Home Blog Page 6350

சுதந்திர தினச் சிந்தனை

ind%2Bday - 2026

சுதந்திர தினத்தில்… ஒரு சிந்தனை!
வருடம் தவறாமல் எழும் சிந்தனை!!
சுதந்திர தினக் கொடியேற்றம்…
கொடியின் நிறங்கள்…
பசுமை-செழுமை-இஸ்லாமாம்…
வெண்மை-அமைதி-கிறித்துவமாம்…
காவி-தியாகம்-இந்துவாம்…
குண்டூசிகளால் குத்துப்பட்டும்
சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது
தேசியக் கொடி!
குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.
தேசியக் கொடியும்
அதனால்தானே விழாமல் தாங்கி நிற்கிறது?!
அதுதான் மேலே ஓங்கி உயரப் பறக்கிறது!
தியாகம் மட்டும் இல்லை என்றால்
தேசியம் எங்கே நிலைக்கப் போகிறது!
குத்துப் பட்டும் சிரிக்கும் காவியைப்போலே
வெட்டுப் பட்டும் வேதனைப் பட்டும்
தேசியத்தைத் தாங்கி நிற்பீர்…
இந்திய நாட்டின் இந்துக்களே!
தியாகிகளே!

சிறை மீட்க வாராயோ..?

cellrender04 - 2026

அன்று…!
தனிமைத் தவம் அன்று…!
ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை!
சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்…
தனிமையைத் தேடி ஏங்கியது மனம்.

தனிமை கிடைத்தபாடில்லை!
தவம் தொடங்கியபாடில்லை!

இறைவனை இருத்தி இயங்க வேண்டும்!
இறைஞ்சிக் கிடந்தே இருக்கத் தொடங்கினேன்!

ஆனாலும்…

தனிமை கிட்டிய பாடில்லை!
தவமும் முட்டிய பாடில்லை!

இன்று..!
செல்லரிக்கும் தனிமைதான்!
அமைதி தவழும் பூக்காடு

மனசு மரத்துவிட்ட மயானத் தோற்றம்!
தனிமை தவிர்க்க தவியாய்த் தவித்தேன்!
ஆரவாரத்தை நோக்கி அலைந்தது மனம்!

நன்றாய்த்தான் முகம் காட்டினாள்!
நாள்கள் சிலநூறு கடந்து விட்டது!
நாணமும் சிலநாளில் நகர்ந்து விட்டது!

அவள்…
நன்றாய்த்தான் முகம் காட்டினாள்!
நாணலாய் நானும் வளைந்து கொடுத்தேன்!

அன்பை போதிக்கும் ‘டீச்சர்’ என எண்ணி..!

ஆனாலும்…
ஒவ்வொரு நொடியும் ‘டார்ச்சர்’ தான்!
சிந்தையில் புகுந்து துவம்சம் செய்கிறாள்!

நான் செய்த குற்றம்…
இதயவாசல் கதவு திறந்து
இருத்தி வைத்தேன் உள்ளுக்குள்!

எனக்கான தண்டனை..!
தனிமைச் சிறையில் கைதியானேன்..!

நாட்கள்தான் நகர்கின்றன…

சிறைமீட்க வருவாளோ..
சிந்தையை மீட்டுத் தருவாளோ…?

ஆசாரக் கண்ணப்பர்

lifco - 2026
லிப்கோ என்ற புத்தக நிறுவனம் சென்னையில் உள்ளது. வைணவ, பக்தி வேதாந்த புத்தகங்கள் மட்டுமல்லாது, தமிழ் ஆங்கில அகராதி உள்ளிட்டவற்றையும் வெளியிட்டு பெருமை பெற்றது. வைஷ்ணவ, ஸ்மார்த்த சந்தியாவந்தனம், நித்யானுஷ்டாக்ரமம், நித்யானுசந்தானம், உபாகர்மம், குடும்ப ஜோதிடம் உள்ளிட்ட புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை. குடும்பத்தில், அல்லது நண்பர்கள் இல்லத்தில் ஏதாவது உபநயன முகூர்த்தம் இருந்தால், அவற்றில் நான் பெரும்பாலும் லிப்கோவில் சந்தியாவந்தனம் புத்தகத்துடனேயே கலந்து கொண்டு, உபநயனச் சிறுவனுக்கு புத்தகத்தை அளித்து ஆசிகூறுவது வழக்கம்.
இவ்வளவு ஆசார அனுஷ்டானாதிகளுடன் இருந்து புத்தகங்களைப் பதிப்பிதாலும், ஒரு வைணவ ஆசார குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், இந்த நிறுவனத்தின் நிறுவனர் சர்மாஜி தம் இரு கண்களையும் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவின் ‘கண் தான மையத்திற்கு’ தானம் செய்தார் என்பது நாற்பது வருடங்களுக்கு முந்தைய ஆச்சரியமான செய்தி.
அவருடைய வாழ்க்கைக் குறிப்பை ஒரு இடத்தில் படிக்க நேர்ந்தது.
***
ஸ்ரீ வரதாச்சாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா (லிப்கோ புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் நிறுவனர்)
ஸ்ரீ வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா 1908 -ஆம் வருடம் டிஸம்பர் மாதம் 7-ம் தேதியன்று பிறந்தார். உலகப் பெருந் தலைவர் ராஜாஜி தோன்றிய ‘திருமலை நல்லான் சக்ரவர்த்தி’ என்னும் பரம்பரையில் கிருஷ்ணஸ்வாமி சர்மாவும் பிறந்தார். பழைய தென் ஆர்காடு மாவட்டம் மேட்டுப்பாளையம் என்ற கிராமமே அவர் பிறந்த ஊர். கிருஷ்ணஸ்வாமி சர்மா தணிக்கைத் துறையில் ஜி.டி.ஏ.(ACA என்று இன்று அறியப்படும்) தேர்வில் வெற்றி பெற்று, பல கோயில்களின் கணக்குகளைத் தணிக்கையும் செய்திருக்கிறார்.
கிருஷ்ணஸ்வாமி சர்மா புத்தகங்களை வெளியிடும் ஒரு நிறுவனத்தைத் துவக்க விரும்பினார். அவர் சிறுவனாக இருந்தபோது கடலூர் ஸெயிண்ட் ஜோஸப் உயர்நிலைப் பள்ளி மாணவர் என்ற வகையில், அந்தப் பள்ளியின் முதல்வர் வெர்ஜர் பாதிரியாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அந்த பாதிரியாரிடம் புத்தக வெளியீட்டு நிறுவனம் குறித்து யோசனை கேட்டார். ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் புனித தெய்வமான ‘லிட்டில் ப்ளவர்’ என்னும் பெயரை பிரசுர நிறுவனத்திற்கு வைக்குமாறு அந்த பாதிரியார் யோசனை கூறினார்.
கிருஷ்ணஸ்வாமி சர்மா அந்த யோசனையை ஏற்றுக் கொண்டார். கிருஷ்ணஸ்வாமி சர்மா ‘லிட்டில் ப்ளவர்’ (www.lifcobooks.com) என்ற பெயரை ஏற்றதற்கு மற்றொரு காரணமும் உண்டு.
வைணவ நம்மாழ்வாருக்கு வகுளாபரணர் என்ற ஒரு பெயரும் உண்டு. வகுள புஷ்பம் சிறியதாகவும், அழகானதாகவும், வாசனை கொண்டதாகவும் விளங்கும். அந்தச் சிறிய புனிதமான பூவைக் கருத்தில் கொண்டும், ‘லிட்டில் ப்ளவர்’ என்ற பெயர் அமைந்தது.
இவ்வாறாக ‘தி லிட்டில் ப்ளவர் கம்பெனி’ 1929-ம் ஆண்டில் பிறந்தது. வடகலை, தென்கலை வைணவப் பிரிவினரை முதலில் ஒற்றுமைப்படுத்தி, பிறகு அத்வைதிகளையும், துவைதிகளையும் ஐக்கியப்படுத்த வேண்டும் என்பது அவர் நோக்கம். அதைச் செயல்படுத்த அவர் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்.
கிருஷ்ணஸ்வாமி சர்மா ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவரிடம் இடையறாத பக்தி கொண்டவர். சென்னை நங்கநல்லூரில் ஸ்ரீலக்ஷ்மீஹயக்ரீவருக்கு ஆலயம் எழுப்பப்பட்டதில் அவர் பிரதான பங்கு வகித்தார். இவ்வாறு பலப்பல சமயப் பணிகளை அவர் ஆற்றியுள்ளார்.
ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் பெரும் பணிகளைப் பாராட்டி மைசூர் ஸ்ரீ பரகால மட ஜீயர் ஸ்வாமிகள் 25-6-1977 அன்று ‘ஹயக்ரீவ சேவா ரத்னம்’ என்ற பட்டத்தை கிருஷ்ணஸ்வாமி சர்மாவுக்கு அளித்தார். ஸ்ரீ வி.கிருஷ்ணஸ்வாமி சர்மா 1979-ம் வருடம் ஜூலை மாதம் 22-ம் தேதியன்று ஆண்டவன் திருவடி அடைந்தார்.
கண்தானம் என்பது வெகுவாக பிரபலம் ஆகாத 1979-லேயே, ஒரு வைணவ ஆசார குடும்பத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், சர்மாஜி தம் இரு கண்களையும் ஸ்ரீ சங்கர நேத்ராலயாவின் ‘கண் தான மையத்திற்கு’ தானம் செய்தார்.
‘ஸ்ரீசடாரி சேவக’, ‘ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவா ரத்நம்’, ‘பக்தி பிரசாரண பிரவீண’ போன்ற பல பட்டங்களைப் பெற்ற ஸ்ரீ வரதாசாரி கிருஷ்ணஸ்வாமி சர்மா புத்தக வெளியீட்டாளர்களிடையே ஒரு வைரமாக என்றென்றும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்.
***
உண்மைதான். ஆசாரம், அனுஷ்டானம் என்று சொல்லி, பழைமைக் கருத்துகளோடு நவீனத்தை உள்ளே புக விடாமல் இருந்தால் நஷ்டம் சமூகத்துக்குத்தான் என்பதை உணர்த்தியவர். நம் நடைமுறைகள் கால மாற்றத்துக்குத் தக்க மாற்றிக்கொள்ளத் தக்கவை –  ஆனால், அடிப்படையை மாற்றாமல்! மறக்காமல்!!டும் ஒரு நிறுவனத்தைத் துவக்க விரும்பினார். அவர் சிறுவனாக இருந்தபோது கடலூர் ஸெயிண்ட் ஜோஸப் உயர்நிலைப் பள்ளி மாணவர் என்ற வகையில், அந்தப் பள்ளியின் முதல்வர் வெர்ஜர் பாதிரியாரிடம் மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். அந்த பாதிரியாரிடம் புத்தக வெளியீட்டு நிறுவனம் குறித்து யோசனை கேட்டார். ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களின் புனித தெய்வமான ‘லிட்டில் ப்ளவர்’ என்னும் பெயரை பிரசுர நிறுவனத்திற்கு வைக்குமாறு அந்த பாதிரியார் யோசனை கூறினார்.

காதலிக்க நேரமில்லை….

kadhalikkaneramillai - 2026

எவனோ முன்னாடியே எழுதி முடிச்சிட்டான்!
எனக்கு வேலை வைக்காமல்!
***
என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு…
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசிச் செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பது போலே
நினைத்து கொள்கிறேன்

கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்..
கனவில் மட்டும் காதல் செய்து
இரவைக் கொல்கிறேன்…

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ
உன் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ……

ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ…
காதல் தர
 நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா…
இலையைப் போல் என் இதயம் தவறி விழுதே!

பேய்ப் புராணம்

puliyur1 - 2026

puliyur2 - 2026

puliyur3 - 2026

puliyur4 - 2026

puliyur5 - 2026
 
வேப்ப மர உச்சியில் நின்று
பேயொன்னு ஆடுதுன்னு…
விளையாடப் போகும்போது சொல்லி வெப்பாங்க…
பட்டுக்கோட்டையார் அவ்வப்போது மனசுக்குள் பாட்டு படிச்சாலும்… ம்ஹும்… சரியா அந்த நேரத்துக்கு இதயத் துடிப்புதான் அதிகமாகுமே தவிர… புத்தி வேலை செய்யாது!
இது எனது சிறுவயது அனுபவம்…

அப்போது வயது 10,11 இருக்கலாம். தென்காசியில் குலசேகரநாதர் கோவில் அருகில் உள்ள விண்ணகரப் பெருமாள் கோயிலில்
புரட்டாசி சனிக்கிழமை பூஜை, கருடவாகன சேவை முடித்து, இரவு 12 மணி அளவில் சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவிலுள்ள கீழப்புலியூர் வீட்டுக்கு சைக்கிளில் தனியாக வருவேன். கையில் பெருமாள் பிரசாதமாக பூமாலைகள், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை சகிதம் சைக்கிளில் மாட்டிக் கொண்டு வருவேன். கீழப்புலியூர் ரயில் நிலையம் கடந்து, சாலை முனையில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு சற்று முன்னர் இருக்கும் இந்தச் சிறிய பாலம் கடக்கும்போது தான் கதிகலக்கும்…
காரணம், அடிக்கடி வெள்ளிக்கிழமைகளில் நாய், அல்லது கழுதை இந்தப் பாலத்தின் அடியில் அடிபட்டு, நாற்றம் எடுத்துக் கொண்டிருக்கும்.
அதற்கு ஒரு கதை கட்டிவிட்டார்கள் சிலர். இந்தப் பாலத்தின் அருகில் வயக்காட்டுக்குள் ஒரு சமாதி. அதிலிருந்து பேய் ஒன்று இப்படிச் செய்கிறது என்று!
கிராமத்துக் கதைகளுக்கு கட்டுப்பாடா இருக்கிறது..?!
கட்டற்ற கதைக் களஞ்சியங்களாயிற்றே!~
ஒரு சனிக்கிழமை… தெரு விளக்குகள் எதுவும் இல்லை. அப்போதே கிலி பிடித்துக் கொண்டது. துணைக்கு யாரும் இல்லை! தனியனாக சைக்கிளில் நள்ளிரவு 12.30க்கு மிதித்துக் கொண்டு வந்தேன்… பேய் இருக்குமோ..? அது எப்படி வரும்? எந்த உருவில் வரும்..? நம்மை என்ன செய்யும்?! எல்லாம் யோசித்து யோசித்து வந்தபோது… இரும்பையோ செருப்பையோ வைத்திருந்தால் பேய் ஒண்ணும் செய்யாது என்று ஒரு பரிகாரமும் சொல்லியிருக்கிறார்களே! அப்படி என்றால் ஒரு இரும்புக் கம்பியை கையில் வைத்துக் கொள்ளலாமா? எண்ண அலைகளுடன்… சைக்கிளை படுவேகமாக மிதித்து… துரத்துதுரத்து என்று துரத்தி… சரியாக இந்தச் சாலை திருப்பத்தில் வந்தபோது சைக்கிள் செயின் கழன்று கொள்ள… அவ்வளவுதான்.. இதயத் துடிப்பின் வேகத்தை எண்ணுவதற்கு எந்தக் கருவியும் உலகில் இல்லை!
சைக்கிளின் ஹாண்ட்பாரைப் பிடித்துக் கொண்டு, இந்த இரும்பைத் தொட்டுக் கொண்டிருந்தால்… பேய் ஒண்ணும் செய்யாதுல்ல… என்ற மன சமாதானம்.. இருந்தாலும் கேட்கவில்லை! சைக்கிளில் இருந்து இறங்கி… ஓட்டமும் நடையுமாக தள்ளிக்கொண்டு… பிள்ளையார் கோவிலைக் கடந்து.. ஒரு தெரு விளக்கு வெளிச்சத்தில் நின்றபோதுதான்.. இதயத்துடிப்பின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டது… ஆனாலும் பேயும் வரவில்லை, பிசாசும் வரவில்லை! பயம்தான் மிஞ்சியது!
அந்த ஒரு நாள் பயத்தின் உச்ச அனுபவம்… அதன் பின்னர் காணாமல் போனதுதான் ஆச்சரியம்! ஏனென்றால், இனிமேல் அதற்கு மேல் பயப்பட வேறு எதுவுமில்லை… அந்தப் பேயே ஒன்றும் இல்லாமல் போச்சே! அப்புறம் வேறு பேயென்ன பிசாசென்ன? என்ற எண்ணம்தான்!
பதின்ம வயது கடந்து 4 வருட மருந்து விற்பனைப் பிரதிநிதி (மெடிக்கல் ரெப்) பணியில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி, இராப் பகல் பாராமல் தெருக்களில் அர்த்த ராத்திரிகளில் சுற்றி… ம்ஹும்… பேயுமில்லை பயமுமில்லை!!!
இந்த ஊருக்கு எப்போதாவது செல்வதுண்டு. தென்காசியில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் அழகான இயற்கை வெளி வழி! வயல் சூழ்ந்த பகுதி! நீர் சலசலத்து ஓடும் சிற்றாற்றின் கிளைக் கால்வாய்கள் அழகு! மணிரத்தினத்தின் ரோஜா படத்திலும், புதுநெல்லு புதுநாத்து படத்திலும் இன்னும் சில திரைப்படங்களிலும் அள்ளிப் புகுந்துகொண்ட அழகு இடம்! என் இளமைக் கால ரசனை மனதில் வெளிப்பட்டுக் கிளம்பிய கவிதைகளின் கருவாய் அமைந்த அழகு பூமி!
புலிக்குட்டி விநாயகர் என்ற பெயரோடு அமைந்த பிள்ளையார்! அந்தத் தெருவில் இருந்த இந்த வீடு! எல்லாம் இப்போதும் அடிக்கடி கனவில் வருவதுண்டு. இனம்புரியாமல் நானும் எழுந்து அமர்ந்து அசை போடுவதுண்டு. சின்னஞ்சிறு மனதில் ஆழப் பதிந்த காட்சிகளாயிற்றே!
இன்று அந்த வீடு… பாழ் பட்டு பூட்டப்பட்டுக் கிடக்கிறது. 5 வீடுகளை அடுத்து நான் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்ட அந்த வீடு.. பாட்டு மாமி என்று நாங்கள் அன்போடு அழைக்கும் அந்த லட்சுமி மாமி இருந்த வீடு.. இப்போது மதிமுக கொடிக் கம்பத்துடன் கட்சி அலுவலகமாக இருக்கிறது…
தெருவின் கடைசியில் உள்ள தோட்டம்… பச்சைப் பசேல் என விளையும் கீரை! நாலணாவும் எட்டணாவும் எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குக் காலையில் சென்றால்… ஒரு அம்மா பிறையாய் வளைந்த கீரையறுப்பு அரிவாளால் அழகாகக் கொத்துக் கொத்தாக கீரையை லாகவமாகப் பிடித்து அறுத்துக் கொடுப்பார்.. அதன் சுவை… இன்றுவரை கிட்டவில்லை! ஏற்றம் இறைக்கும் அழகைக் கண்டு ரசித்திருக்கிறேன். பம்புசெட் புகுந்திராத தோட்டம். கிணற்றுக்கு உள்ளே அது புகுவதும், காளைகள் இரண்டு இழுப்பதும், நீரை மொண்டு கொண்டு வெளியே ஊற்றி அது மீண்டும் நீர் தேடித் தாழ்வதும்… எல்லாம் இப்போதும் நெஞ்சில் இழையோடுகிறது…
பழைமை நினைவுகளினூடே அமைந்த இந்த முறைப் பயணம்… நினைவில் நின்ற ஒன்றுதான்!

(5 photos)