புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருநாளூர் பொழிஞ்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது
அறந்தாங்கி அருகே அறந்தாங்கி- பட்டுக்கோட்டை சாலையில் விலக்கு ரோட்டில் திருநாளூர் கிராமம் உள்ளது
இந்த கிராமத்தின் முகப்பில் ஆசியத் துணைக் கண்டத்திலேயே மிக உயரமான சிலைகளில் ஒன்றாக 18 அடி உயரத்தில் கருப்பர் சுவாமியும், 54 அடி உயரத்தில் பொழிஞ்சி அம்மன் விஸ்வரூப சுவாமியும் உள்ளது.
இக்கோவிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் சிறப்பு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது
இந்த வழிபாட்டில் முழு நம்பிக்கையுடன் 5 வாரம் 7 வாரம் ஒன்பது வாரம் என்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்வோருக்கு நினைத்த காரியங்கள் நிறைவேறுகிறது
இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கருப்பர்சாமி பொழிஞ்சி அம்மனுக்கும் தீபாராதனை நடந்தது
இந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் அரசின் உத்தரவுப்படி சமூக இடைவெளி யோடு சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது
அபிஷேக அர்ச்சனை களை சாமிநாத பிள்ளை செய்தார் ஏற்பாடுகளை திருநாளூர் கிராமத்தினர் செய்தனர்.