தென்காசி கோயில் கும்பாபிஷேகம்! கோபுர பணிக்கு ஆய்வு!

thenkasi 1 - 2026

தென்காசி காசி விசுவநாதர் கோயில் பதினாறாம் நூற்றாண்டில் பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. பழமையும் பெருமையும் வாய்ந்த கோயில் இடைப்பட்ட காலத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டு மொட்டை கோபுரமாக காட்சியளித்தது.

1990ல் ஒன்பது நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 2006ம் ஆண்டு சில திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், சென்னை ஐஐடி பேராசிரியர் சுதர்சன் தலைமையிலான குழுவினரும் நெல்லை அரசு பொறியியல் கல்லூரி ஸ்ட்ரக்சுரல் பிரிவு தலைமை பேராசிரியர் சித்தார்த்தன் தலைமையிலான குழுவினரும் நேற்று கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

thenkasi - 2026

கோயில் அமைந்துள்ள நிலப்பரப்பில் மண்ணின் தன்மை குறித்த பரிசோதனைக்காக மாதிரி சேகரிக்கும் பணியும் நடந்தது.

இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் கூறுகையில், ”காசி விஸ்வநாதர் கோயிலில் 2018 மே மாதம் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களது ஆய்வறிக்கையில் கோயிலின் கட்டிட அமைப்பில் சில மாற்றங்கள் குறித்து குறிப்பிட்டிருந்தனர். கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு 12 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.

அப்போது கோயில், ராஜகோபுரத்தில் பல திருப்பணிகள் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். அதற்கு ராஜகோபுரம் ஏற்றதாக உள்ளதா என்பதை ஆராய்ந்து தொழில்நுட்ப வல்லுனர்களின் அறிக்கையை பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.

ராஜகோபுரத்தின் அஸ்திவாரத்தில் சில பகுதிகளில் கீறல்கள் இருந்தது. இந்த கீறல்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கக் கூடியவையா என்பதை சோதிக்கும் வகையில் கீறல் உள்ள பகுதியில் கண்ணாடியை ஒட்டி சோதித்தனர்.

ஒரு மாதத்திற்கு பிறகு கண்ணாடியில் எந்தவித மாற்றமும் இல்லையெனில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்பதாகும். கீறல் ஏற்பட்டிருந்தால் ராஜகோபுரத்தில் உள்ள கீறல் விரிவடைகிறது என்று அர்த்தம். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories