நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு..! போட்டியில் முந்தும்… தமிழக பாஜக., தலைவர் யார்?

Published:

bjp leaders - 2026

தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டதை அடுத்து தமிழக பாரதிய ஜனதா தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் முதலிடத்தில் உள்ளனர். நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பெயர் நாளை அறிவிக்கப்பட்ட வாய்ப்புள்ளது.

தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன், தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக குடியரசுத் தலைவரின் உத்தரவு இன்று வெளியானது முதல், தமிழகத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தின் அடுத்த பாஜக., மாநிலத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ண, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் என பலர் இருந்தாலும், முதலிடத்தில் இருப்பவர் ஹெச்.ராஜா என்று தெரிகிறது.

தமிழக பாஜக., தலைவராக தமிழிசை சௌந்திரராஜன் 2 முறை பதவி வகித்து விட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது.

இந்நிலையில், தமிழக பாஜக., தலைவராக யார் நியமிக்கப்படுவார் என கட்சியில் தொண்டர்களிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் பெரும் எதிர்பார்ப்பும் விவாதங்களும் எழுந்துள்ளது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

அடுத்த மாநிலத் தலைவர் ஆக வருவதற்கு தேசியச் செயலராக இருக்கும் ஹெச்.ராஜாவுக்கு பெரும் வரவேற்பு காணப் படுகிறது. தமிழகத்தில் திமுக., அதிமுக., என திராவிடக் கட்சிகளுக்கு ஏற்ற சரியான அணுகுமுறையை ஹெச்.ராஜா பாரம்பரிய மிக்க பாஜக.,வின் தரப்பில் இருந்து வெளிப்படுத்த முடியும் என்று நம்புகின்றனர். ஹிந்து தர்ம போராளி என்று பேர் எடுத்தவர். பாஜக., அல்லாத திராவிட இயக்கத்தவர்களால் அதிகம் விமர்சிக்கப் படுபவர். சமூக வலைத்தளங்களில் அதிகம் இவர்களால் வறுபடுபவர். தமிழக அரசியலில் ஓய்வறியாமல் பல்வேறு கூட்டங்களுக்குச் சென்று பேசி, பாஜக.,வினர் உற்சாகம் குறையாமல் தக்க வைத்திருப்பவர் என இவருக்கு இருக்கும் பெயர், தலைமைப் பொறுப்புக்கு பரிசீலிக்கப் பட வாய்ப்பு ஏற்படுத்தக் கூடும்.

bjpcard - 2026

அதே நேரம் அதிமுக.,வில் இருந்து பாஜக.,வுக்கு வந்த நெல்லை மண்ணின் மைந்தர், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கும் ஆதரவு அதிகம் உள்ளது. தென் தமிழகத்தில் தேவர் சமுதாய மக்களின் ஆதரவைத் தேட இவரது வரவு சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்தப் போட்டியில், ஏற்கெனவே தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் என சில பழைய முகங்கள் இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்பு குறைவுதான். மேலும், பாஜக.,வின் பழகிய முகங்களான வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், முருகானந்தம் என சில பெயர்களும் கூறப்பட்டு வருகிறது.

அதே நேரம், மத்திய அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன், அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டு, தமிழக அரசியலுக்கு அனுப்பப் படுவார் என்று கூறப் படுகிறது. வரும் 2021 தேர்தலை எதிர்கொள்ள முதல்வர் வேட்பாளராக அவர் முன்னிறுத்தப் படக் கூடும் என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img