ஸ்டாலினுக்கு எச்சரிக்கை! கிரண்பேடி!

kiran pedi - 2026

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட ஏனாமில் உள்ள ஒரு தீவை தனியாருக்கு விற்க முயல்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுதினம் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் – திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜான்குமாரும், என்.ஆர்.காங்கிரஸ் – அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் தொழிலதிபர் புவனேஸ்வரனும் போட்டியிடுகின்றனர்.

stalin 6 - 2026

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து நேற்று முன்தினம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காமராஜ் நகர் தொகுதிகுட்பட்ட நான்கு இடங்களில் திறந்த வேனிலிருந்தபடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை ஸ்டாலின் கடுமையாக சாடினார்.

stalin 1 1 - 2026

கிரண்பேடி புதுச்சேரிக்கு பச்சைத் துரோகம் செய்கிறார் என்றும், தமிழகத்தில் நேரடியாக பாஜக ஆட்சி நடைபெறுவதாகவும், புதுச்சேரியில் கிரண்பேடி மூலம் மறைமுக பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்றும் விமர்சித்தார். புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட ஏனாம் பிராந்தியத்தில் ஒரு தீவை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு கிரண்பேடி விற்க முயல்வதாகவும் தெரிவித்திருந்தார்.

kiran - 2026

இந்நிலையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில், தவறான கருத்துகளை வெளியிடும் முன் திமுக தலைவர் ஸ்டாலின் எதைப் பாதுகாக்கிறார் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வது அவசியம்.

பொய்யான தகவல்களைக் கூறுவது உங்களுக்குப் பொருந்தக்கூடியது அல்ல. ஏனாமில் அதிகாரிகளால் சுற்றுச்சூழல் மீறல்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் ஏனாமில் அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை இழப்பார்கள். ஏனாமில் சுற்றுலாத்துறை திட்டத்தில் தீவு எண் 5 ல் சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டுள்ளதுடன், ரூ.5 கோடியை சுற்றுலா என்ற பெயரிலும் இழந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories