Home Blog Page 6115

ஏமனில் இருந்து மீட்கப் பட்ட 3 நாள் சிசு

incubator-baby-yeman போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் இருந்து மூன்றே நாளான பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப் பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டது. ஏர் இந்தியா விமானம் மூலம் இன்குபேட்டரில் வைத்து, டாக்டர் ஒருவர் துணையுடன் பத்திரமாக அந்தக் குழந்தை கொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தத் தகவலை சையத் அக்பருத்தீன் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.  

பண்டிட்களுக்கு தனி நகரியம்: மத்திய அரசி நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை

புது தில்லி: கடந்த செவ்வாய்க்கிழமை புது தில்லியில் பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முப்தி முகமது சயீத், காஷ்மீர் பண்டிட்டுகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக தனி நகரியம் அமைக்கப்படும், அதற்குத் தேவைப்படும் நிலத்தை மாநில அரசு வழங்கும் என்று கூறியிருந்தார். ஆனால், வியாழக் கிழமை நேற்று சட்டப் பேரவையில் பேசிய முப்தி முகமது சயீத், காஷ்மீரில் பண்டிட்களுக்கு தனிக் குடியிருப்புகள் அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை, அவர்கள் அனைவருடனும் சேர்ந்துதான் வாழ வேண்டும் என்று தெரிவித்தார். இந்தப் பிரச்னை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, காஷ்மீர் பண்டிட்டுகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக, தனி நகரியம் அமைப்பது தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பை மட்டுமல்லாது, அங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, ஒரு செயல்திட்டம் உருவாக்கப்படும் என்றார்.

பண்டிட்களுக்காக தனிக் குடியிருப்பு திட்டம் இல்லை: முப்தி முகமது சயீத்

mufti-mohammed-syed ஜம்மு: காஷ்மீர் பண்டிட்டுகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக தனிக் குடியிருப்பு அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீது தெரிவித்தார். வியாழக்கிழமை நேற்று அவர் சட்டப்பேரவையில் பேசியபோது, [su_quote]காஷ்மீரில் பண்டிட்களுக்காக தனிக் குடியிருப்புகளை அமைத்துக் கொடுப்பது குறித்து மத்திய அரசுக்கு எந்த வாக்குறுதியும் மாநில அரசால் கொடுக்கப்படவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கில், பண்டிட்கள் தனியாக வாழ முடியாது. அவர்கள், மற்றவர்களுடன் இணைந்துதான் வாழ வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தபோது கூறினேன். இஸ்ரேல் நாட்டில் உள்ளது போன்ற தனித்த குடியிருப்புகளை, பண்டிட்களுக்காக இங்கு அமைக்க முடியாது. பண்டிட்கள், காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு திரும்புவதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்க அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இருப்பினும் இதை அவசர கதியில் செய்ய விரும்பவில்லை. பண்டிட் சமுதாயத்தினர் காஷ்மீருக்குத் திரும்பி அவர்களுக்கு உரிய இடங்களில் குடியமர வேண்டும். அதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் மாநில அரசு செய்யும் [/su_quote] என்றார்.

தமிழர்கள் கொலை குறித்து சிபிஐ விசாரணை தேவை: குஷ்பு

KUSHBOO புதுதில்லி: 20 தமிழர்கள் ஆந்திர மாநில போலீஸாரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதி வனப்பகுதியில் தமிழர்கள் ஆந்திர மாநில போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனையாக உள்ளது. இந்தப் படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தவர்களின் உடல்களில் காணப்படும் குண்டுக் காயங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. உடல்கள் கிடந்த இடத்தில் பழைய செம்மரக்கட்டைகள் போடப் பட்டிருந்தது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. எனவே இந்த சம்பவத்தில் உண்மையைக் கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துவதாகக் கூறினார்

பேனா திருட்டு?: ஆசிரியர் அடித்து 3ம் வகுப்பு மாணவன் மரணம்

student-beaten-up-head-masterபாராபங்கி: உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி அருகே தலைமை ஆசிரியர் பேனா திருடினான் என்று குற்றம் சாட்டி 3ம் வகுப்பு மாணவனை அடித்ததில் அந்த மாணவன் உயிரிழந்தான். உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் ராகிலாமவ் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியான சௌத்ரி த்வாரிகா ப்ரசாத் அகதமி பள்ளியில், தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் லலித் குமார் வெர்மா. இந்தப் பள்ளியின் 3-ம் வகுப்பில் 7 வயது சிறுவன் ஒருவன் மற்றும் சிவா ராவத் (10) என்ற 2 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்தனர். இந்நிலையில் அந்த வகுப்பில் உள்ள சக மாணவர்கள் தங்களது பேனா காணாமல் போனதாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். தொலைந்து போன பொருட்களைத் தேடிய போது அவை புதிதாகச் சேர்ந்த 2 மாணவர்களிடம் இருப்பது தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தலைமை ஆசிரியர் வெர்மா 2 மாணவர்களையும் கண்மூடித் தனமாக அடித்துள்ளார். மாணவனின் வயிற்றில் கடுமையாகத் தாக்கியுள்ளார். அழுது கொண்டே வீட்டுக்குச் சென்ற சிவா ராவத் நடந்ததை பெற்றோரிடம் கூறி, தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறியுள்ளான், பிறகு ரத்த வாந்தி எடுத்துள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இது குறித்த புகாரின் பேரில் வெர்மா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

ஜூன் முதல் பேரவைத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம்: ஜி.கே.வாசன்

சென்னை: தமாகா.,வின் பொதுக்குழு வரும் 24-ஆம் தேதி நடைபெற உள்ளது; ஜூன் முதல் பேரவைத் தொகுதி வாரியாக சுற்றுப் பயணம் செய்ய வுள்ளேன் என்று அதன் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். சென்னையில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:- தமாகா.,வின் பொதுக்குழு ஏப்.24-ஆம் தேதி, சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், மக்கள் நலன், கட்சி நலன் தொடர்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்களை நிறைவேற்ற உள்ளோம். அடுத்த மாதம் 2-வது வாரத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து மே மாதம் 3-ஆவது வாரத்தில் தொடங்கி, மே இறுதிக்குள் நகர, வட்டார, கிராமத் தலைவர்கள் நியமிக்கப்படுவர். மே இறுதியில் தமாகா நிர்வாகிகள் நியமனம் இறுதி வடிவம் பெறும். ஜூன் மாதம் முதல் சட்டப்பேரவை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் தொடங்க உள்ளேன். ஏப்.14 அன்று மதுரையில் தமாகா சார்பில் அம்பேத்கர் பிறந்த தின விழா பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அப்போது மக்கள் விடுதலைக் கட்சி தமாகாவில் இணைகிறது. தமிழகத்தில் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.5 ஆயிரம் செலுத்தி அரசின் அனுமதி பெற வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவர். எனவே இந்தச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை என்ன காரணத்துக்காக ஆதரித்தோம் என்று அதிமுக விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் ஜி.கே.வாசன்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இருந்தால் வெளியே சென்றிருப்பார்களா? விஜயகாந்த் வேதனை

தமிழகத்தில் இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. அதனால்தான் அவர்கள் ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்கிறார்கள் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். ஆந்திர மாநில துப்பாக்கிச் சூட்டில் அரூரை அடுத்த அரசநத்தம், கருக்கம்பட்டி, ஆலமரத்துவளவு கிராமங்களைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கவும், நிதியுதவி வழங்கவும் விஜயகாந்த் வியாழக்கிழமை இரவு அரூருக்குச் சென்றார். அரூரில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான பயணியர் விடுதிக்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய விஜயகாந்த் அந்த 7 குடும்பத்தினருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.3.50 லட்சம் நிதியுதவியை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வனப் பகுதியில் நுழையும் ஒன்றும் அறியாத ஆடு, மாடுகளைக் கொல்வதற்கும்கூட தடை உத்தரவு உள்ளது. ஆனால், அப்பாவி தமிழகத் தொழிலாளர்கள் 20 பேரை இரக்கமின்றி ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனைக் கண்டித்து தமிழர்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து சுமார் 80 லட்சம் பேர் வேலைக்காகக் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் தொழில் வாய்ப்புகள் இருந்தால் ஆந்திர மாநிலத்துக்கு மரம் வெட்டும் வேலைக்குத் தொழிலாளர்கள் சென்றிருக்க மாட்டார்கள்…. என்றார்.

ரூ. 1.50 லட்சம் லஞ்சம்: வணிக வரித் துறை உதவி ஆணையர் கைது

Excise-dept-Commercial1சென்னை: சென்னை அருகே ரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித் துறை உதவி ஆணையர் கைது செய்யப்பட்டார். சென்னை அருகே உள்ள நெடுங்குன்றத்தைச் சேர்ந்த கணேஷ் தோல் பொருள்கள் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். ஏற்றுமதி தொடர்பாக, பம்மலில் உள்ள வணிக வரித் துறை அலுவலகத்தில் ரூ. 60 லட்சம் செலுத்தியிருந்தார். இந்தப் பணத்தை திரும்பப் பெறுவதற்காக கணேஷ், வணிக வரித் துறை அலுவலகத்தில் அண்மையில் விண்ணப்பித்தார். அதற்கு வணிக வரித் துறை உதவி ஆணையர் ராஜாராம் (46) ரூ.1.50 லட்சம் லஞ்சமாகக் கேட்டுள்ளார். இது குறித்து கணேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புப் பிரிவில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், கணேஷிடம் ரூ.1.50 லட்சம் பணத்தில் வேதிப் பொருள்கள் தடவி, அதை லஞ்சமாக ராஜாராமிடம் கொடுக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீஸார் அனுப்பினர். அதன்படி கணேஷ் வியாழக்கிழமை அந்தப் பணத்தை ராஜாராமிடம் அவரது அலுவலத்தில் கொடுத்துள்ளார், அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ராஜாராமைக் கைது செய்தனர். அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

‘பெரியவாளின் யாத்திரையிலே நடந்த ..ஸ்வாரஸ்ய சம்பவங்கள்’

‘பெரியவாளின்யாத்திரையிலே நடந்த ..ஸ்வாரஸ்ய சம்பவங்கள்’ சொன்னவர்-ஸ்ரீ இ.எஸ்.வேதபுரி சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன் (ஒரு சிறு பதிவு) அப்போவெல்லாம் யாத்திரை போறபோது மூணு குதிரை போகும்.சவாரி குதிரை-ன்னு ஒண்ணு. இன்னொண்ணு – டங்கா குதிரை. ஊர் எல்லை வந்தவுடனே,அதிலே இருக்கிற ரெண்டு டங்காவையும் அடிப்பா.ஊர் ஜனங்களுக்குப் பெரியவா வந்துட்டான்னு தெரியணும் – என்கிறதுக்காக. மூணாவது- தபால் குதிரை. போஸ்டாபீஸ்லேர்ந்து, மடத்துத் தபால்களை வாங்கிண்டு வர- எழுதின தபால்களை போஸ்ட் பண்ண. கிராம எல்லை வந்ததும் கௌரிகாளை-ன்னு ஒரு வாத்யம் -ஊதுகிற வாத்யம் – வாசிப்பா- சத்தம் ரொம்ப தூரம் கேக்கும். 1944 காலகட்டத்திலே யாத்திரையிலே, இருபத்திரண்டு இரட்டை மாட்டுக் கூண்டு வண்டி போகும். முதல்லே, பூஜை வண்டி; கடைசியிலே கார்வார் வண்டி,குரு பாதுகை- ஒரு சின்ன வண்டியிலே வரும். அதுக்கு அரைவண்டி-ன்னு பேரு. பெரியவா பல்லக்கிலே இல்லேன்னா, அது கனக்கும்! பெத்த போகி குஞ்சுன்னு இருந்தான், “ஐயா ஏறிக்கணும்’னு கும்பிடுவான். “ஏண்டா?” “பல்லக்கு கனக்கிறது!….” “நான்தான் பல்லக்கிலே இல்லையே?” “ஐயா ஏறிண்டா, தோள்பட்டையிலே மெத்தை வச்ச மாதிரி இருக்கும்…” அவனுக்காகப் பெரியவா பல்லக்கிலே ஏறிப்பா10500301_739237412860258_6932925242102881853_n

பேருந்தில் பயணியிடம் ரூ. 4 லட்சம் திருட்டு: தப்பியோடிய 2 பேர் கைது

4 lack theftசென்னை: திருவள்ளூர் மாவட்டம். மணவாளண் நகரைச் சேர்ந்த சவுக்கு மர வியாபாரி வெங்கட்ராஜா. (64) இவர் புதன்கிழமை நேற்று மதியம் சுமார் 2.15 மணி அளவில் சவுக்குமரத் தோப்பு உரிமையாளர்களுக்கு கொடுப்பதற்காக மயிலாப்பூர் டாக்டர் நடேசன் தெருவில் உள்ள வி.எம்.சங்கரன் அண்ட் கம்பெனியிலிருந்து ரூ. 4 லட்சம் பெற்றுக் கொண்டு. அதை டவல் துணியில் சுற்றி தனது கைப்பையில் வைத்துக் கொண்டு. பேருந்து எண். 21 ல் ஏறி. மயிலாப்பூரிலிருந்து பாரிமுனையை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்து அண்ணாசாலையில் உள்ள ஸ்பென்சர் வணிக வளாகம் தாண்டி மின்வாரிய அலுவலகம் அருகில் வரும்போது. வெங்கட்ராஜா பணம் வைத்திருந்த கைப்பையின் எடை திடீரென குறைந்ததை அறிந்து. கைப்பையை எடுத்துப் பார்த்ததில். பையில் பணம் இல்லை என்பதையறிந்து. பணம் திருடுபோய்விட்டது என்று அலறியதால். பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் கூடியபோது புகார்தாரரின் அருகில் நின்று கொண்டும், புகார்தாரரிடம் நல்லமுறையில் பேசிக்கொண்டு அவரது கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருந்த இரு நபர்கள் மீது சந்தேகப்பட்டு. சோதனை செய்ய முயற்சி செய்தபோது. அந்த சந்தேக நபர்கள் இருவரும் ஒரு கட்டைப் பையுடன். சென்று கொண்டிருந்த பேருந்திலிருந்து இறங்கி ஓடினர், அப்போது வெங்கட்ராஜா மற்றும் பயணிகள் திருடன் என சத்தம் போட்டு. பேருந்தை நிறுத்தி அந்த நபர்களை துரத்தி சென்று கொண்டிருந்தபோது. அருகில் டாம்ஸ் ரோடு வழியாக மடக்கியபோது. அந் நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி தப்ப முயன்றனர், அச்சமயம் அருகில் பணியிலிருந்த சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலைய போலீசார் அந்த நபர்களை பொதுமக்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்து காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர், விசாரணையில். அவர்கள் கணேசன் மற்றும் விஸ்வநாதன் என்பதும். இருவரும் சேர்ந்து. பேருந்தில் பயணம் செய்யும்போது சவுக்கு வியாபாரி வெங்கட்ராஜா வைத்திருந்த கைப்பையிலிருந்து ரூ.4 லட்சம் பணத்தை திருடிக் கொண்டு பேருந்திலிருந்து தப்ப முயன்றபோது பிடிபட்டதை ஒப்புக் கொண்டனர். அதன் பேரில் கணேசன் மற்றும் விஸ்வநாதனை கைது செய்து. அவர்கள் திருடிய பணம் ரூ.4 லட்சம் மீட்கப்பட்டு. இருவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.