இனி இப்படி சொல்லுங்க சிறார் வதை வீடியோ!வலியுறுத்தும் IWF

Published:

child - 2026

உலகம் முழுவதும் குழந்தைகளை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தும் வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகச் சமீபத்தில் அமெரிக்கப் புலனாய்வு அமைப்பு சுட்டிக் காட்டியது. சிறார் வதை வீடியோ பார்ப்பவர்களில் இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது என்றும் குறிப்பாகத் தமிழகத்தில்தான் அதிகம் பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து குழந்தைகளின் வீடியோக்கள், படங்கள் ஆகியவற்றைப் பார்த்தவர்கள், பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் ஆகியோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தமிழகக் காவல்துறைக்கு அனுப்பியுள்ளது.

child1 - 2026

அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாகப் பட்டியலில் இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் டி.ஜி.பி ரவி தெரிவித்துள்ளார்.

சிறார்கள் மீதான வதை தொடர்பான செய்திகள் மற்றும் விவாதங்களில் ‘சைல்டு போர்னோகிராபி’ என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த வார்த்தையில் தர்க்கரீதியான பிழை இருப்பதாகவும் அந்த வார்த்தையைப் பயன்படுத்தினால் சிலர் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடும். எனவே, அப்படியான வார்த்தைகளைத் தவிர்க்க வேண்டும் என்று Internet Watch Foundation (IWF) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

“குழந்தைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ‘சைல்டு போர்னோகிராபி’ என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் பிரசாரம் செய்து வருகிறோம். போர்னோகிராபி என்பது ஒருவரின் சம்மதத்தைக் குறிக்கிறது. ஆனால் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், அவர்களின் விருப்பத்தை மீறி நடப்பதால் அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும்” என்றும் IWF விளக்கமளித்துள்ளது.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!
child 2 - 2026

இந்த அமைப்பு, இணையத்தைக் கண்காணித்து அதில் பதிவிடப்படும் பாலியல் வன்கொடுமை தொடர்பான கருத்துகள், குழந்தைகள் மீது இணையத்தில் நடக்கும் துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறது.

`சைல்டு போர்னோகிராபி’ என்ற வார்த்தைக்கு இன்னும் தடை விதிக்கப்படவில்லை. அதனால், இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு ஊடகங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற செயல்களில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது என்ற விளக்கத்துடன், அதை மாற்றக்கூறி IWF அமைப்பு கோரிக்கை விடுத்துவருகிறது.

இந்த வார்த்தையைத் தவிர்த்து ‘சிறார் வதை வீடியோக்கள்’ என்று பயன்படுத்தினால் அதைப் பார்க்க நினைக்கும் நபர்களுக்குக் குழந்தைகளின் நிலை, இன்னும் ஆழமாக மனதில் பதியும் என்பதால் இனி ‘சிறார் வதை வீடியோக்கள்’ என்றே பயன்படுத்துவது நலம்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img