்திர போலீஸாரின் நடவடிக்கை சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது என்றும், ஆந்திர முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். அதிமுக., பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு மற்றும் ஈசகுண்டா பகுதியில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் 7.4.2015 அன்று நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சேலம், தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சார்ந்த 20 பேர் உயிரிழந்தனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனையும், துயரமும் அடைந்துள்ளேன். தற்போது ஊடகங்கள், பொது நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, ஆந்திர காவல் துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானது தானா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது. இறந்த தொழிலாளர்கள் சட்டத்திற்கு விரோதமாக செம்மரக் கடத்தலில் ஈடுபட்டிருந்திருப்பார்கள் என்று கருதினாலும், செம்மரக் கடத்தல் தடுப்புப் படையினர் தேவையான அளவுக்கு மட்டுமே பலப்பிரயோகம் செய்தார்களா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது. ஆந்திர அரசு உண்மை நிலையை அறிவதற்குத் தேவையான விசாரணையை நடத்திட வேண்டுமென்றும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக இரண்டு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்து, காசோலையை வழங்குவார்கள். என்று கூறியுள்ளார்.

செங்கோட்டை-புனலூர் அகலரயில்பாதை பணி முடிய 2ஆண்டுகள் ஆகும்

00219_mpeg2video தென்காசி: விருதுநகர் , சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களை நவீன கண்ணாடி இழை கேபிள் மூலம் இணைக்க ரூபாய்.2.46 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் கடந்த மாதம் முடிந்தன. அதனைத் தொடர்ந்து , தென்காசி ரயில் நிலையத்தில் ஆப்டிக்கல் அறை  திறப்பு விழா இன்று  நடைபெற்றது. தென்னக ரயில்வே தலைமை சிக்னல் கட்டுப்பாட்டு பொறியாளர் சிவா பிரசாத் அதனைத் திறந்து வைத்தார். மதுரை ரயில்வே கோட்ட மேலாளர்.சுனில்குமார் கார்க் நிருபர்களிடம் கூறும் போது: பி.எஸ்.என்.எல்.சேவையைப்போல் இண்டர் நெட் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கும் வகையில் இந்த ஆப்டிக்கல் இணைப்பு அரை தொடங்கப் பட்டுள்ளது.இதன் மூலம் ரயில்வேக்கும்,மக்களுக்கும் பல்வேறு வசதிகள் கிடைக்கும், செங்கோட்டை முதல் புனலூர் வரை நடக்கும் அகல ரயில்பாதை பணிகள் முடிய இன்னும் 2ஆண்டுகள் ஆகும்.. என்றார். 00222_mpeg2video 00238_mpeg2video

பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிப்பு?

பொறியியல் படிப்புக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  இதற்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் துரிதமாக மேற்கொண்டு வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிளஸ்-டூ தேர்வு மார்ச் 31-ம் தேதி முடிவடைந்தது. தற்போது விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 12-ம் வகுப்பு முடிக்கும் மாணவ,மாணவிகளில் பெரும்பாலானோர் பொறியியல் படிப்பில் சேர விரும்புகிறார்கள். தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் உள்ள 2 லட்சம் பிஇ, மற்றும் பிடெக் இடங்களில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படும். இந்த கலந்தாய்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த ஆண்டு ஆன் லைனில் விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பெரும்பான்மையான கிராமப்புற மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் அச்சடிக்கப்பட்ட விண்ணப்ப முறையை பின்பற்றுமாறு அரசு அறி வுறுத்தியது. எனவே, விண்ணப்பிக்கும் முறையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பிளஸ் டூ தேர்வு முடிவு மே மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவு வெளியாவதற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு முன்னர் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

கோடை விடுமுறைக்காக அரசு மேல்நிலைப்பள்ளிகள் ஏப். 22ல் மூடப்பட்டு ஜூன் 1ல் திறக்கும்

அரசு மேல்நிலைப்பள்ளிகள் 22-ந் தேதியுடன் முடிவடைகின்றன. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ந் தேதி திறக்கப்படுகின்றன என பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 35 ஆயிரத்து 177 தொடக்கப்பள்ளிகளும், 9 ஆயிரத்து750 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. 5 ஆயிரத்து 602 உயர்நிலைப்பள்ளிகளும், 6 ஆயிரத்து 299 மேல்நிலைப்பள்ளிகளும் இருக்கின்றன. இந்த பள்ளிகளில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியைகள் வேலை பார்க்கிறார்கள். ஒரு கோடியே 40 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி தொடங்கியது. அந்த தேர்வு நாளை (வெள்ளிக்கிழமை) சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடைகிறது. ஏற்கனவே பிளஸ்-1 தேர்வு நடந்து முடிந்துவிட்டது. 6-வது முதல் 8-வது வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு தேர்வு வருகிற 20-ந் தேதிமுடிவடைகிறது. ஜூன் 1-ந் தேதி திறக்கின்றன ஆனால் 22-ந் தேதி அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் முடிவடைகின்றன. 23-ந் தேதி முதல் மே 31-ந் தேதி முடிய கோடை விடுமுறையாகும். தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளுக்கு 30-ந் தேதி வரைபள்ளிக்கூடங்கள் செயல்பட உள்ளன. அந்த பள்ளிக்கூடங்களுக்கு மே மாதம் 1-ந் தேதி முதல் மே மாதம் 31-ந் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட உள்ளது.தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 1-ந் தேதி திறக்கின்றன. இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்

ஏப்ரல் 11-ல் பெட்ரோல் பங்க்கள் வேலைநிறுத்தம்

சென்னை: ஏப்.11 ஆம் தேதி பெற்றோல் பங்க்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. விளிம்புத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அன்று போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெட்ரோல் பங்குகள் அறிவித்துள்ளன.

பலியானவர் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரி பிணத்துடன் உறவினர்கள் மறியல்

கண்ணமங்கலம்: பலியானவர்களின் உடல்களை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரி, பிணத்துடன் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு வனப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் பலியான திருவண்ணாமலை வேட்டகிரி பாளையத்தைச் சேர்ந்த சசிக்குமார், முருகன், பெருமாள் ஆகியோர் உடல்கள் சொந்த ஊருக்கு வந்தன. 3 பேரின் உடல்களைக் பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் 3 பேரின் உடல்களையும் எடுத்துச் சென்று, படவேடு பிரதான சாலைக்கு ஊர்வலமாகக் கொண்டு வந்தனர். உடல்களை நடுவில் வைத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். பிணத்தை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டத்தால் வேலூர்–திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்குகிறது.எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மார்ச் 19-ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 10-ஆம் தேதி வரை இத்தேர்வு நடைபெறுகிறது. இதன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் ஏப்ரல் 20-ஆம் தேதி  தொடங்குகிறது.