ஒரே ஒரு அறிக்கை! அதிமுக.,வை அலறவைத்த காங்கிரஸ்!

Published:

ruby manoharan rahul - 2026

நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொறுப்பாளர் அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடியால் ஆடித்தான் போனது அதிமுக வட்டாரம்.

காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து செயல்பட்டு வரும் கேபிகே செல்வராஜ், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் பட்டியலில் இடம்பெற்றது தான் அதற்கு காரணம்.

இடைத்தேர்தல் நேரத்தில் மீண்டும் செல்வராஜ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டாரோ என அதிர்ச்சிகு உள்ளாகிய அதிமுக வட்டாரம், அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தனர்.

பின்னர் தற்போது எங்கிருக்கிறார் என உளவுதுறை மூலம் விசாரணையில் இறங்கினர். அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார் . அந்த மொபைல் நம்பர் வட இந்தியாவில் ஒரு இடத்தில் இருப்பதற்கான தகவல் அறியப்பட்டதும் அவர் மீண்டும் தில்லிக்கு சென்று காங்கிரசில் இணைந்துவிட்டாரோ என கருதினார்.

ஆனால் அவர் செல்போன் மீண்டும் ஆன் ஆகியதும் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் அவர் மேகலாயாவில் அவர் சார்ந்த கிறித்தவ மதம் சம்மந்தப்பட்ட டயோசிசன் கூட்டத்திற்கு சென்ற தகவல் கிடைத்தது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அதன் பின்னர் தான் அதிமுக., வினர் நிம்மதியடைந்தனர். அதன் பின்தான் காங்கிரஸ் தரப்பிலும் பெயர் மாறிவிட்டதாக அறிவிப்பு வெளியானது .

IMG 20190930 WA0007 - 2026

Related articles

Recent articles

spot_img