அதிர்ச்சி..! இந்த நோய் இருந்தா… குவைத்துக்குள் உங்களுக்கு ‘நோ எண்ட்ரி’தான்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
diabets - 2026

இந்த நோய் இருந்தால் குவைத்துக்குள் நோ என்ட்ரீ. புது தீர்மானம். குடியேறுவோரின் மருத்துவ சிகிச்சைக்கு அதிக செலவாகிறது என்று நினைக்கிறது குவைத் அரசு! இந்த சுமையை குறைப்பதற்காக புதியதொரு முடிவெடுத்துள்ளது.

டிபி, ஹெபடைடிஸ் பி அண்ட் சி, எச்ஐவி, எய்ட்ஸ் போன்ற நோய்கள் உள்ள குடியேறுவோர் குவைத்தில் வேலை பார்ப்பதற்கோ வசிப்பதற்கோ அருகதையற்றவர்கள் என்று முன்பு குவைத் அறிவித்தது.

இப்போது புதிதாக இந்த வரிசையில் டயாபடீஸ் நோயோடு கூட இன்னும் சில நோய்களையும் சேர்த்துள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்த புது விதியால் டயாபடீஸ் உள்ள குடியேறுவோர் குவைத்துக்குள் நுழைவதற்கு அரசு தடை விதித்துள்ளது என்று தெரிகிறது.

04 July04 UAE drag Iceberg - 2026

புது நோய்களின் பட்டியலை விரைவில் அமல்படுத்தப் போவதாக சுகாதாரத் துறை இயக்குனர் பஹாத் அல் கும்லாஸ் தெரிவித்தார்.

குடியேறுவோர் சிகிச்சை தொடர்பாக அப்போதைக்கப்போது தாம் இந்தப் பட்டியலை அப்டேட் செய்வதாக அவர் விளக்கினார். ஆனால் டயாபடீஸோடு கூட பட்டியலில் சேர்த்த பிற நோய்களின் பெயரை வெளியிட டாக்டர் பஹாத் மறுத்துவிட்டார்.

அதிகாரபூர்வமாக முடிவெடுத்த பின்னரே பிற நோய்களின் பெயர்களை அறிவிப்போம் என்றார். அனிமியா போன்ற குறைந்த செலவாகும் நோய்களை பட்டியலில் இருந்து நீக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.