தர்பார்… கர்நாடகத்தில் திரையிட எதிர்ப்பு!

Published:

darbar - 2026

நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் படம், கர்நாடகாவில் திரையிடப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் ரஜிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

இந்நிலையில் கன்னட படங்களை தவிர மற்ற மொழிப் படங்களை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், ரஜினிகாந்தின் தர்பார் படத்தையும் அங்கு திரையிடக் கூடாது எனக் கூறி போராட்டம் நடத்தி உள்ளன.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படும் தர்பார் படம், கர்நாடகாவில் நேரடி தமிழ் படமாக வெளியாகிறது என்பது தான் இந்த அமைப்புகளின் எதிர்ப்புக்குக் காரணமாம்.

Related articles

Recent articles

spot_img