தீர்க்க சுமங்கலி ஆசையால் மனைவி எடுத்த விபரீத முடிவு; அனாதையான இரு குழந்தைகள்.!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
lady susid 2 1 - 2026

கணவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அந்த பயத்தில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் ஐதராபாத் அருகே நடந்துள்ளது

ஐதராபாத் அருகே ரஹ்மத்நகர் என்ற பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரும் சிந்துஜா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்

இந்த நிலையில் கடந்த 12ம் தேதி சிவகுமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் இன்னும் சில காலம் மட்டுமே அவர் வாழ்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியதால் மனைவி சிந்துஜா கடும் அதிர்ச்சி அடைந்தார்

இதனை அடுத்து அவர் தன் தாயாரிடம் செல்போனில் இதுகுறித்து புலம்பியதாகவும் தாயார் அவருக்கு ஆறுதல் கூறியதோடு, உடனடியாக கிளம்பி நேரில் வருவதாக தாயார் கூறியதாகவும் தெரிகிறது

dead bady 7 - 2026

இந்த நிலையில் கணவரின் உடல்நிலை குறித்து ஆழ்ந்த கவலையில் இருந்த சிந்துஜா ஒரு கட்டத்தில் மனம் வெறுத்து வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

கணவனுக்கு முன்னால் தான் தீர்க்க சுமங்கலியாக செல்ல வேண்டும் என்றும் விதவையாக தான் வாழ விரும்பவில்லை என்று உறவினர்களிடம் அவர் கூறியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.